மீளா நிழல்

* கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது இப்பெரு அமைதியில் காலடி ஓசைகளின் அதிர்வில் நடுங்குகிறது நிற்கும் நிழல் ஒளி கசியும் ஜன்னல் திரையில் மடிந்து மடிந்து தொங்குகிறது மீளா துக்கம் கையெழுத்து இடச் சொன்ன படிவத்தில் உறுதி செய்து கேட்கிறார்கள் அவன் மரணத்தை…

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

* ஒரு கறுமைப் பொழுதை ஊற்றிக் கொண்டிருக்கிறேன் இரவின் குடுவையில் வெளிச்சத் திரள் என சிந்துகிறாய் துயரத்தின் வாசலில் கைப்பிடியளவு இதயத்தில் அழுத்தும் நினைவு நாளங்களில் முடிச்சிட்டுக் கொள்கிறது எப்போதும் முடிவற்று விரியும் கோரிக்கை யாவும் **** --இளங்கோ 

மரணித்தல் வரம்

* கை நீளுதலை யாசகம் என்கிறாய் யாசித்து பெறுவதாக இருப்பதில்லை எனக்கு தேவையான பார்வை பேசாதிருத்தல் அமைதி என்கிறாய் பேசி அடைவதாக இருந்ததில்லை நான் பெற்ற மௌனம் மரணித்தல் வரம் என்பாய் எதன் பொருட்டு தவம் இருந்தேனோ அதிலில்லை யாசகமோ ஒரு…

சலனப் பாசியின் பசலை.

. * மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில் மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி மௌன நீர்மையில் வேர்ப் பிடித்து முளைக்கும் சலனப் பாசி நெளிந்து நெளிந்து கலக்கும் பசலையைத் தின்று தீர்க்க வாய் திறந்து…

ஒற்றை எழுத்து

நீ அறுதியிட்டு உச்சரித்த ஒற்றை எழுத்தில் ரத்தம் கசிகிறது குத்திக் கிழித்த காயத்தின் வலியென இந்த அவமானம்.. ***** --இளங்கோ

உறைந்திடும் துளி ரத்தம்..

* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட துரோகக் கணத்தின் சாட்சியென துருப்பிடித்துக் காத்திருக்கிறது உன் வரவுக்காக ******* --இளங்கோ

மீன்பிடி கொக்குகள்..

* வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது அதில் உன் மௌனக் கொக்கு ஒற்றைக் காலில் நி ற் கி ற து.. நீ சுருள் பிரிக்கும்…
கை விடப்பட்ட திசைகள்..

கை விடப்பட்ட திசைகள்..

* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள்.. ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம். தேங்கியக் குட்டைக்குள்ளிருந்து நீந்திப் பழகிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறகுகள் முளைத்து கூரைக்கு மேலே பறத்தலை நிகழ்த்துகின்றன.. ரகசியமென இரவுகளில் கவிழ்கின்றது முன்னெப்போதும்…