இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்

This entry is part 1 of 16 in the series 3 ஏப்ரல் 2016

முனைவா் பு.பிரபுராம் தமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு, இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பேன் என்றது மற்றொரு தரப்பு, இவை மட்டுமா? ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பேன், சா்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று பல முழக்கங்களைத் தோ்தல் மேடைகளில் அரசியல் கட்சிகள் […]

வரலாற்றில் வாழ்வது – சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’

This entry is part 2 of 16 in the series 3 ஏப்ரல் 2016

பாவண்ணன் கடந்த வாரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல் அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, அப்பாவோடு ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒருநாள் அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். வெகுதொலைவு நடந்த களைப்பில் ஒரு பூங்காவுக்கு எதிரில் நின்றிருக்கிறார். அங்கே ஏற்கனவே ஏராளமான மாணவர்கள் கூட்டம்கூட்டமாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திர வேட்கையுடன் கல்லூரியை விட்டு வெளியேறியவர்கள். ஒரு கூட்டம் நிகழ்த்துவதற்காக அங்கே சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியைப்பற்றிய எந்தத் […]

லேசான வலிமை

This entry is part 3 of 16 in the series 3 ஏப்ரல் 2016

கொடுங்கனவில் விழித்தது முதன்முறையல்ல படுக்கையில் முளைத்தன பதாகைகள் தமிழில் பிற மொழியில் கோஷம் கோரிக்கை விளம்பரம் அறிவுரை எச்சரிக்கை அறைகூவல் வியர்த்து விழித்தேன் பல இரவுகள் காற்றில் அசைந்து பறந்தும் போகும் லேசான அவை மானுடத்தின் பரிமாற்றங்கள் உரையாடல்கள் தோழமைகள் வாளுரசல்கள் வாணிகம் தியாகம் உறவுகள் சுரண்டல்கள் எதையும் நிர்ணயிக்கும் மாவல்லமை கொண்டவை பதாகைகள் ஒரு அமைப்பின் கொடுங்கனவாகா அமைப்பின் நிறுவனத்தின் அதிகார அடுக்குகள் வளாகத்து அறைகளின்’ கதவுகள் மீது பெயர்ப் பலகைகளாய் பதாகையை எதிர்கொள்ளும் பதாகைகளைப் […]

நாமே நமக்கு…

This entry is part 5 of 16 in the series 3 ஏப்ரல் 2016

கே.எஸ்.சுதாகர் நான் ஒரு தடவை அய்ரோப்பாவை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்பினேன். அப்போது எனக்கு வயது 55 ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவுஸ்திரேலியாவில் ஒரு குளிர்காலத்தில் நானும் மனைவியும் மகனுமாகப் பிரயாணத்தை ஆரம்பித்தோம். அப்போது அய்ரோப்பாவில் கோடை காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரான்சில் எனது பாடசாலை நண்பன் குநேசன் இருக்கின்றான். பிரான்சை நான் முதலில் தெரிவு செய்தது, முதற்கோணல் முற்றும் கோணல் என்றாகிவிட்டது. வாழ்வில் எத்தனையோ நாட்கள் வருகின்றன, போகின்றன. ஆனால் அன்றையநாள் ஒரு மறக்கமுடியாத நாள் ஆகிவிட்டது. […]

வியாழனுக்கு அப்பால்

This entry is part 6 of 16 in the series 3 ஏப்ரல் 2016

நேதாஜிதாசன் பிச்சை கேட்கும் குழந்தை காணிக்கை கேட்கும் கடவுள் லஞ்சம் கேட்கும் அதிகாரி ரத்தம் கேட்கும் சாதிமன்ற தலைவன் பணம் கேட்கும் விபச்சாரி கடன் கேட்கும் அவன் முத்தம் கேட்கும் மனைவி பொம்மை கேட்கும் குழந்தை இறைச்சி கேட்கும் நாய் மீன்முள் கேட்கும் பூனை வீடு கேட்கும் தெருவோரகுடிமகன் மருந்து கேட்கும் வியாதிக்காரன் என்னை கேட்கும் நான் என எல்லோரும் இப்போது எதை கேட்கப்போகிறார்கள் ஒருவேளை நான் இல்லாமல்போனால் ஆனால் நிச்சயம் நீங்கள் கேட்டதற்கு பதிலாக கவிதை […]

கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்

This entry is part 7 of 16 in the series 3 ஏப்ரல் 2016

அன்புடையீர், வணக்கம். இத்துடன் கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ் இணைத்துள்ளேன். தங்கள் வருகையால் நிகழ்வு சிறக்கட்டும். கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன் ஆசிரியர் – வளரி

இரத்தினமூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ தொகுப்பை முன் வைத்து ..

This entry is part 8 of 16 in the series 3 ஏப்ரல் 2016

. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் திருப்பூர் இரத்தினமூர்த்தி ஒரு தொழிலதிபர் , நாவலாசிரியர் , கவிஞர் ஆவார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘ ஆத்மாவின் சுவாசங்கள் ‘ இது இரண்டாவது தொகுப்பு . புதிய சிந்தனைகள் மூலம் படிமங்கள் அமைந்துள்ளன. சமூக அக்கறை , விமர்சனப் பார்வையுடன் பதிவாகியுள்ளது. ‘ மலர்கள் ‘ தொடர் படிமக் கவிதை. ஆழமான சிந்தனைகள் கவித்துவத் தெறிப்புகளுடன் காணப்படுகின்றன. வேரின் கனவுகள் காம்பின் கௌரவம் காயம்பட்ட தென்றலுக்கு ஒத்தடம் கொடுக்கும் செடியின் […]

நாடகத்தின் கடைசி நாள்

This entry is part 9 of 16 in the series 3 ஏப்ரல் 2016

தாரமங்கலம் வளவன் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து நாடகம் நடத்தும் குழுவின் விளம்பர போஸ்டர் அது. மாணிக்கத்தின் வீட்டிற்கு எதிரில் ஒட்டப் பட்டிருந்தது.. முதல் வரிசை டிக்கெட் ஐநூறு ரூபாய் என்றார்கள். வாங்கிக் கொண்டு போய் உட்கார்ந்தார். என்ன ஆச்சர்யம்.. அது அவருடைய சொந்தக்கதைதான்.. மோகன சுந்தரம் என்னும் அந்த பாத்திரத்தின் கதை அவருடைய கதையேதான்… குடித்து விட்டு வந்து தினமும் மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் ஒரு குடிகார தந்தை. ஒரே ஒரு வித்தியாசம்… நாடகத்தில் கடைசியில் […]

வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்

This entry is part 10 of 16 in the series 3 ஏப்ரல் 2016

[St Lawrence Seaway Connecting The Great Lakes to Atlantic Sea] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ https://youtu.be/aTRIqCgSxYQ https://youtu.be/9HNTxtWkxUc https://youtu.be/heRLwTPpSMc https://youtu.be/EfVzOz1nqnE +++++++++++++ எங்கெங்கு காணினும் ஏரிகளாம்! திசை எப்புறம் நோக்கினும் ஆறுகளாம்! கப்பலை ஏற்றி இறக்கும் நீர்த் தடாகமாம்! ஒப்பிலா ஏரிகள் இணைக்கும் கடல் மார்க்கம்! [வட அமெரிக்கக் கண்டம்] +++++++++++++ உலகிலே நீளமான உள்நாட்டுக் கடல் மார்க்கம்! பூகோளத்தின் ஏறக்குறைய கால் பகுதியில் பூமத்திய ரேகைக்கு மேலே […]

இலக்கியவாதிகளின் இதயத்தில் இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்

This entry is part 11 of 16 in the series 3 ஏப்ரல் 2016

முருகபூபதி இலங்கையில் மூவினத்தவர்களினதும் அரசியல் வாழ்வை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு துப்பாக்கியின் வேட்டுக்கள் புரட்டிப்போட்ட சம்பவம் நடந்த வடஇலங்கையின் யாழ்.குடாநாட்டுக்கு வடமேற்கே அமைந்த பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில் பற்றி அறிந்தவர்கள் அநேகர். 1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி வேலுப்பிள்ளை பிரபாகரனின் கரத்திலிருந்த துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்த தோட்டா அன்றைய யாழ்ப்பாணம் நகரமேயரை உலகிலிருந்து விடைபெறச்செய்தது. அன்று தொடங்கிய பிரபாகரன் முன்னிலை வகித்த ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வருவதற்கு ஏறக்குறைய நான்கு தசாப்தங்கள் […]