Posted inகவிதைகள்
பிறவி மறதி
சேயோன் யாழ்வேந்தன் நான் பாறையாக இருந்தபோது இந்தப் பறவை பலமுறை என்மீது அமர்ந்திருக்கிறது நான் மரமாக இருந்தபோது என் கிளையொன்றில் அது கூடுகட்டியிருந்தது நான் நதியாக ஓடுகையில் சிலசமயம் சிறகை நனைத்து சிலிர்த்திருக்கிறது இப்போது என்னை அடையாளமே தெரியாததுபோல் பறந்துகொண்டிருக்கிறது அப்பறவை…