கட்டங்கள் சொற்கள் கோடுகள்

கட்டங்கள் வரைந்து சொற்களை உள்ளே இட்டேன் அவற்றுக்குள் தொடர்பு ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன் கட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தன சொற்கள் அடைபட்டுப்போய் பேச மறுத்தன கட்டங்களை நீக்கி விட்டு சொற்களையும் கோடுகளையும் இணைத்து விடலாம் என எண்ணினேன் கட்டி வைத்த சொற்களும், இணைக்க…

முதுகெலும்பா விவசாயம் ?

நல்லா செழித்து வளர்ந்துடுச்சு இந்தத் தலவாசல் வேப்ப மரம் .. போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு இது தான் போக்கிடம் எனக்கும் மேக்காலவளவு  குப்புசாமிக்கும் ... மோட்டுவளைய பாத்துகிட்டு எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ? ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம்…

சின்னாண்டியின் மரணம்

(இது வெறும் கற்பனை மட்டுமே. இருந்தோர், இறந்தோர் அல்லது இறக்கவிருப்போர் எவரையும் குறிப்பிடுவது அல்ல) எல்லோரையும் போலவே ஒருநாள் சின்னாண்டியும் செத்துப் போனார்.   அல்லோகலப்பட்டது புழுதிக்காடு.   செத்த சின்னாண்டி, சிலபேருக்குத் தலைவர் பலபேருக்குப் பகைவர். பெயருக்கு நேரெதிராக பெரும்…

காலாதி காலங்களாய்

பிரக்ஞையற்று திரிந்தலைந்த  கிரெளஞ்சப் பட்சியொன்று மனவெளியில் தரையிறங்கியது மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு தீரா வேட்கையுடன் உயிர்த்தலின் ஆதாரத்தை அலைகிழிக்கின்றது கூர்ந்த நகங்களால்.... காலாதி காலங்களாய் தொடர்ந்த மெளனம் களைந்தெறிந்து ஊழியின் உருவமாய் மெய் சிவந்து நின்றேன் எதிர்கொள்ளவியலாது சிறகின் தூவிகள் பொசுங்க…

5 குறுங்கவிதைகள்

ஒளியூட்டப் போகிறோமா எரியூட்டப் போகிறோமா என அறிவதில்லை பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்.. ************************************************** புழுவைப் போல உள்நுழைந்து பத்து மாத உறக்கம்.. கொடி வழி உணவு கூட்டுக்குள்... இறக்கைகளைப் போல கை கால்கள் முளைத்ததும் உந்திப் பறந்தது  கூடை விட்டு .. குழந்தையாய்..…

சாகச விரல்கள்

விரல்களின் வேகத்தில் சுண்டலின் விசையில் நம்பிக்கைகள் கைகள் சுழற்றும் சோளிகளின் சாகசங்களை நம்பி. முழங்கையை மடக்கி விரித்து குலுக்கிப் போடும் சோளியில் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடப்பதாகிறது கனவு வாழ்வு. மீண்டும் மீண்டும் உருளும் சோளிக்குள் முழித்த பார்வைகளின் முணுமுணுக்கும் வாக்குகள் முத்தமிடும்…
நாதம்

நாதம்

சருகாகி உதிரும் இலைக்கு மெத்தை விரித்தது பூமி காற்று அதை கைப்பிடித்து அழைத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்தது கிளைகளெல்லாம் இசைக் காருவியாகி வேர்களின் பாடலை ஓயாமல் பாடியது பூக்களின் நறுமணத்தை முகர்ந்த வண்டுகள் தேன் குடித்து ரீங்காரமிட்டுச் சென்றன மொட்டுகள்…

சாம்பல்வெளிப் பறவைகள்

கண்தொட்டவரையில் நீண்டுகிடக்கும் இந்த இரவின் பாலத்தில் நத்தையின் முதுகேறி ஊர்கின்றன நிமிடங்கள் தண்டவாளங்களை வெறிக்கிறது பூமிதின்ற நிலவு கிளையசைவிற்கு எந்த வாகனமும் நிற்கவில்லை ஒலியோடு ஒளிவெள்ளமென சகலமும் வழிந்தோடுகிறது ஒரு பெரும்பள்ளத்தில் சாம்பல் சிறகுகள் இறைந்து கிடக்கும் இச்சிறுவெளியின் நிறமென்று அழியும்…

இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்

என்னை தரதரவென இழுத்துச் சென்று கடலுக்குள் மூழ்கடித்த இஸ்ராயீல் கரைதிரும்புவதற்குள் ஒரு கெண்டைமீன்குஞ்சாய் நீந்திக் கொண்டிருந்தேன். கடலுக்குள் ஏதுமறியா உலகம் விரிந்திருந்தது. செய்வதறியாது திகைப்புற்ற இஸ்ராயீல் திமிங்கலத்தின் மீதேறி துரத்தினார். எனது துரித நீந்துதலை கண்டறியமுடியாத துக்கம் அவருக்கிருந்தது. கடலை வற்றச்…

ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-

ஷாப்பிங் மால்களில் முயல்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் கடந்த போது அவன் கண்கள் அவைபோல் துள்ளின. கூட வரும் மனைவி பார்க்கும்போது கீழ்விடுவதும் பின் ஏந்திக்கொள்வதுமாக நீண்டன அவன் கண்கள் குறுகலான கடையில் இருந்த காலண்டர் சாமியின் ஆயுதம் அவனை மிரட்டியது . கண்களை…