சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதற்கெல்லாம் பின்னால் ஒரு ஒருவருட அளவில், எப்போதெல்லாம் ரோசி என்னுடன் வெளியே வந்தாளோ, என் அறைவரை வந்து போவதை வழக்கமாக்கிக்கொண்டாள். சில நேரம் ஒருமணி தங்குவாள். சில சமயம் விடியல் வரை, அதாவது வேலைக்காரர்கள் முறைவாசல் என்று வாசலை சுத்தம்செய்கிற வேலை ஆரம்பிக்கும் வரை. கதகதப்பான காலைகளின் அழகான நினைவுகள் என்னுள் இன்னும் இருக்கவே செய்கின்றன. இரவின் அலுத்து ஓய்ந்த காற்றின் ஆயாசம் மெல்ல மாறி, இதமான புத்துணர்ச்சியைத் தருகிறாப் […]
அந்த நீண்ட உறாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. எதிர் வரிசையில் முதல் மேஜையில் இவரைப் பார்ப்பதுபோல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இவன். அப்பளம்…அப்பளம்…இன்னும் எனக்குப் போடலை…போடலை.. -கத்தினார் அந்தப் பெரியவர். அய்யாவுக்கு இன்னொரு அப்பளம் கொண்டாப்பா.. -இவன் இலையில் அப்பளம் தீர்ந்துவிட்டது கண்டு எதிரில் அமர்ந்திருந்தவர் உபசரித்தார். எனக்கு வேண்டாம்..முதல்ல அந்தப் பெரியவருக்குப் போடுங்க… என்றான் இவன். லேசாக அவரின் பார்வை இவனின் பக்கம் […]
நடராஜருக்குச்சேரவேண்டிய நிலமான்யங்களில் பெரும்பகுதியை இவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இனி நம்முடைய குடும்பங்களில் நடக்கும் பால்ய விவாகத்திற்கும் வரி செலுத்தவேண்டுமாம் 13 தீட்சதர் வீடெங்கும் இருட்டுடன், தீயில் உருகிய வெண்ணெயின் வாடை. காற்று வீசுகிறபோதெல்லாம் வாசல் மரங்கள் சோர்ந்து அசைந்தன. தெருத் திண்ணைகளிரண்டிலும் பொது தீட்சதர்கள் உத்தரீயத்தை உடலில் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தனர். சிலர் சுவரிலும், சிலர் தூண்களிலுமாக சாய்ந்திருந்தனர். சிலர் சம்மணம் போட்டும், வேறு சிலர் முழங்கால்களை தரையிற் பக்கவாட்டில் மடித்துமிருந்தனர். அர்த்தஜாம பூஜையிலிருக்கும் தீட்சதர்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் […]
றோமனொஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். எனக்கு அடுத்த தெருவில் வசிக்கின்றான். தினமும் காலை எட்டு ஒன்பது மணிக்குள், குறைந்தது மூன்று தடவையாவது எனது வீட்டைக் கடந்து ஓடுவான். கடந்த சில தினங்களாக அவனுடன் ஒரு நாயும் கூடவே ஓடுகின்றது. ஒரு கையில் ‘ஷொப்பிங் பாக்’கும் மறு கையில் கயிற்றில் நாயுமாக பாய்ந்து செல்லும் அவனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில […]
வெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருந்தது.கடைக்கு நேரே மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலின் மைக் செட் அலறலில் கடைக்கு வந்தவர்கள் கத்தி கத்தி சாமான்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.ஜகுபர் அலியும் அவரது தம்பி கனியும் பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.சரக்கு கொண்டுவந்த கலைமான் புகையிலைக் காரரும் குளிர்பான ஏஜெண்டும் கம்புக் கூட்டில் பையும் காதில் சொருகிய பேனாவுமாக காத்திருந்தனர். ரெண்டு கிலோ அரிசி,பாலிதீன் […]
” பிம்மாலையில பனி ஜாஸ்தி விழும். தலையில எதையாவது கட்டிக்கோடா கடங்காரா ” என்று பாட்டி அக்கறை கலந்து திட்டும் காலம் தையும் மாசியும். பாட்டி ” பிம்மாலை ” என்பதை இரவைக் குறிப்பிடும்போதும் சொல்வாள். சிற்றஞ்சிறுகாலையைக் குறித்தும் சொல்வாள். நாம்தான் அவள் வார்த்தையின் காலமயக்கப் பிடியிலிருந்து வெளிவந்து அதைத் தரம் பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் கட்டாயம் சளி பிடித்துவிடும் எனக்கு. காஷ்மீர் பூமி பனிக்கட்டிகளால் உறைந்திருந்திருப்பது போல என் நெஞ்சு முழுக்கப் பாறை […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அடுத்த ஒருவார காலம் நான் ரோசியுடன் வெளியே போகவில்லை. அவள் ஓர் இரவு ஹேவர்ஷாம் வரை போய் அம்மாவைப் பார்த்து வரலாம் என்று கிளம்பினாள். எனக்கு லண்டனில் நிறைய வேலைகள் இருந்தன. நாம் ஹேமார்க்கெட் (புல் சந்தைப் பிரதேசம்) தியேட்டருக்குப் போய்வரலாமா என்று என்னிடம் அவள் கேட்டாள். அந்த நாடகம் படுபோடு போட்டுக் கொண்டிருந்தது. ஓசி டிக்கெட்டுகள் கிடையாது. ஆக நாங்கள் தரை டிக்கெட் எடுத்தோம். கொஞ்சம் புலால், […]
33. கல்வியின் பயன் ஒரு மலையின் பக்கத்தில் ஒரு பெண்கிளி முட்டைகள் இட்டது. அவற்றிலிருந்து இரண்டு கிளிகள் வெளிவந்தன. கிளி இரை தேடி வெளியே சென்றிருக்கும்போது, அந்தக் கிளிக் குஞ்சுகளை ஒரு வேடன் எடுத்துச் சென்றுவிட்டான். அவற்றில் ஒன்று அதிர்ஷ்டவசமாக எப்படியோ தப்பித்துக்கொண்டது. மற்றதைக் கூண்டில் அடைத்து, அவன் பேசக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான். எங்கெங்கோ சுற்றித் திரிந்து வந்த ஒரு ரிஷி மற்றொரு கிளியைப் பார்த்துவிட்டு அதைப் பிடித்து ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் வளர்த்தார். காலம் சென்றது. […]
கூரை எரவானத்தில் ஒரு கையும் இடுப்பிலொரு கையுமாக கமறி கமறி இருமியபடி நின்றுகொண்டிருந்த மருமகன் வேண்டா வெறுப்பாக பதிலிறுத்தார் 12. நள்ளிரவு பூசை முடிந்ததன் அடையாளமாக கோவில் பிரகாரத்திலிருந்து வெளியேறிய இரண்டொருவர்களைதவிர்த்து வீதியில் மனிதர் நடமாட்டமில்லை. தில்லை நகரம் உறங்கத் தம்மை தயார் படுத்திக்கொண்டிருந்தது. ஜாதிமல்லி பூக்கள் இருளை அள்ளி முகத்தை துடைத்துக்கொண்டிருந்தன. தெற்கு திக்கிலிருந்து வீசிய காற்றினால் அதன் மணம் தெருக்கோடிவரை வீசியது. நகரின் உப்பரிகைகளும், கோபுரங்களும், வீட்டுக் கூரைகளும், மரங்களின் மேற்பகுதிகளும் பனியுடன் கலந்த […]
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 7 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நான்தான் அரசாங்கம். பீரங்கித் தொழிற்சாலையின் பிதா ! இந்த நாட்டுக்குப் பெருத்த வரிப்பணம் திரட்டும் செல்வீகக் கோமகன். நாங்கள்தான் இந்த நாட்டை ஆளும் முடிசூடா மன்னர் ! அரசாங்கத்தைப் போரில் புகுத்துவதும், போரிலிருந்து விடுவிப்பதும் நாங்கள்தான் ! போரில்லாத சமயத்தில் போர்த் தீயிக்கு எண்ணை […]