ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன் நாம் குழந்தைகளாக இருந்தபோது அந்த தேவதைக் கதையில் வரும் மன்னன் யார் என்று அறிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கவில்லை. அவன் ஷிலாதித்யா என்று அழைக்கப்பட்டானா அல்லது ஷாலிபான் என்று அழைக்கப்பட்டானா என்பதோ அல்லது அவன் காசியில் வாழ்ந்தானா அல்லது கனௌஜில் வாழ்ந்தானா என்பதோ ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஒரு ஏழு வயதுச் சிறுவனுடைய மனதை ஆர்வத்திலும், உற்சாகத்திலுமாய் படபடக்க வைத்ததெல்லாம் இந்த ஒரேயொரு அப்பழுக்கற்ற உண்மை மட்டுமே: இந்த […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “மது பானம் மிகத் தேவையான ஒரு குடிபானம். குடியின்றி வசிக்க வலுவற்ற பல கோடி மனிதருக்கு வாழ்வைத் தாங்கிக் கொள்ள அது உதவுகிறது. அதனால் பாராளுமன்றத்தில் பகல் 11 மணிக்குக் குடிபோதை இல்லாத மனிதன் செய்ய முடியாத ஒரு பணியை இரவு 11 மணிக்கு செய்ய முடிகிறது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “மாந்தர் தாமிருக்கும் நிலைக்குக் காலச் சூழ்நிலையே காரணம் என்று எப்போதும் புகார் செய்வார். எனக்குச் சூழ்நிலை மீது நம்பிக்கை இல்லை. எழுந்து கொண்டு தமக்குத் தேவையான சூழ்நிலையை நோக்கிச் செல்பவரே உலகப் போக்கோடு ஒத்துப் போகக் கூடியவர். அவ்விதம் கிடைக்கா விட்டால் அந்தச் சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்பவர்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Mrs. Warren’s Profession) நாடக ஆசிரியர் பெர்னாட் […]
திலகபாமா அன்புள்ள நிஷாந்த் நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக் கண்ணுற்ற நான் அதைத் தவிர்க்கவே இக்கடித்தை எழுதுகின்றேன். எல்லாரும் குழந்தைகளை யசோதைக்கு கண்ணன்போல் கடவுளே வாய்த்தாலும் நாகரீகத்திற்கு துல்லிய இயந்திரமாய் பழக்கிய காலத்தில் நான் உனை காடுகளை முகரவும் தூரத்து ஆபத்தில் காலடிச் சுவட்டை வாசிக்கவும் காற்றில் மிதந்து வந்த தேனின் வாசத்தைப் பற்றிக் கொண்டு பூக்களிடம் சேகரிக்கவும் கற்பித்தவள் சிங்கங்களின் தேசம் முயல்களின் […]
உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட நிலைமை. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. மனம் குன்றுவது போலிருந்தது. இந்த உணர்ச்சிகள் எல்லாம் ஒரு சேர எழுந்து அவளைக் கவ்வி , கோபத்தை உண்டாக்கின. எதிரே பலேகர் என்கிற அவள் கணவன் என்கிற புழு இருந்திருந்தால் நசுக்கி விடக் கூடிய கோப வெறி மனத்தில் பீரிட்டு எழுந்தது.சற்று முன்பு நடந்த நிகழ்ச்சியும் அதன் விளைவான அதிர்ச்சியும் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நீ ஓர் அமைதியான உலகைக் காணப் போவதில்லை, மனித இனத்தின் மனத்திலிருந்து தேசப் பற்றை விடுவிக்கும் வரை.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (On Patriotism) நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி : ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் […]
இப்பொழுதைய இந்த தனிமை நிமடங்களை எச்சரிக்கை மிகுந்த தருணமாக மாற்றியமைக்கிறது காலம் . தனித்திருப்பது ஒன்றும் ஆபாயகரமனது அல்ல கால சிந்தனை முறையை அதனதன் நிறைவை நிகழ செய்யும் ஒன்றினை எப்பொழுதும் செய்ய விட்டதில்லை காலம் . சுயங்கள் பின்னப்பட்டிருக்கும் முடிச்சுகளை தனிமையின் ஏதோ ஒரு நொடிகளும் அதன் காலமும் விடுவிக்க காத்திருக்கிறது . காலத்தின் இயக்கம் நடைபெறாத ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துகிறது வெற்றிடத்தின் விசை பரவல் . அதன் நொடிகளின் […]
லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது சைகையால் அவனைப் போய் சாப்பிடுமாறு கூறினாள். அம்மா பேசும் விதத்திலிருந்து அவள் அவனுடைய அக்காவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். காயத்ரி பம்பாயில் இருக்கிறாள். இரண்டு நாளைக்கு ஒருதடவை அம்மாவுடன் பேசா விட்டால் காயத்ரிக்கு தலை வெடித்து விடும். அப்படியாவது முக்கியமான விஷயம் பாழாய்ப் போகிறதா என்றால் அதுவும் இல்லை. ஊர் வம்பு , சொந்தக்காரர்களைப் பற்றி புகார் […]
உலுக்கி எழுப்பினாற்போல், திடுக்கிட்டுப்போய் எழுந்த மேகநாதனுக்கு அந்த ஓலம் , நாடி நரம்புகளையெல்லாம் ஊடுருவி, விதிர்விதிர்க்கச் செய்யும் ,வேதனையாக இருந்தது. அவனால் தாங்கவே முடியவில்லை.கடந்த ஒரு வாரமாகவே இப்படி அடிவயிற்றிலிருந்து பிளிறிக்கொண்டு எழும் இந்த கதறல் , ஒரு பூனையின் ஓலம் என்றால் நம்பவா முடிகிறது? எல்லாம் சபிக்கப்பட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையில் தான் நடந்தது . விடுப்பு நாளானதால் ஹாய்யாக கட்டிலில் படுத்துக்கொண்டு பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான் மேகநாதன். திடீரென்று மீனாட்சி அலறினாள். ” என்னங்க , பூ […]
இந்தக் கதையின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே வாழைவல்லியூர். இருநூறு கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த ஊருக்கு வராதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இந்த ஊரின் பெருமைக்குக் காரணம் ஆண்டாண்டு நடக்கும் தேர்த்திருவிழா. அடுத்து இந்த ஊரின் கோயில் யானை கற்பகம். உடம்பெல்லாம் வெள்ளைப் புள்ளிகள் தெளித்த தோற்றம். இரண்டு முழம் தந்தம். கம்பீரமாக ஆனால் பொறுமையாக அனைவரையும் ஆசீர்வதிக்கும் அழகு. இத்தனையுடன் பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு கற்பகம் ஆசீர்வதித்தால் அந்தப் பேறு கிடைக்கலாம் என்ற அந்த ஊரின் […]