சகுந்தலா மெய்யப்பன் அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் கலீல் கிப்ரான். இவர் ஒரு சிறந்த மேதை. சிந்தனையாளர். துத்துவ ஞானி. புரட்சிக் கவிஞர். அத்துடன் நகைச்சுவை வேந்தர். இவருடைய நகைச்சுவைகள் கேட்கக் கேட்கத் தெவிட்டாதவை. நினைத்து நினைத்துச் சுவைக்கலாம். அது மட்டுமல்ல. நடைமுறை வாழ்க்கையிலும் மிகவும் சுவைபட நடந்து கொள்வார். அவருக்கு ஒரு நாள் குளியல் துறைக்குப் போய் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை வந்தது. அந்த நகரத்துக் […]
இரா.முருகன் “லில்லி காஸில். அங்கே இருந்து டுர்ஹாம் எட்டு மைல். இந்த வழி முச்சூடும் ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே, இருபத்து மூணு மதுக்கடை” நண்பர் நண்டுமரம் உரக்கச் சொன்னார். ஸ்காட்லாந்து இளைஞர். வயது இருபத்தைந்து பிளஸ் கொசுறாக ஐம்பது. பக்கத்தில் ஸ்டியரிங்கை முரட்டுத்தனமாக வளைத்து லில்லி காஸில் பக்கம் திருப்பிய வேட்டைக்காரத் தடியன் அதிவேகமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இவனும் ஸ்காட்டிஷ் காரன் தான். அசல் இளைஞன். வயது இருபத்தேழு. நோ கொசுறு. அசல் ஸ்காட்டீஷ் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இதைப் பூரணமாகப் புரிந்து கொள்ள இயலாது. பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்பது தர்மசாலை அறக்கொடை அல்ல ! ஏழையர் மீதுள்ள அனுதாபம் அல்ல ! கருணைப் பாசம் அல்ல ! அல்லது பொதுநபர் வரவேற்கும் இரக்க குணம் அல்ல ! பொருளாதார நிபுணர் சீர்கேடு, வீண்கழிவுகள் மீது கொள்ளும் வெறுப்பு அது !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political […]
ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டு தன் கைகளை உள்ளே விடத் துடிக்கும் அந்த மரத்தையே நோக்குகிறாள் நந்தினி. என்ன இது, என் கண்களையே என்னால் திறக்க முடியவில்லையே, பிறகு நான் எப்படிப் பார்க்கிறேன்? பயப்படாதே நான்தான் உன்னை எழுப்பினேன். நீ எழுப்பினாயா…எப்படி? வெளியே இருக்கும் நீ எப்படி என்னை எழுப்ப முடியும்? கண்களைத் திறக்காமல் நான் எப்படி உன்னைக் காண்கிறேன்….? என்னால் நீ உறங்குவதற்கு குளிர்ந்த காற்றை அளிக்க முடியுமென்றால் உன்னை என்னால் எழுப்ப முடியாதா? […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “கார்ல் மார்க்ஸ் என்னை ஓர் மனிதன் ஆக்கினார். பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்னை ஓர் மானிடனாய் ஆக்கியது. இல்லாவிட்டால் நான் பல்வேறு கல்வித்துறை அறிஞர்களில் ஒருவனாகி யிருப்பேன். மேலும் பொதுடைமைவாதியாக இருப்பதில் நான் பேரளவு பெருமைப் படுகிறேன்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political What is What ?) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”ச். நான் அப்படியொண்ணும் ஒசத்தியா அவற்றை மதிக்கல்ல… அறுவைக் களஞ்சியம் அவை.” கண் பொங்க ராய் என்னைப் பார்த்துச் சிரித்தார். ”எப்பிடி தேங்காவெடல் போடறீங்க! அப்பிடிப் பார்த்தாலும், உங்க மாதிரி அவரை மதிக்கிற, அவமதிக்கிற ஆட்கள் சொல்பம் தான். அதை நீங்க ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்? இதைச் சொல்ல எனக்கு கூச்சம் கிடையாது. அவரோட நாவல்களை யெல்லாம் நான் ஒருதடவை, ரெண்டுதடவை அல்ல, அஞ்சாறு தடவை வாசிச்சிருக்கேன். எப்ப வாசிச்சாலும் அவை முன்னைவிட அருமையா […]
காகமும் கருநாகமும் ஒரு வட்டாரத்தில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் ஒரு காக்கையும் அதன் பெட்டையும் கூடு கட்டி இருந்துவந்தன. அவற்றின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்து பெரிதாவதற்கு முன்பே, அந்த மரத்தின் பொந்தில் இருந்த ஒரு கருநாகம் மேலேறி வந்து சாப்பிட்டு விடுவது வழக்கம். இந்த அக்கிரமத்தால் காக்கைக்கு எவ்வளவோ மனோ வேதனை ஏற்பட்ட போதிலும், வெகுகாலமாக வசித்த ஒரு பாசத்தால் அந்த ஆல மரத்தை விட்டு வேறு மரத்துக்குப் போக அதற்கு மனம் வரவில்லை. […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள். செய்ன்ட் ஜேம்ஸ் தெருவில் இருக்கிற அல்ராய் கியரின் கிளப்பில் 1.15க்கு நான் அவரை சந்திக்கலாம். ஆக ஒரு ஒருமணிப் போல மெல்ல சவாரிவிட்டேன். நடராஜா சர்விஸ். சிறு அளவில் ‘சுதி’ ஏத்திக்கொண்டேன். ராய் எனக்கு காக்டெய்ல் தரமாட்டார் என்பது நிச்சயம். இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. கடைகளை பராக் பார்த்தபடி தெருவில் […]
ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும் சிஷ்யனின் பல குணங்களைக் கண்டு நிம்மதியிடைந்திருந்த தேவசர்மா திடமனதோடு உட்கார்ந்தான். அந்த சமயத்தில் எதிரே ஒரு செம்மறியாட்டு மந்தையைக் கண்டான். மந்தையின் இடையே இரண்டு ஆடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும் கண்டான். ஆடுகளிரண்டும் ஆங்காரத்துடன் விலகிப் பின் வாங்குவதும், மீண்டும் ஓடிவந்து அகன்ற நெற்றி மண்டைகளோடு ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்வதுமாயிருந்தன. மண்டையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தோடியது. பேராசை பிடித்த குள்ளநரியொன்று இந்த சண்டையைப் பார்த்தது. மாமிசம் தின்ன விரும்பிய நரி அவற்றிற்கிடையே புகுந்து ரத்தத்தைப் […]
ஒரு பிள்ளை வெகு நேரமாகியும் இரவு வீட்டுக்கு வரவில்லை யென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அந்தப் பிள்ளை சாரதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்ட தென்று. ஒரு குடும்பத்தில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை உண்டென்றால் விளங்கிக் கொள்ளுங்கள் அது சாரதா வீட்டில் தீர்க்கப்படு மென்று. வாழையூரில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அதிசயப் பெண்மணிதான் சாரதாம்மாள். வீட்டில் விறகடுப்புதான். அதில் நெருப்பு அணைந்ததே யில்லை. யாரிந்த சாரதாம்மாள். இவரின் கடந்த காலக் கதையை கால் நிமிடத்தில் சொல்லிவிடலாம். கேட்கத் […]