21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5

This entry is part 38 of 46 in the series 26 ஜூன் 2011

(கட்டுரை –5) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் […]

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4

This entry is part 41 of 46 in the series 19 ஜூன் 2011

(ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.” நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் […]

விக்கிப்பீடியா – 3

This entry is part 26 of 46 in the series 19 ஜூன் 2011

“ஆமாம் குணா.. நீங்கள் எங்கே பிறந்தவர்?” “நான் புதுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன்.  நீங்கள்..” “நான் சின்னாளப்பட்டி என்ற ஊரில் பிறந்தவன்” “அது என்ன சின்ன கிராமமா?” “அது திண்டுக்கல்லுக்கு அருகே இருக்கும் ஊராட்சி” “அப்படியா.. நான் சின்னாளப்பட்டி சேலை பற்றி மட்டும் கேள்விப்பட்டதுண்டு.  ஆனால் அதற்கு மேல் தெரியாது..” “உங்களுக்கு அது பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவில் தேடுங்கள்.  அதில் இருக்கிறது.” “அப்படியா.. அப்படியென்றால் எங்கள் ஊர் பற்றியத் தகவல்களும் அதில் […]

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3

This entry is part 32 of 33 in the series 12 ஜூன் 2011

(மே மாதம் 31, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” நிக்கோலை லாவெராவ் […]

ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்கும் செர்நோபில் வெடி விபத்துக்கும் உள்ள வேறுபாடுகள் -2

  (மே மாதம் 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “தோழர்களே! செர்நோபில் அணுமின் நிலையத்தில் மாபெரும் சீர்கேடான விபத்து நேர்ந்துள்ள தென்று நீங்கள் யாவரும் அறிவீர்!  சோவியத் மக்கள் பேரின்னல் உற்றதுடன், அவ்விபத்து அகில உலக நாட்டினரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி விட்டது!  முதன்முதலாகக் கட்டுக்கடங்காது மீறி எழுந்த அணுசக்தியின் பேராற்றலால் பாதிக்கப்பட்டு நாம் பேரளவு சிரமத்துடன் போராடி வருகிறோம்!” மிக்கேயில் கார்பச்சாவ், முன்னாள் சோவியத் அதிபர் [1986 ஏப்ரல் உரை] “செர்நோபிலில் மெய்யாக […]

விக்கிப்பீடியா – 2

This entry is part 39 of 46 in the series 5 ஜூன் 2011

சித்ரா சிவகுமார், ஹாங்காங் “என்ன ராணி.. மும்முரமாக அகராதியும் கையுமாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?” “எனக்கு ஒரு ஆங்கில ஆவணத்தை மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல் அகராதியில் தேடிக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “ஏன் கணினியைப் பயன்படுத்தவில்லையா?” “இல்லை கோபி.. நான் இது வரை கணினி அகராதியைப் பயன்படுத்தியவதில்லை.” “ராணி.. கணினியைப் பயன்படுத்தினால் பக்கங்களைத் திருப்ப வேண்டியிருக்காது.  நேரமும் மிச்சமாகும்” “கோபி.. எனக்கு எப்படிச் செய்வதென்று சொல்லிக் கொடு” “விக்சனரி […]

ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011

This entry is part 22 of 43 in the series 29 மே 2011

“அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26] வெடித்ததும் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, நாகரீக முன்னேற்றத்தின் பெயரால் எழுந்துள்ள நிறுவகங்களின் கோர விளவுகளை மனித இனம் இன்னமும் புரியாமலே இருப்பதை நினைவூட்டுகின்றன.”   மிக்கேயில் கார்பசாவ் [Mikhail Gorbachev (Aug 18, 1986)]   அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் […]

ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து

This entry is part 33 of 42 in the series 22 மே 2011

முன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக் கதிரடி பெற்ற மூன்று பணியாளிகளில் இருவர் சில மாதங்களில் உயிரிழந்தனர்! விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்கிறோம், அதனால் என்ன […]

ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)

This entry is part 8 of 48 in the series 15 மே 2011

‘மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும் ‘   தாமஸ் ஹார்டி [Thomas Hardy] முன்னுரை: ஜப்பானின் அணுத்துறை விபத்துகளில் இரண்டாவதாகக் கருதப்படும், 1995 டிசம்பர் 8 ஆம் தேதி ஏற்பட்ட இந்த நிகழ்ச்சி, ஒரு முன்னோடி வேகப் பெருக்கி அணுமின் உலையில் நேர்ந்தது! அணு உலை 40% ஆற்றலில் இயங்கும் போது இரண்டாம் கட்ட […]