ஐந்து மாத கர்ப்பிணிப்பெண் வைதேகி. வைகை நதிப்படுகையில் புதையுண்டு கிடந்தாள் பிணமாக. காதலித்துக் கைப்பிடித்தவன் ‘தலித்’ என்பதால் அவன் உயிர் வலிக்க அருமை மகளின் உயிரும் உடலும் வலித்துத் துடித்தடங்க ஆளமர்த்திப் பெண்ணைக் கொலை செய்து தன் ’கௌரவ’த்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள் தாய். மகனும் சகோதரர்களும் இழிதுணையாய். ’உண்டா’யிருக்கும் செய்தியைத் தாயிடம் ஆசைஆசையாய் தெரிவித்தவளை பாசாங்குப் பாசம் காட்டிப் பிறந்தவீட்டுக்கு வரவழைத்து கருவைத் துண்டாக்கும்படி கட்டாயப்படுத்தியதில் குலைந்துபோனது தாய்மையின் கௌரவம். விரும்பி வரித்தவனைத் […]
எக்மோர் ப்ளாட்பாரத்தை மின்சார ரயில் முழுமையாக அண்டிவிட நேரம் தராமல், உமா என்கிற உமா சங்கர், ப்ளாட்பாரத்தில் குதித்தபோது மணி மாலை 4.40 ஆகியிருந்தது. ஓட்ட ஓட்டமாக ஹைதராபாத் செல்லும் கச்சேகுடா விரைவு வண்டியின் ப்ளாட்பாரத்தை விசாரித்து இரண்டு இரண்டு படிகளாக ஏறி இறங்கி ரயிலை நெருங்க பத்து நிமிடம் கடந்துவிட்டிருந்தது. முகம் சுளிக்க வைக்கும் அலங்கோல சிமென்ட் தரை ப்ளாட்பாரத்தில், ரயில் திண்ணமாக நின்றுகொண்டிருந்தது. ‘ச்சாய்..ச்சாயே’ என ராகமாய் பெரிய சைஸ் எவர்சில்வர் தூக்கு ஒரு […]
(Children of Adam) (Whoever You are Holding Me Now in your Hand) இப்போது உன் கரத்தால் என்னைப் பற்றி கொண்ட நீவீர் யாராயினும் ! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா [முன்வாரத் தொடர்ச்சி] உன் உதடுகளை என் வாயோடு ஒட்டிக் கொள்ள இங்கே அனுமதிப்பேன், நீண்ட நேரமிடும் தோழனின் முத்தமுடன் ! அல்லது புதுப்பதி யிட்ட முத்த […]
சில உறவுகள், சந்திப்புகள், நிகழ்வுகள் எப்படியெல்லாம் நேர்ந்து விடுகின்றன என்று பின்னர் நினைவுக்கு வரும்போது எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பின்னர் என்று சொன்னேன். அதுவும் இரண்டு தலைமுறை களுக்குப் பின் எண்ணிப்பார்க்க சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தாலோ, வியப்புதான். இரண்டு நாட்களாக இப்படித்தான் மனம் ஒரு சுழலுக்குள் ஆட்பட்டு சலித்து வருகிறது. அது எந்த நி்கழ்வு பற்றி, யாரைப் பற்றி என்பதைப் பின்னர் சொல்கிறேன். இந்த சமயத்திய சந்தர்ப்பத்தில், இப்போதே சொல்லிவிட்டால், ஏதும் சொல்ல இருப்பவர்கள் எல்லாம் தனக்குத் […]
அத்தியாயம் 1 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் கோவையில் கடந்த டிசம்பர் மாதம் கடைசி சனிக்கிழமை பேச அழைத்திருந்தார்கள். சனிக்கிழமை : 28 -12 2013 காலை 10 தமிழ்நாடு இலக்கியப்பேரவையில் திராவிட இயக்கம் அன்றும் இன்றும் இடம்: பொதுசன சங்கம் அறக்கட்டளை, நடராசா வாசகசாலை 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை 45. ஏற்கனவே, என் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் அடுத்த நாள் இருந்ததால் போவது […]
இந்த வாழ்க்கையின் எந்திரத்தனத்தை எங்கே தொலைப்பது? அது வந்து ஒட்டிக் கொள்கிற வேலம் பிசினை போல, வந்திருந்தவனைப் பார்த்தேன். பல நாள் எண்ணெய் காணாத தலை. மண்ணின் கைங்காரியத்தில் பழுப்பேறிய உடை. மலையை வாழிடமாகப் பெற்றவன். “என் வேலைய முடிச்சுடு உனக்குச் சீதாபழம் கொண்டார்ரேன்“ என்றான் தலையைச் சொரிந்தபடி. இது எங்கூட்டு வேலைக்காரி…என்று நிழற்படம் நீட்டும் போதே 32 பல்லும் சிரித்தது. சொன்ன போதே அவனிடத்தில் வெளிப்பட்டது என்ன? என்று வினா […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 52.அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்த ஏழை…… (நிறைவுப் பகுதி) வாங்க…வாங்க…இப்பத்தான் ஒங்களப் பத்தி நெனச்சேன் …அடுத்த நிமிஷத்துல நீங்களே வந்து நிக்கறீங்க… என்னங்க அது கையில ஒரு புத்தகத்த வச்சிப் படிச்சிக்கிட்டு வர்ரீங்க…இங்க கொடுங்க நான் பாத்துட்டுத் தர்ரேன்…என்னது நீங்களே படிச்சிச் சொல்றீங்களா… சரி… […]
டீ. பி. என்று அழைக்கும் நோயைத்தான் தமிழில் காச நோய் என்கிறோம். டீ. பி. என்பது ட்டியூபெர்குலோசிஸ் ( Tuberculosis ) என்பதின் சுருக்கமாகும். இது டீ. பி. நுண்கிருமியால் ( Mycobacterium Tuberculosis ) உண்டாகிறது. இந்த கிருமி காற்றினால் பரவுவது. அதனால் வியாதியால் பாதிக்கப்பட்டவர் பொது இடங்களில் இருமினால் சுற்றிலும் இருக்கும் பலருக்கும் தோற்று உண்டாகும். வீட்டில் ஒருவர் இருமிக்கொண்டிருந்தால் குடும்பத்தினர் அனைவருக்கும் பரவும். வியாதி உள்ளவர் இருமி சளியை வீதியில் துப்பினால் […]
சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை –27 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படங்கள் : 56 & 57 [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and […]