அது அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லும் இராஜபாட்டை. நாலு கால் பாய்ச்சலில் ஒரு குதிரை வாயு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ‘டக்டக்’ என்று அதன் குளம்படிச் சத்தம் ஏதோ ஒரு வேக கதியில் இன்னிசை எழுப்பிக்கொண்டிருந்தது. திடீரென்று குதிரையின் வேகம் தடைபட்டது. ஓடிய வேகத்தில் கொஞ்ச தூரம் மெதுவாகச் சென்ற குதிரையை அதன்மேல் அமர்ந்திருந்த வீரன், கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, வந்த வழியில் திரும்பி, குதிரையைக் சிறிது தூரம் நடத்தினான். அதோ! அங்கே கிடப்பது யார்? அவனுக்கு என்ன […]
காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, […]
சித்தநாத பூபதி ஒன்று மட்டும் நிச்சயம். நாம் கொஞ்சம் நெகிழ்வாக இருந்து விட்டால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் இத்தகைய சூழ்நிலையச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் . மற்றவர்களுக்கு வரும் துன்பம் நமக்கு வரும்போது அது வெறும் தகவல் இல்லை. எனக்கு அப்படி ஒரு துன்பம் வந்தபோது துன்பமாகத்தான் இருந்த்து. அதைத் தனக்கு வந்த துன்பமாகவே கருதிய நண்பர் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்காக வாருங்கள் என்று வழக்கமான மனைவி செண்டிமெண்ட்டைப் பிடித்துக் கொண்டு […]
”மம்மி.. ஷாம்பூ போடுங்க.. சீயக்கா வேணாம். கண் எரியும்.” சிணுங்கினாள் மீத்து. ”அம்மம்மாகிட்ட கேளு.சீயக்காய்தான் நல்லது. “ அம்மா ரேச்சல். “ஷாம்பூவே போடு. அதென்ன அம்மம்மாகிட்ட கேக்கிறது..” தன் அதிகாரத்தை நிலைநாட்டியபடி நகர்ந்தாள் மீத்துவின் தாதி ப்ரேம். டில்லிக்கு வேலை நிமித்தம் வந்தபோது பஞ்சாபின் திலீப் சர்மாவை காதல் மணம் செய்தவள் கேரள ரேச்சல். கேரளாவின் சிவப்பரிசிச் சோறு., குழாய்ப்புட்டு., கடலைக்குழம்பு., சாப்பிட்டு வளர்ந்த ரேச்சல் மாமியாருக்காக ரோட்டி., காலிதால் மாக்னி., பஞ்சாபி பனீர்., ஆலு கோபி., […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா அசலான பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்பது சமூகம் அனைத்துகும் நலம் படைத்துக் குடியரசு முறையில் செயற்பட்டு வரும் ஒன்றே ஒன்றுதான் என்பது தெரிகிறது.. ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political What is What ?) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation […]
அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் மனதில்தான் […]
சில விஷயங்கள் ராத்திரியில் ரொம்ப அழகாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்களைச் சொல்கிறேன். சும்மா கிடக்கிறவனையும், கிடக்கிறவளையும் சங்கீதம் இசைக்கச் சொல்லியோ கவிதை எழுத வைத்தோ உசுப்பேற்றுகிற சமாசாரங்கள் காதலும் இந்த மாதிரியான அழகும் அமைதியுமான பழைய கட்டிடங்களும். இப்போது வெள்ளிக்கிழமை ராத்திரி பத்து மணி. இது எடின்பரோ வேவர்லி ஜங்ஷன். கூட்டம் குறைவாக, விஸ்தாரமான ஏழெட்டுப் பிளாட்பாரங்களாக விரிந்து நீண்டிருக்கும் இங்கே லண்டன் போகிற ரயிலை எதிர்பார்த்து மர பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு இடது பக்கமாக நண்பர் […]
தமிழில் எஸ். சங்கரநாராயணன் >>> ஆச்சர்யமான விஷயம். அல்ராய் கியருடன் நான் விருந்து சாப்பிட்ட ரெண்டு மூணு நாளில் எனக்கு எட்வர்ட் திரிஃபீல்டின் விதவையிடமிருந்து ஒரு கடிதம் – பிரியமான நண்பரே, கடந்த வாரம் ராயுடன் நீங்கள் எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அவரைப் பற்றி மனப்பூர்வமாய் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதாய் அறிய மகிழ்ச்சி. அடிக்கடி அவர் உங்களைப் பற்றி என்னிடம் பேசுவார். உங்கள் எழுத்துத் திறமையை அவர் பெரிதும் வியந்து போற்றிவந்தார். […]
விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி கௌட ராஜ்ஜியத்தில் புண்டரவர்த்தனம் என்ற நகரம் ஒன்றிருந்தது. அங்கே இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவன் தச்சன்; இன்னொருவன் நெசவாளி. இருவரும் தத்தம் வேலையில் நிபுணர்கள். அதனால் அவர்கள் தொழிலிலே சம்பாதித்த பணத்திற்குக் கணக்கு வழக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் மென்மையான வேலைப்பாடுகளுள்ள, விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தினர். பூ, தாம்பூலம் அணிந்து அலங்கரித்துக் கொண்டனர். கற்பூரம், அத்தர், கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை உபயோகித்தனர். பகலில் ஒன்பது மணி நேரம் […]
மத்திய தரைக் கடலில் நீல வண்ணத்து நீரைக் கிழித்துக் கொண்டு வந்த அந்தக் கப்பல் அலெக்ஸாண்டிரியா துறை முகத்தை வந்தடைந்தது. கப்பலில் ஒரு வெள்ளைக்காரர் வாயில் வந்த படி ஏதோ திட்டிக்கொண்டே வந்தார். அவர் பேச்சில் அடிக்கடி அரை நிர்வாணப் பக்கிரி என்ற வார்த்தை அடிப்பட்டுக கொண்டிருந்தது. அப்பப்ப! அவரது தொனியின் தோரணையில் தான் எவ்வளவு வெறுப்பு மண்டிக் கிடந்தது. யாரைப் பற்றி அவர் அப்படிப் பேசுகிறார்? அதே கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திய நாட்டுப் […]