தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

கெடுவான் கேடு நினைப்பான்

வசந்தபுரி மகாராணி நோய்ப் படுக்கையில் துவண்டு கிடக்க, இளவரசன் விக்கிரமன் கண்ணீர் சிந்தியவாறு அருகில் இருக்க, மதிவாணர், முத்துராசர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கைபிசைந்தவாறு நின்றார்கள்! “மதியூக மந்திரிகளே! இனி நான் பிழைப்பேன் என்ற…

மணியக்கா

சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள் காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும் -- நா.காமராசன் -காகிதப் பூக்கள் மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள்.என்னதான் மாயம் இருக்குதடி... கண்ணண் இசைத்திடும் தேன்குழல் தான்.... இதயம் உருக்குதடி....என பாடலுக்குள் தன்னை…

முன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்

  தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால், எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி இந்த விமரிசகர்கள் எழுதியது எல்லாமே வெறும் கண்துடைப்பு. அவரது படைப்பில் காணப்பட்ட யதார்த்தமா அவரது மிகப்பெரிய திறன்? அல்லவே அல்ல. அதில் கண்டெடுத்த…

சரதல்பம்

குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த வாக்கையும் மீறி சந்தனு அரசன் அவளைத் தடுக்க…

பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை

குருவிக்கும் யானைக்கும் சண்டை   அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதில் ஒரு குருவியும் அதன் மனைவியும் ஒரு மரக்கிளையில் கூடுகட்டி இருந்து வந்தன. நாளாவட்டத்தில் அதன் குடும்பம் பெருகிற்று. ஒருநாள் மதம் பிடித்த…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "பீட்டர் !  சல்வேசன் சாவடியை யாரும் மூடப் போவதில்லை.  அதன் அடுப்பில் எப்போதும் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கும். …

சொக்கப்பனை

கார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது. ஆனால், நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் ஜன்னல் திறந்திருப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள்.…

புதிதாய்ப் பிறத்தல்!

பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும் யாத்தி! விடு!” என்று சோறு ஊட்டிக்கொண்டிருந்த…

டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை

மாங்கொட்டைச் சாமிக்குப் பேச்சு வராது என்றுதான் ரொம்பப் பேருக்கு எண்ணம். ஆனால் அது சரியல்ல. சாமி ஆள் பார்த்து, அளந்துதான் பேசும். பெரும்பாலும் மவுனத்தையே வல்லமை மிக்க மொழியாகக் கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்திக் கொள்ளும்.…

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3

"அநேகமாக சுப்புபாட்டி சொன்ன சங்கதியாக இருக்கலாம். அவள்தான், கோவிந்தராஜ பெருமாளுக்கென தனியாக சன்னிதிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், சீரங்கத்திலிருந்து கல்தச்சர்களை அதன் பொருட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தாள்." 4. நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று தில்லையில் இடி,…