2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்

2-ஜி அலைக்கற்றை ஊழலின் தாக்கம்: 2-ஜி அலைக்கற்றை (2-G Spectrum) ஊழல் இந்திய ஜனநாயகத்தில் ஒரு பெரிய நில அதிர்வு போல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்த நில அதிர்வின் அலைகள் இன்னும் நின்றபாடில்லை. 2011-ல் டைம்( Time) இதழ் உலகளாவின தலையாய பத்து…

சின்ன மகள் கேள்விகள்

இரவில் ஏன் தூங்கணுமென்பாள் சின்ன மகள். குருவிகள் தூங்குகின்றன என்பேன். நட்சத்திரங்கள் தூங்கவில்லையே என்பாள். நட்சத்திரங்கள் பகலில் தூங்குமென்பேன். ’இரவில் பின் ஏன் தூங்கணும்’- இன்னும் சமாதானமாகாள் சின்ன மகள். ’சரி காத்தால பள்ளிக்கூடம் போகணும் தூங்கு’ என்பேன் ’ குருவிகள்…

ஈக்கள் மொய்க்கும்

”தூங்கிட்டு இருக்கான்னுல நெனச்சேன்; அட ஆளே செத்துட்டான்னா?” அவனுக்குத் துணுக்குறும். பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடந்து போகும் போது அவன் கால்கள் தடுக்கி விட்டது நினவுக்கு வரும். ‘பொணம் தடுக்கிச்சா” ;சிந்தையில் கலவரம் கூடும். கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னை…
தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்

தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்

  தகழியின் ’செம்மீன்’ என்ற மகத்தான மலையாள நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியாகி( 1962)  ஐம்பது ஆண்டுகள் நிறைவாகின்றன. மலையாள நாவல் 1956-ல் வெளியானது. ஐம்பது ஆண்டுகள் கழிந்தும்  நாவல் வாசகர்களை இன்னும் புதிதாய் வசப்படுத்துகிறது. அண்மையில் தான் முதல் முதலாக…

காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)

(1) காட்டுக்குள் காலடி வைப்பேன். காடு நகைக்கும். ’ஒரு மிருகமோ நான்’ என்று ஒரு சந்தேகம் எனக்கு. காடு மறுபடியும் நகைக்கும். ”ஒரு மிருகமில்லையோ நான்” என்று மறு சந்தேகம் எனக்கு. இரண்டுமே நானோ? இன்னும் தீராது சந்தேகம் எனக்கு. காடு…

என் சுவாசத்தில் என்னை வரைந்து

என் அறையில் நான். நாற்காலி அதன் சித்திரத்தை வரைந்திருக்கும். மேஜை அதன் சித்திரத்தை வரைந்திருக்கும். நிலைக் கண்ணாடி தனக்குள் தன் சித்திரத்தை வரைந்திருக்கும். வெளிச்சித்திரங்களை உள்ளே கூட்டி வந்திருக்கும் ஆகாயம். என் சித்திரத்தையும் வரைய ஆரம்பித்தேன். மாறிக் கொண்டேயிருக்கும் என்னை எப்படி…

இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்

  (I) வறுமைக் கோடு- கோட்பாட்டு விளக்கம் 1.முன்னுரை இந்து ஆங்கில நாளிதழில் (11 பிப்ரவரி,2012 ) வாழ்க்கையின் மறுபக்கம் (The other side of life) என்ற தலைப்பில் ஹர்ஸ் மந்தரின் (Harsh Mander) இந்தியாவின் வறுமைக்கோடு (Poverty Line)…

மானம்

இரயில் பயணத்தை அவன் என்றைக்குமே வெறும் இரயில் பயணமாய்ப் பார்ப்பது இல்லை. இரயில் பயணத்தை ஒரு தத்துவார்த்தமாகவே கண்டு அவனுக்கு விருப்பமாகி விட்டது. ஒரு ஆரம்பித்திலிருந்து ஒரு முடிவுக்குச் செல்லும் வாழ்க்கையைப் போல இரயில் ஊடறுத்துக் கொண்டு போகிறது என்று பல…

இன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்

கு.அழகர்சாமி சென்னைப் பள்ளியொன்றில் பதினைந்து வயது கூட முழுமையடையாத ஒரு மாணவன் தன் பள்ளி ஆசிரியையைக் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியாகவும் துயரமாகவும் இருக்கிறது. நம் கலாச்சாரச் சூழலில் எப்படி இது நடந்தது என்ற தொனியும் அதில் இருக்கிறது. தன் பாடத்தில்…

மோகம்

கு.அழகர்சாமி கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவது போலும் உடலுக்குள் உயிர் செலுத்துவது போல் அழுது கொண்டிருக்கும் அவளைக் கண்டதும் கைகளைச் சேர்த்தழுத்தியது தான். எங்கே இழுத்துப் போகிறாள் என்னை? எந்தக் கடலுக்குள்? எந்த ஆழத்துக்குள்? கனவு மீளாது போய்க் கொண்டே இருக்கிறேனா? காலம்…