மரமும், நானும், விட்டுப் போன உரையாடல்களும்

  (1) ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். எங்கிருந்து குரல்? தெரியவில்லை. சிறிது நேரம் சென்று துணிகள் காயப்போட வெளிமாடம் வருவேன். ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். அருகிலிருந்து குரல். ஒரு மரம் விசாரிக்கும். பத்து வருடங்கள் முன் பார்த்த அதே மரம். என்…

உலராத மலம்

மலஜலம் கழிக்க வயல் வெளிப்பக்கமும் ஊர் ஒதுக்குப் புறமும் ஜனங்கள் போகும் ஊர். கங்குலில் தெருவோரம் உட்கார்ந்து எழும் அடையாளம் தெரியாத உருவங்கள். என் பால்ய காலத்தில் பழகிய வழி ஊரில் பள்ளிக்கூடம் போய் வரும் வழி. போய் வரும் வழியோரமெல்லாம்…

அறைக்குள்ளேயே வெகுதொலைவு-II (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்)

51 வறண்டு கிடக்கும் ஆற்றில் கரை புரண்டோடும் வெயில் வெள்ளம். மேலே பறந்து கொண்டிருக்கும் தனித்தொரு பறவை வானில் ஒரு குளிர்மேகம் தேடி. 52 செடியின் ஒரு மலர் உதிரும். ஒரு மொட்டு அவிழும். செடி செடியாய் இருக்கும். 53 ஒரு…

அறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1

1 கண்ணில் ஒரு பிடி ஆகாயம் தூவி விட்டுக் காணாமல் புள்ளியாய் மறையும் ஒரு சின்னப் பறவை. 2 கோடானு கோடி நட்சத்திரத் திருவிழாவில் ஒரே ஒரு யாத்ரீகன் நிலா செல்லும். 3 நட்சத்திரங்களை ’எண்ணுவதை’ விட நிலாவை ’எண்ணுவது’ மேல்.…

திருக்குறளில் அறம்- ஒரு ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு

1.முன்னுரை: திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல. அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள்.…

இரு கவிதைகள்

(1) கதவு சாமரமாய் வீசும் ஒருக்களித்திருந்த கதவு மெல்ல மெல்லத் திறக்கும். யாரும் உள்ளே அடியெடுத்து வைக்கவில்லை. காற்று திறந்திருக்குமோ? காற்றாடை உடுத்திக் கொண்டு கண்ணுக்குத் தெரியாது யாராவது திறக்க முடியுமோ? எழுந்து சென்று பார்த்து விடலாமா? மலர்ந்து கொண்டிருக்கும் வேளையில்…

சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்

(1) ’அம்மா இங்க வாம்மா. * என்னம்மா * அங்க பாரேன் கிங் ஃபிஷர் ’லூசு’ மாதிரி சிலுப்புது. * அது லூசில்லமா. * பறவைக்குப் பைத்தியம் பிடிக்குமுமாம்மா? * பிடிக்குமா? பிடிக்காதா? எனக்குத் தெரியாது ‘முழிப்பேன்’. * இதன் முட்டை…

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது சற்றுக் கடினம். அவர்கள் நம்மைப் போல் தான் இருப்பார்கள். ”ஒழுக்கங்கள்” பற்றி அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் தான் அவர்கள் “ஒழுக்கமானவர்கள்”. அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள் மேல் அதிக அக்கறை. அடிப்படையில் ஆண்கள் பெண்கள்…

எஞ்சினியரும் சித்தனும்

(1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய்…

இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது

(1) இது இறந்தவர்கள் பற்றிய க(வி)தை . அதனால் மர்மங்கள் இருக்கும். இறந்தவர்கள் மர்மமானவர்கள் அல்ல. இருப்பவர்களுக்கு சாவு பயமானதால் இறந்தவர்கள் மர்மமானவர்கள் இருப்பவர்களுக்கு இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இருப்பவர்களின் சாவை இறந்தவர்கள் நினைவுபடுத்துகிறார்கள். (2) இரண்டாம் எண்…