கீதங்கள் இசைத்து கிரிக்கட் விளையாடி வெள்ளித் திரையில் சின்னத் திரையில் மேடைகளில் நடித்து கொலை செய்து கொள்ளையடித்து தாதாவாகி மிரட்டி அதுவும் முடியாதெனில் குறைந்த பட்சம் பாலியல் வன்முறையொன்றையாவது பிரயோகித்து பெயரை உருவாக்கிக் கொண்டு உருவத்தை அலங்கரித்து உடலைச் சமைத்து அப் பெயரை விற்று தேர்தலில் வென்று அமைச்சரவையில் ஆசனமொன்றையும் பெற்றுக் கொள்ளும் சோறுண்ணும் எருமைகள் அநேகமுள்ள நாட்டில் புல்லுண்ணும் எருமைகள் வாழ்க !!! – பியன்காரகே பந்துல ஜயவீர (சிங்கள மொழியில்) தமிழில் – […]
இன்று வியாழன்… நேற்றுதான் சென்றது வெள்ளிக் கிழமை, எத்தனை வேகமாய் கடக்கிறது இந்தியனின் இளமை அமீரகத்தில்?! எத்தனை காலமல்ல குடும்ப வாழ்க்கை எத்தனை தடவை என்றாகிப்போனதே! ஊரிலிருந்து வந்த நண்பன் உன் நினைவுகள் மொய்க்கும் பெட்டியொன்று தந்தான். அட்டைப்பெட்டியின் மேல் எழுதியிருந்த என் பெயர் சற்றே அழிந்தது நீ அட்டைப் பெட்டி ஒட்டிக் கட்டுகையில் பட்டுத் தெறித்த உன் நெற்றி பொட்டின் வியர்வையா சொட்டுக் கண்ணீர் பட்டா? […]
நான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும் குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய் ஆனாலும் உன் முன்னால் உனைச் சூழச் சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன் உனைக் காண்பவர்க்கெலாம் நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க் கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும் எனக்குள்ளிருக்கும் உன் மழைக்கால நினைவுகளைத்தான் நீ மீட்கிறாயென எனை உணரவைக்கிறது எனது தூய்மை மட்டும் […]
* முன்னோர்களின் மண்டையோட்டுக்களை மிகக் கவனமுடன் பார்த்துக்கொண்டொரு முகபாவத்தை வெளிப்படையாகப் பத்திரப்பத்துகிறேன் அவர்கள் எல்லோரும் ஒரே முகபாவம் கொண்டிருந்தனர் அடிக்கடி நானே என்னிடம் சொல்லிக்கொள்வதுண்டு அவர்களை விட நான் மிகவும் வித்யாசமானவன் என்று அவர்களது முகபாவமொன்று என் சதைக்குப் பின்னால் கொடிய நகைப்புடன் ஒளிந்திருப்பதை அறியாமல் குருதிச் சுழியிலென் மண்டையோடுகள் ஓய்வற்றுச் சுழல்கின்றன * *** கலாசுரன்
சூர்யா சாலையில் சிங்கமாய் சீறி இயந்திரக் குதிரைகளில் பறந்தவர்களை காவல் துறை கேமிராக் கண்களில் பார்த்து கைகளில் விலங்கை மாட்டியது. சிறையின் கம்பிகளுக்குள் இருந்து கண்ணயர்ந்தவர்களின் கனவில் ஒரு தேவதை வந்து சொன்னாள்.. போட்டிகளுக்கென்றே களங்கள் இருக்கின்றன.. திறன்களையெல்லாம் அங்கே கொட்டினால் கோப்பைகளெல்லாம் வீட்டில் குவியுமே என்று.
முள்ளால் தைத்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்தோடிவிட்ட இரண்டு வருடங்கள் கனவாகவே இது இருந்திருக்கக் கூடாதா என்றவொரு ஏக்கம் இன்றும் என் மனதில் தவியாய் தவிக்கிறது எம் உறவுகளின் சாம்பல் மேடுகளில் பட்டு வரும் காற்றை சுவாசிக்கும் கொடுமை அழுகுரல்கள் நிறைந்த அந்த அவல ஓசையின் எதிரொலிகளை கேட்கின்ற சுமைகள் அரச பயங்கரவாதம் எம்மவர் சதை தின்று நரபலி எடுத்த நினைவுகள் பசியால் துடிதுடித்தே இறந்து போன சொந்தங்கள் உடல் உபாதையினால் உயிர்விட்ட எம் உறவுகள் நோயின் உச்சத்தில் […]
இறுதி யுத்தத்தின் இறுதி போராளியை விழுங்கிய வாளில் இன்னமும் ரத்தக் கறை காய்ந்திருக்கவில்லை. வெந்தழல் மேகங்களில் நீதித்தேவதைகளைக் கண்டதாக வாக்குமூலம் அளித்தவர்கள் கொலைகளனிற்கு அனுப்பப் படுகிறார்கள். பிசாசெழுதும் வரலாற்றினில் நம்பிக்கையின் பெயரால் சிந்தப்படும் கண்ணீர்த் துளிகளுக்கு கோமாளிகளின் முகமூடி அணிவிக்கப் படுகிறது. ஓராயிரம் நூற்றாண்டுகளாக மண்ணுக்கடியில் புதையுண்டிருந்த புரட்சியின் சொல்லை விடுவித்த கவிஞன், தானெழுதிய கவிதைகளை கிழித்தெறிகிறான். கோப்பைகளில் நிரம்பிய அழுகுரல்களை பருகும் அரக்கனுக்கு தெரியவேயில்லை தான் சுவைப்பது தீரா மௌனத்தினையே […]
மலர் கண்காட்சியில் சிவப்பு நிறத்தில் சின்னதாய் வெள்ளை நிறத்தில் வெகுளியாய் மஞ்சள் நிறத்தில் மகிழ்வாய் … அத்தனையும் அழகு !! எதை பார்ப்ப்து எதை விடுவதென்ற தவிப்பை தவிர்க்க தெரியாமல் லயிக்க நேரமும் இல்லாமல் … கால்பாத வளைகுழியில் பிடிக்க நினைத்தும் கடல் அலை இழுக்க … உருளை உருளையாக நகரும் மணல் துகல்கள் வியப்பான கிச்சுகிச்சு … பிடிக்க நினைத்த தருணங்கள் உருளையாக கிச்சுகிச்சு மூட்டாமல் விசுக் […]
அர்த்தமிழந்த வார்த்தைகள் சமைக்கும் தருக்கச் சகதியுள் அமிழ்ந்தென்ன லாபம் துடிதுடிக்க காலத்தைக் கொல்வதைத் தவிர கால்களையும் கைகளையும் குரல் வலையையும் சுற்றியிறுக்கும் மொழியின் வேர்களும் கொடிகளும் மண்டிய வனம் சொற்களுக்கு அனுமதியில்லா நகரமொன்று வேண்டும் வன வாசம் துறந்து நகர் புக. – வருணன்
உலக உருண்டையின் ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் அழகிப்போட்டி.. மட்டைப்பந்து போட்டியில் நெட்டை வீரர் ஒருவரின் ரெட்டை சதம்.. அரைகுறை ஆடை நடிகையின் ரகசியதிருமணமும் தொடரும் விவாகரத்தும்.. தெற்கில் எங்கோ ஒரு வாய்க்கால் தகராறில் நிகழ்ந்த குரூரக் கொலை.. நம்ப வைக்க முயற்சிக்கும் தேர்தல் அறிக்கைகளும் அது குறித்த ஆட்சி மாற்றங்களும்.. எத்தனை முறை வாய் பிளந்து பார்த்தாலும் திருந்தாத மக்களும் பயன்படுத்திக்கொள்ளும் உண்மை மகான்களும்.. என எதுவும் கிடைக்காத அன்று மீண்டும் தூசி […]