வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

This entry is part 7 of 7 in the series 5 ஏப்ரல் 2020

என்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால் அறியப்படும் நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் பதிப்பக வெளியீடான ‘வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்’ கவிதைத்தொகுதி மீதான விமர்சனக்கட்டுரை இது. கவிதைத்தொகுப்பு தலைப்பிலேயே ஈர்த்துவிடுகிறது. அதுவே இத்தொகுப்பின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டிவிடுகிறது. தொகுப்பில் சுமார் எழுபதுக்கும் அதிகமான கவிதைகள் இருக்கின்றன. ஆசிரியரின் சமூகப்பார்வையை சில கவிதைகள் நச்சென்று சொல்லிவிடுகின்றன. உதாரணமாக, ‘ நாலு பேர்’ என்ற இந்தக் கவிதை. நாலு பேர் நாலு விதமா பேசுவார்கள் என்றனர்… நால்வரிடமே கேட்டேன் என்ன தவறு […]

பெண்கள் பெண்கள் பெண்கள்

This entry is part 6 of 7 in the series 5 ஏப்ரல் 2020

ஸிந்துஜா   1 உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் எனக்கு எதிரே வரும் போது  என்னைப் பார்க்காமல் செல்லுங்கள்.. 2 எனக்கு அவர்கள் ஸாரி அணிந்து கொண்டு வருவதுதான் பிடிக்கும் என்று எப்படியோ தெரிந்து கொண்டு மற்ற எல்லா ஆடைகளையும் அணிந்து வருகிறார்கள். 3 எதிரே வருபவளைப் பார்க்காமல் போகிறவன் காதுகளில் துப்புகிறாள் எரிச்சலுடன்: மூஞ்சியைப் பாரு. 4 பெண்ணென்னும் மாயப் பிசாசு எனறவனைக் கூப்பிட்டு உதைக்க வேண்டும். பிசாசை அவமதிக்க அவனுக்கென்ன உரிமை இருக்கிறது ? 5 […]

வட்டத்துக்குள்

This entry is part 5 of 7 in the series 5 ஏப்ரல் 2020

திருமணம் மாலை மாற்றும் காட்சி புலனத்தில் இடைவெளிக் கொள்கை இவர்களுக்கில்லை சுற்றம் சூழ வராதிருந்து வாழ்த்துவோம் பெண்குழந்தை இன்று உதயம் புலனத்தில் காணுங்கள் புதுமலரை வராதிருந்து வாழ்த்துங்கள் கழகத்தின் ஆண்டுக்கூட்டம் ஆண்டுக் கணக்கு மின்னஞ்சலில் மலர்களாகத் தொடர்வோம் மாலையாதல் வேண்டாம் அட இறந்துவிட்டாரா? இருக்கும்  இடத்தில் அழுவோம் ஊருக்குள் சிறையா? சிறைக்குள் ஊரா? நீ அங்கே நான் இங்கே கவலையில்லை தொற்று தொடாது தொலைபேசியை வையம் ஆள்பவரும் வட்டத்துக்குள்.

வாழ்க்கை

This entry is part 4 of 7 in the series 5 ஏப்ரல் 2020

பொறியியல் படித்திருந்தால் பொன்னாகியிருக்கும் வாழ்க்கை உயிரியல் படித்தேன் உழல்கிறேன் சொந்த ஊரில் சொத்துச் சேர்த்தேன் சிங்கப்பூரில் செய்திருந்தால் சீமான் இன்று நான்தான் இவளாக ஆனதால் இத்தனை பாடு அவளாக இருந்தால் அரசன் இன்று நான்தான் மகளைப் பெற்றதால் மாட்டிக்கொண்டேன் மகனாய் இருந்தால் மகுடாதிபதி நான்தான் அண்ணன் தம்பிகள் இல்லாதிருந்தால் இன்று நானே ராஜா நானே மந்திரி அந்தக் குரங்கின் நட்பை முறித்திருந்தால் என் அப்பம் இன்று எனக்கே ஒரு பறவை போல் வாழும் பாக்கியம் பெற்றிருந்தால் எஸ்கிமோக்களைக் […]

விருதுகள்

This entry is part 3 of 7 in the series 5 ஏப்ரல் 2020

                                                                                             பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) அது ஓர் அடையாளம் என்பதால் ஓர் ஈர்ப்பு இல்லாமலிருந்ததில்லை இப்போது மனநிலை அப்படியில்லை அப்படியொன்றாக அதுவுமில்லை அவ்வளவுக் கடைச்சரக்காகிவிட்டது கடை சரக்காகிவிட்டது ஆம் மிகச்சாதாரணமாகிவிட்டது முகப் பாவங்களினாலேயே பாவங்கள் நிகழ்கின்றன பாவத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது மரியாதை இவ்வளவு மலிவாகவா? பெருமூச்சை தவிர்க்கமுடியவில்லை ஒரு வரவு தள்ளிப்போடப்பட்டிருக்கிறதே தவிர சிந்தைச்செலவில் தடங்கல் இல்லை அது கைகூடியோர்  எல்லாம் கையில் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள் ஒரு மந்த மனநிலையில் இப்போது அது வராமலிருப்பதும் வரவுதான் […]

பசுமை வியாபாரம்

This entry is part 2 of 7 in the series 5 ஏப்ரல் 2020

கொரானா உபயம் .கடந்த இரண்டு நாட்களாய் வழக்கமாய் காய்கறிகள் வாங்கும் கடை இல்லாமல் போய் விட்டது. கொஞ்ச தூரம் சென்று பசுமைக்காய்கறிக்கடைக்குள் நுழைந்தேன். ” இதுகளெ வாங்கறதுக்கு விசத்தியே சாப்பிடலாம் “ வெளியே வந்து கொண்டிருந்தவர் உரக்கவே முணுமுணுத்தார். “ விசகாய்கறியெ  சாப்புடறம்ன்னுதானே இங்க  வர்ரம் . இது என்ன புதுசா “ என்றேன் “ இல்லெ. இந்த வெலைய்க்கு இதுகளெ வாங்கறதுக்கு  விசம் பரவாயில்லைன்னு ஏதோ வெறுப்புலே மனசுலே வந்திருச்சு.அதுதா அப்பிடிச் சொல்லிட்டன்.நியாயமா கூட எனக்குத் தோணலே” […]

கதை அல்ல உரை

This entry is part 1 of 7 in the series 5 ஏப்ரல் 2020

ந. அரவிந்த் ஒரு நாட்டின் சிற்றரசனுக்கு ஒரு விபரீத ஆசை உண்டானது. அவன், தன் நாடு மேலும் செழிப்பாக வேண்டுமென்ற பேராசையில், நாட்டிலுள்ள   அறுபது வயதை கடந்த முதியோர்கள் அனைவரையும் காட்டிற்குள் அனுப்ப வேண்டுமென உத்தரவு போட்டான். காட்டிற்குள் அனுப்பப்படும் முதியோர்கள் மிருகங்களுக்கோ, வெயில் அல்லது குளிரினாலோ சில நாட்களில் இறந்து போவார்கள், அதனால் நிறைய உணவு மிச்சமாகும் என்பது அவன் கணக்கு. அப்படி யாராவது அரசனின் கட்டளையை மீறினால் சிறையில் தள்ளப்படுவார்களென்பதும் அரசனின் ஆணை. நினைத்ததை […]