10/5/2011 தேர் ஓடிய தடம் …… உற்று உற்று பார்க்கிறோம் இந்த தடத்தை . ஏதோ ஒரு “ஆணை” ஆனை போல ஓடி ஓடி சர்க்கஸ் காட்டியது . கண்ணுக்கு தெரியாத ஒரு சாட்டை ” நான் ஆணையிட்டால்” பாணியில் அதை இயக்கியது . அந்த ஆனை வலம் வந்த போது சில வெங்கலக்கடைகள் கல கலத்தன . தேர்தல் காட்சிகளும் களை கட்டின . சாதாரணமாய் இருந்த அதிகாரிகள் ” ஜேம்ஸ் பாண்டு”கள் ஆகினார்கள். […]
வரும்போதே எரிச்சல் மண்டும். குட்டிப் பிசாசுகள் வாலில்லா குரங்குகளென திட்டிக் கொட்டுவாள் மனைவி. பிள்ளைகள்மீது பிரியம்தானெனினும் அட்டகாசம் பார்க்க அப்படித் தோன்றும். விடுமுறை கழிக்க உறவினர் வீடு சென்ற குழந்தைகள் மறந்து வெளியில் சென்று திரும்புகையில் மவுன வீடு கண்டு பதைக்கும் மனசு. செங்கல் சிமெண்டினால் ஆனது வீடெனினும் துடித்துக் கொண்டிருக்கிறது குழந்தைகள் சப்தங்களில் வீட்டின் உயிர்.
ஒரு மௌனத்தை எவ்வளவு நேரம் சுமப்பது உன் பொய்களையும் கனவுகளையும் போதையாய் புணர்ந்த வலிகளோடு … பெருத்த பாலைவனங்களில் உடைந்த பீரங்கிகள் சொல்லும் மௌனங்களை உரசிப் பார்த்ததுண்டா நீ ? முழுமையின் பிரவாகத்தில் ஒரு புள்ளியை தனக்குள் புதைத்து புளுங்கியதுண்டா நீ ? தனிமை குவிந்திருந்தும் மேலோட்டமாய் ஒரு இரைச்சலுக்குள் சலனப்பட்டதுண்டா நீ ? பாலைவனத்தின் கள்ளிச் செடியில் வடியும் , கடைசி சொட்டு மௌனத்தை புசித்து செல் ! அல்லது ஒரு ஆணின் செருக்கோடு […]
தேடுதல் எளிதாக இல்லை தொலைத்த நானும் தொலைந்து போன நீயும் தனித் தனியாக தேடும் பொழுது எட்டநின்று பார்த்தது காதல் …. களித்த காலம் கழிந்து போனதில் எச்ச விகுதிகளில் தொக்கி நிற்கிறது காலம் மற்றும் நான் தூர்ந்து போன கனவுகள் இன்று சக்கரை பூச்சுடன் தொலைந்து போன புன்னகை உதட்டளவில் பூக்கின்றது சிதறிப் போன கண்ணாடி கனவுகளில் யாருக்கும் காயம் இல்லை உடலளவில் ….
என்னை கடந்து செல்லும் பெண்ணவள் தோழிக்கூட்டமும் தேரோட்டம் தான்! யாரிந்த பெண்ணோ கதை பேசி நடக்கின்றாள்… என்னுடலில் கை தீண்டாமல் உயிர் கொன்று போகின்றாள்… முட்டும் சாலை வளைவில் முகம் திருப்பி என்னுயிர் தூக்கி எறிகின்றாள்! அப்பக்கம் வந்த பட்டாம்பூச்சி எனை பார்த்து கேட்கிறது… அலட்டிக்கொள்ளாத ஒரு அழகு.. மடிப்பு கலையாத கைக்குட்டை சிவப்பு சாயம் பூசிய சிரிப்பு… யார் அந்த தேவதை??? – ரசிகன்
ஒரு அதிர்வு உங்களுக்கு சொல்லப்படுகிறது . மிகவும் அருகில் இருப்பதாக மீண்டும் சொல்லப்படுகிறது. நீங்கள் அதை இன்னும் உணரவில்லை . சொல்லிய விதம் தவறாக இருக்கலாம் இல்லையெனில் அது அவ்வளவு முக்கியமில்லை என கருதுகிறிர்கள். மீண்டும் எச்சரிக்கையாக சொல்லப்படுகிறது அதிர்வின் தாக்கம் உங்களை ஆட்கொள்ள துடிக்கிறதை உணருகிறிர்கள். இப்பபொழுது என்ன செய்ய வேண்டுமென உங்களுக்கு போதிக்கப்பட்டது அதை எதிர் கொள்ளவே ஆயுத்தமாகுகிறாய்.. அதிர்வலை ஏன் என்னை தேர்வு செய்தது என்று இப்பொழுது குழப்பமில்லை . அதிர்வின் மற்றொரு […]
ஒசாமாவிற்கும் சரி, ஓபாமாவிற்கும் சரி, இந்த ஊமை சனங்களின் ஒலம் கேட்க வில்லை பாவம் அதிகார போதை தலைக்கு ஏறி இருக்கிறது. ஒளவை, புத்தர் ,தெராஸாவின் மொழி படித்தறிய முடியாத இந்த செவிடர்களுக்காவாவது போப்களும், காஜிக்களும், சுவாமிஜிகளும் பாவம், பிராத்தனை செய்யட்டும்.
ரோட்டோர பிளாட்பாரத்தில் ஒரு தொழுநோயாளனும் ஒரு தொழுநோயாளியும் அவர்களைத் தாண்டி கால்கள் போகிற போது கைகளை நீட்டி பிச்சை கேட்கிற நேரம் தவிர சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்.. பிச்சை விழும் காசில் போட்டியில்லை – எனில் தம்பதியனரோ ? ஓப்பந்தமின்றி சேர்ந்து உள்ளனரோ ? நோய் சந்தித்த பின்பா ? முன்பா ? பின் எனில் உன்னிடமிருந்து தொற்றியதென்ற குற்றபதிவு கண்களிலில்லை முன்பே எனில் ஒருவருக்கொருவர் ஆறுதலோ ? ஆறுதலோ ஆர்வமோ அகநானூறு படலங்களை தீர்மானிப்பது […]
கதவு திறந்து கடந்த கணத்தில் பதறி சாந்தமடைகின்றன கண்ணாடித்தொட்டிமீன்கள் நின்று விட்டது நனைந்து கொண்டிருந்த குளியலறை பாடல் ஒன்று சட்டென பிரிகின்றன முத்தங்ககொள்ளும் இரு ஜோடி உதடுகள் காண நேர்ந்துவிடுகிற அக்கணம். படபடக்கிறது மேலும் கடக்க முடியாத கணங்களாகி விடுகின்றன ரவி உதயன்
உடன் வரும் வழக்கமாய் வர்ணிக்கப்பட்டு அன்று கவனிக்காமல் விடப்பட்ட வெண்ணிலா.. கடந்து செல்லும் தீப்பெட்டி அடுக்கினாற்போன்ற கட்டிடங்கள்.. தன் குறிக்கோள் மறந்து தெரு நாய்களுக்கு அடைக்கலம் தந்திருந்த குப்பை சூழ் குப்பைத்தொட்டிகள்.. குச்சி மட்டைகளும் நெகிழி பந்துகளாலும் ஆன மட்டைப்பந்து போட்டிகள்.. சிறுநகர வீதி.. ஏதோ சொல்ல நினைத்து உன் கை சீண்டும் என் துப்பட்டா.. என் நாசி தீண்டும் ஏதேதோ செய்யும் என விளம்பரப்படுத்தப்படும் உன் வாசனை திரவியம்.. காற்றும் எதுவும் புக முடியும் […]