ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஆயுத உற்பத்திச் சாலைகள் தொழிலாளருக்கு வேலை, ஊதியம், நல்வாழ்வும் அளித்து, மனித இனத்தின் ஆத்மாக்களை நசுக்கினும் ஆக்கப் பணியே புரிகின்றன.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வாழ்வுக் காலம் முழுவதும் வரையற்ற இன்பப் பூரிப்பு எப்படி இருக்கும் ? உயிரோடுள்ள எந்த மனிதனாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது ! பூமியில் ஓர் நரகமாய் இருக்கும் அந்த வாழ்வு !” […]
சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது போல் அரை இருட்டில் தெரு முடங்கிக் கிடந்தது. தெரு என்று சொல்வதுதப்பு. நான்காவது மெயின் நீளமும் அகலமுமாக வீசிக் கிடந்தது. இளங் குளிருக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஆண்களும் பெண்களும் குளிர் ஆடைகளை அணிந்து வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.ஆறுமாதத்துக்கு முன்பு அவரும் இம்மாதிரி வீரர்களில் ஒருவராகத்தான் இருந்தார். திடீரென்று ஒரு நாள் காலையில் அவரது பெண் வசந்தா ஒரு கையில்பெட்டியும் , இன்னொரு கையில் மூன்று வயதுக் குழந்தையுமாக வந்து நிற்கும் வரை. அவர் அறைக்குள் இருந்த பாத்ரூமிற்குச் சென்று பல் தேய்த்து, முகம் கழுவிதுடைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஹாலில் எம்.எஸ்ஸின் சுப்ரபாதம் மெல்லிய ஒலி வரிசையில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. சமையல் அறையில் தெரிந்த விளக்கு வெளிச்சம் வசந்தா வேலையைஆரம்பித்து விட்டாள் என்று தெரிவித்தது.ஏழரை மணிக்குள் அவள்எல்லா வேலையும் முடித்து விடுவாள். பிறகு டியுஷனுக்கு வரும்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து எட்டரை மணிக்கு அதுகளை அனுப்பி விடுவாள். அதன் பிறகு […]
தெலுங்கில் T. பதஞ்சலி சாஸ்திரி தமிழாக்கம் கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “நீங்க என்ன எடுத்துக்கறீங்க?” “பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்.” “டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் …. ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.” “ரொம்ப பிடிக்கும். சமீபத்தில்தான் பழக்கமாகிவிட்டது.” “பருமானாகி விடுவோம் என்று பெண்கள் பயப்படுவார்கள் இல்லியா? நீங்க அப்படி ஒன்றும் பருமன் இல்லை என்று வைத்துகொள்ளுங்கள்.” “எனக்கு அந்த பயம் எதுவும் இல்லை. போன மாதம்தான் எனக்கு முப்பது வயது முடிந்து […]
காலை வேலைகளுடன் அந்தக் காலை நடையும் சேர்ந்து கொண்டது செல்வாவிற்கு. ரேஸ் கோர்ஸ் சாலையில் வாசம். காலை ஏழு மணிக்கு நடை தொடங்கும். ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளி, திடல், நீச்சல்குளம், பெக்கியோ ஈரச்சந்தை என்று பாதையை நிர்ணயித்துக் கொண்டார். நீச்சல் குளத்தைக் கடக்கும்போது அந்த சிமிண்ட் நாற்காலியில் உட்கார்ந்தபடியோ அல்லது அருகில் நடமாடியபடியோ அந்தப் பெரியவரை செல்வா தினமும் பார்க்கிறார். வயது எழுபது இருக்கலாம். முள்ளாக தாடி மீசை. விரக்தியும் வறுமையும் வரைந்த உருவம். பார்க்கும் […]
எமிலி ஜோலா பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா -I- P**** என்பது மேட்டுப்பிரதேசத்தில் அமைந்த சிறியதொரு நகரம். கோட்டைமதிற் சுவரையொட்டி செங்குத்து சரிவுகளும் ஆழமும் கொண்ட சிற்றாறொன்று பாய்கிறது. படிகம்போல் உருண்டோடுகிற நீரோட்டத்தின் ஓசையைக்கேட்டவர்கள் ‘தெளிவான பாட்டு’ என்ற பொருளில் ஷாண்த்கிளேரென்று பிரெஞ்சில் ஆற்றுக்குப் பெயரிட்டிருந்தார்கள். வெர்ஸாய் சாலையைப் பிடித்து நகரத்திற்கு வருவீர்களெனில், தெற்குவாயில் பக்கம் ஒற்றை வளைவுமீது அமைத்திருக்கிற பாலத்தின் வழியாக ஷாந்த்கிளேரை கடந்து வரவேண்டும். பாலத்தின் இருபக்க தடுப்பு சுவர்களும் அகலமாகவும், […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நியாய யுத்தம் என்று ஒன்று இருக்கிறதா ? ஆயுதங்களும் குண்டுகளும் சாமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலவச் செய்யுமா ? மரணத் தொழிற்சாலைகள் மூலமே மனித வாழ்வு செழிக்க வேண்டுமா ? நான் யுத்தத்தின் மீது போர் தொடுக்கிறேன்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வறுமையைப் பற்றி எழும் அச்சமே உன்னை ஆட்கொள்ள அனுமதிக்கிறாய். அதனால் கிடைக்கும் வெகுமதி உன்னால் உண்ண முடியுமே […]
மலைக்கு இந்த வருஷம் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று மணி சொன்னதும் சேஷு ஒப்புக் கொண்டு விட்டார். கடந்த நாலைந்து வருஷமாகவே மணி சேஷுவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஒழியவில்லை. இந்தத் தடவை மணி மலைக்குப் போவது இருபத்தி ஐந்தாவது வருஷமாம் . ஆபிஸில் அவரை ஏற்கனவே வெள்ளி விழா மணி என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.மணி சேஷுவின் அலுவலகத்தில் மற்றொரு பிரிவில் இருந்தார். சேஷு அங்கே சேர்ந்து பதினைந்து வருஷ மாகப் போகிறது, இந்த டிசம்பர் வந்தால். மணி […]
அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல […]
-சாமக்கோடாங்கி ரவி காலை 10.30 மணி. நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வழக்கறிஞர்கள் இறக்கை ஒடிந்த காக்கையைப் போல ஒவ்வொரு நீதிமன்றமாக கைகளில் கட்டுடன் தாவிக்கொண்டிருந்தனர். சில காக்கைகளின் இறக்கைகள் அங்கே தாறுமாறாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் சிக்கியதில் கெட்ட வார்த்தைகளால் மொனமொனத்தபடி ஓடிக் கொண்டிருந்தனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் போல அவசர அவசரமாக காலை சிற்றுண்டி முடித்து சீருடை அணிந்து காலணியின் கையிற்றை இழுத்துக் கட்டி அலுவலகம் வந்து, […]
மஹாபாரதம் சொல்வது: “ஒரு கிராமத்தில்- மலர்களோடும், காய் கனிகளோடும் ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்குமானாலும் அந்த இடம் பூஜிக்கத்தக்க மரியாதைக்குரிய இடமாகும்.” Global warming caused by increased industrial pollution; privatization of ‘public’ resources such as water; the clearing of land or marshes to make way for farmers trying to eke out more profits on the international markets or for multinational […]