ஆசை 2

ஆசை 2

ஆர் வத்ஸலா நேற்று என் தோழி இறந்து போனாள் படுக்கவில்லை தூக்கத்தில் போய்‌விட்டாள் அழுது ஓய்ந்து விட்டேன் சமாதானப் படுத்திக் கொண்டேன் படுக்காமல் போய் சேர்ந்தாள் புண்ணியவதி இல்லாவிட்டால் கஷ்டப்பட்டிருப்பாள் புருஷன் பாம்புக்கும் பழுதைக்கும் நடுவில் அவளுக்கு ஏகமாக புடவை நகை…
ஆசை 1

ஆசை 1

ஆர். வத்ஸலா என்னை உதறி விட்டு போய் விட்டாய் வெகு தூரம் அது உன் உரிமையென ஏற்றுக் கொண்டாலும் துடித்தோய ஓராண்டாயிற்று உதறிய காரணம் கூறப் படாததால் இதுவோ அல்ல அதுவோ எனக் குடைந்து குதறப்பட்ட மனப்புண் ஆற மேலும் ஆறு…
அச்சம்

அச்சம்

ஆர். வத்ஸலா நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை கங்கை போல் என் மேல் பொழிந்து என் மனதை குளிர்வித்து வழிந்தது உன் பாசம் எனக்கு உன் மேலும் உனக்கு என் மேலும் காதல் இல்லை என்று யாருக்கும் சொல்லித் தெரிவிக்க வேண்டிய…
இழை

இழை

சேயோன் நான் கண்ணாடியா? பிரதி பலிப்பா? பூசப்பட்டிருக்கும் ரசம் என் பின்னேயா? முன்னேயா? கண்ணில் தூக்கம் அழுத்தும்போது காணாமல் போய்விடுகிறேன். அந்த திரை கடல் நுரைகளால் ஆனது. அதுவும் காதல் செய்கிறது. கருமாதி நடத்துகிறது. முதன் முதல் எழுத்தும் அதன் பீய்ச்சல்களும்…
புள்ளி

புள்ளி

உங்களுக்கு தெரியுமா? ஆணைப்படைத்த  ஆணவ இறைவன் அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே அதிரடியாய் பதிலடியாய் பெண்ணே முதலில் வந்து வாசல் திறந்தாள். இவளின் தொப்பூள் கொடியே இன்னும்  அறுபடவில்லை அறுபட‌வில்லை அந்த இறைவனின்  தொப்புள் புள்ளியில்.

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

மேம்போக்குப் பிரசங்கிகளும் PAPER MACHE மலைகளும் பசியின் கொடுமையை வருடக்கணக்காக அனுபவித்தவன் முன் பத்து தட்டுகளில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டபோது அவனையுமறியாமல் அவன் நாவில் சுரந்த உமிழ்நீரை மட்டந்தட்டிப் பேசிப்பேசியே அந்த மாளிகையில் அன்றாடங்கள் காலாவதியாகிக்கொண்டிருந்தன மற்றவர்களைத் திட்டித்திட்டி மதிப்பழித்து வெறுப்புமிழ்ந்து விஷங்கக்கி…

நேர்மையான மௌனம்

ஆர் வத்ஸலா சிறு வயதில் உனக்கு என் மேல் கொஞ்சம் பாசம் இருக்கத் தான் செய்தது சத்தியமாக - எனக்கு உன்‌ மேலிருந்த அளவு இல்லையென்றாலும் வயது ஏற ஏற அது குறைந்ததை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன் அது உன்…

மௌனம் – 2 கவிதைகள்

ஆர் வத்ஸலா மௌனம் 1 மௌனத்தின் மொழி அறிந்தோர் அறிவார் சொல்லின் வலுவை மௌனம் 2 முன்பெல்லாம் நான் பேசுவேன் நீ மௌனிப்பாய் இதழோரப் புன்னகையால் என்னை வருடிக் கொண்டு இன்று நான் பேசுகிறேன் நீ மௌனிக்கிறாய் தொலைத்த புன்னகையால் என்னை…
வஞ்சனை சொல்வாரடீ, கிளியே

வஞ்சனை சொல்வாரடீ, கிளியே

வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான கால்கள் வாய்த்திருக்கவேண்டும். மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும் அதை மனதில்…
பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை

பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை

அவர் எனக்கு எதிரி அவரை எனக்குப் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் அவதூறு பேசுங்கள் அவருடைய அன்னை தந்தை பிறப்பு ஊர் படிப்பு உச்சரிப்பு எதை வேண்டுமானாலும் பகடி செய்யுங்கள் பழித்துக்கூறுங்கள் அவரை மட்டந்தட்ட மதிப்பழிக்க body-shaming செய்ய உங்களுக்குப்…