உபதேசம்

This entry is part 9 of 29 in the series 28 ஏப்ரல் 2013

எஸ். சிவகுமார்   காலமெனும் கலயத்தில் கண்டெடுத்த வயிரங்கள் வாலிபப் பருவத்தில் வசப்பட்ட நேரங்கள் ! நிலையில்லா காயம் நிலையென்றே எண்ணாது அலைபாயும் உன்மனதை அடக்கி ஆள் என்றிட்டார்.   கலைக்கென்றும் கண்ணுண்டு காதலுக்குத்தான் இல்லை அழகை ரசித்திட்டால் அழிவேதும் இலையென்றேன்.   அறியாமல் பேசுகிறாய்ச் சிறுபிள்ளை நீயென்றார் அழகுக்கு மறுபெயர் ஆபத்து என்றிட்டார்.   கலைப்பார்வையோடு ஒரு தொலைப்பார்வையும் இருந்தால் காபந்து தேவையில்லை ஆபத்தும் இலையென்றேன்.   பெரியோர்சொல் கேளாத பிள்ளை உனக்கிங்கே தொலைப்பார்வை எங்கே? […]

எலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..

This entry is part 8 of 29 in the series 28 ஏப்ரல் 2013

கோவிந்த் கருப்  ———————— Bone marrrow  பற்றிய விவரங்கள் அறிய, http://en.wikipedia.org/wiki/Bone_marrow   படத்திலிருப்பவர் ஸ்டான்ஃபோர்டில் பணி புரியும் முதல் அமெரிக்க இந்தியப் பேராசிரியர். மனோதத்துவத் துறையில் பணி புரிகிறார்.   அவருக்கு தற்போது மிக அரிதான வகை ரத்த கான்சர் நோயினால் பாதிப்பு. அதிலிருந்து அவர் மீட்கப்பட  குறிப்பிட்ட எலும்புத் திசு சிகிச்சைக்காகத்  தேவைப்படுகிறது.   இந்திய கேரள வம்சாவளி சேர்ந்த உறவுகளின் திசுக்கள் ஒவ்வாமையால், தொடர்ந்து அவருக்கு ஒத்துக் கொள்ளும் திசு அன்பளிப்புக்கான முயற்சி […]

சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகம் – விமர்சனம்

This entry is part 7 of 29 in the series 28 ஏப்ரல் 2013

சென்னை மியூசியம் தியேட்டருக்கு இம்மாதம் 23, 24 ஆகிய இரு தினங்களும் கடவுள் வந்திருந்தார். சுஜாதா வந்திருந்தார்… நிறைய மக்கள் வந்திருந்தார்கள். பாரதி மணியின் சென்னை அரங்கத்தார் சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகத்தை அங்கே சிறப்புற மேடையேற்றி இருந்தார்கள். இது அறிவியல் சிந்தனையுடன் நகைச்சுவை ரசத்தில் தோய்ந்த சமூக நாடகம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். உலகில் என்றுமே நிரந்தரமற்ற சமூக மரியாதையை ஓய்வு பெற்ற ஒரே நாளிலேயே இழக்கிறார் சீனிவாசன். சுஜாதாவின் எதிர்கால மனிதன் புத்தகத்தை […]

க.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்

This entry is part 6 of 29 in the series 28 ஏப்ரல் 2013

சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து “அவரவர் பாடு” என்கிற இந்நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு என்கிறார் க.நா.சு. க.நா.சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக நற்றிணை பதிப்பகம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நாவல் இது. இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை என்று சொல்கிறார். எழுதிப் பார்க்கிறேன். அது […]

எட்டுத்தொகை : வடிவம் குறித்த உரையாடல்

This entry is part 5 of 29 in the series 28 ஏப்ரல் 2013

கன்னியம் அ.சதீஷ் உதவிப் பேராசிரியர் ஆசான் மெம்மோரியல் கல்லூரி பள்ளிக்கரணை சங்க இலக்கியப் பாடல்கள் எழுத்து வடிவம் பெற்ற காலமும் நூல்-தொகுப்பு வடிவம் பெற்ற காலமும் வெவ்வேறானவை. இப்பாடல்கள் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை அல்ல. இப்பாடல்களைத் தொகுத்த புலவர்கள் தொடங்கி உரையாசிரியர்கள் (சங்கப் பிரதிகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள், இலக்கணப் பிரதிகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள்) பதிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என இவர்கள் அனைவரும் வெவ்வேறு வாசிப்பு முறையியல்களைச் சங்கப் பாடல்கள் மீது நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வாசிப்பு முறைமைகள் நிகழ்த்தப்பெற்ற காலச் சூழல்களும் […]

வடிவம் மரபு: பத்துப்பாட்டு

This entry is part 4 of 29 in the series 28 ஏப்ரல் 2013

மு.இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழிலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் சங்க இலக்கிய வாசிப்பு பலநிலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் பத்துப்பாட்டு இலக்கியத்தை அகம், புறம் என்ற பொருண்மை அடிப்படையிலும் ஆற்றுப்படை என்ற இலக்கிய வகைமையிலும் கால ஆராய்ச்சி நிலையிலும் இதுவரை ஆராய்ந்துள்ளனர். ஆய்வுநிலையில் வடிவம் சார்ந்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. பத்துப்பாட்டைப் பின்வரும் நிலைகளில் ஆராய்ந்து அது குறித்த விரிவான பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. – பத்துப்பாட்டு அறிமுகமும் வைப்புமுறையும் – பத்துப்பாட்டில் அகப்புற நெகிழ்வும் இணைவும் – […]

சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்

This entry is part 3 of 29 in the series 28 ஏப்ரல் 2013

ச.பச்சைநிலா உதவிப் பேராசிரியர் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி பெரம்பலூர் வல்லிக்கண்ணனின் தமிழில் சிறுபத்திரிகைகள் என்கிற சிறுபத்திரிகைகள் பற்றிய நூல் தொகுப்பு தந்த புரிதலும், சமீபத்தில் கங்கு வரிசையில் வெளிவந்த பேரா. வீ.அரசுவின் சிறுபத்திரிகை அரசியல் என்கிற குறுநூல் கொடுத்த சிந்தனை கணமும் என்னை மேலும் சிறுபத்திரிகைகள் குறித்த வாசிக்கவும் பேசவும் செய்தன. அந்தவகையில் தமிழில் பன்முகப்பட்ட சிந்தனை ஓட்டங்களை வாசக மனங்களில் விதைத்து, அவ்விதைப்பின் ஆகப் பயனாக அறிவார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்பிய சாதனை தமிழில் சிறுபத்திரிகை வழி […]

ரோஜர் எபர்ட் – ஒரு சினிமா விமர்சகனின் பயணம்.

This entry is part 2 of 29 in the series 28 ஏப்ரல் 2013

நல்ல படங்களைப் பார்க்கும் என் பழக்கம் திருச்சியில் சினி போரத்தில் தொடங்கியது. பேராசிரியர் எஸ் ஆல்பர்ட் அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கிய சினி போரம் பல ஆண்டுகளாக உலக அளவிலும், இந்திய அளவிலும் வெளிவந்திருந்த முக்கியமான படங்களை பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தினை இந்த போரம் அளித்தது.  சத்யஜித் ரே, குரோசவா, பெலினி, போலன்ஸ்கி, கோதார் , த்ருபோ என்று பலதரப்பட்ட பெரும் ஆளுமைகளின் படங்களைப் பார்க்கவும் விவாதிக்கவும் களத்தை அமைத்துக் கொடுத்த அந்த அமைப்பிற்கு என் ஈடுபாடுகளை விரிவு […]

ஆமதாபாதில் இரவுகள் – சில பார்வைகள் – 2

This entry is part 1 of 29 in the series 28 ஏப்ரல் 2013

மது பூர்ணிமா கிஷ்வர் அரிதான போலீஸ் இருப்பு. சாலைகளில் மிகவும் அரிதாகவே காணப்படும் போலீஸே ஆமதாபாத் நகரத்தின் குறிப்பிடத்தகுந்த விஷயம் எனலாம். நான் ஆமதாபாதில் நள்ளிரவு நேரங்களில் என் நண்பர்களுடன் சென்ற மூன்று நாட்களிலும், டெல்லியில் மிகவும் அடிக்கடி காணப்படும் போலீஸ் சாலை தடைகள் இங்கே இல்லவே இல்லை என்பதை கண்டேன். நான் ஆமதாபாதை சென்றடைந்த நாள் மகர சங்கராந்தி கொண்டாட்டமும், அத்தோடு சேர்ந்த பட்டம் விடும் விழாவுக்கும் சற்று முன்னர், இருந்தும் அங்கே எந்த விதமான […]