காலம்

This entry is part 32 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

மதிப்பிழந்த என் சுயத்தை வெறுமென வேடிக்கை காட்டும் பொருளாக மாற்றியமைக்க இயன்ற வரை முயல்கிறது என்னை அறியப்படாத காலம் ஒன்று . தன்னை நிருபணம் செய்வதற்கு சுயத்தை ஒன்றுமில்லாமல் செய்வதை வேடிக்கை பார்க்கிறது என்னை அறிந்து வைத்துள்ள காலம் ஒன்று . சுய அங்கீகாரம் அச்சில் பெறுவதில் இல்லை என்பதை உணர செய்கின்ற காலம் இன்னும் தோன்றியிருக்கவில்லை . காலங்கள் இணைத்துள்ள என்னை பெருவெளி மட்டுமே அறியக்கூடிய சுயத்தை பெற்றிருக்கிறேன் . வளத்தூர் தி.ராஜேஷ் .

மறைபொருள் கண்டுணர்வாய்.

This entry is part 31 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

காலையில் புது புடவையணிந்து பளிச்சென்று கிளம்பியபோது ராதிகா நம்பினாள்.அது ஒரு இனிய நாளாக இருக்க வேண்டும் என்று. அன்று விடுப்பு எடுத்திருக்கலாமே என்று அவள் கணவன் கூறியதை மறுக்க இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது அன்று முடிக்க வேண்டிய முக்கியமான அலுவலக வேலைகள். இரண்டாவது, யாரும் உடனில்லாமல் அவள் மட்டுமே வீட்டில் தனித்திருக்க வேண்டும். அவள் பள்ளியில் படிக்கும்போது “வீட்டில் சாமி கும்பிடறாங்க!, கோவிலுக்கு போறோம் , பாட்டிக்கு உடம்பு சரியில்ல” என்றெல்லாம் எடுத்த விடுமுறைகள் இப்போது […]

கூடு

This entry is part 30 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தற்செயலாய் ஒரு குருவிக்கூட்டைக் கண்டேன் என் பிம்பங்களை பிரித்து மேய்ந்துவிட்டது நான்கு முட்டைகள் ஒன்று உடைந்து பிறந்திருக்க அதன் கண்கள் திறக்கவில்லை இறகுகள் இல்லாத பச்சைக்குழந்தை மூக்கு இன்னும் வளரவில்லை அதற்கு உணவூட்ட துடித்த தாயின் அன்பை அனுபவத்தை, ஆசையை எந்த கடவுள் கற்றுகொடுத்தான்? முத்துசுரேஷ்

சகிப்பு

This entry is part 29 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

உறவினர் எவரேனும் வந்தால் நலம் விசா¡¢க்கும் முன் கேட்பது உங்க ஊர்ல மழை உண்டா என்று மழைக்காக மேகத்தை பார்ப்பதும் வானத்தை வெறிப்பதுமாய் பல நாட்கள் வாடிப்போனதுண்டு மழை மட்டும் இல்லாவிட்டால் உலகில் எந்த ஒரு வேலையும் நடக்கதென நினைப்பதுண்டு கொளுத்தும் வெயிலையும் படுத்தி எடுக்கும் வெக்கையையும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை பெரும்பாலான நேரங்கள் இல்லாத மழைக்கான ஏக்கத்திலேயே கழிந்து கொண்டிருந்தது எப்போது விதைப்பது எப்போது வளர்வது எப்போது அறுவடை செய்வது அதற்கெல்லாம் மழை எப்போதெனும் எதிர்பார்ப்பு ஓங்கியிருந்தது […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)

This entry is part 28 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி) ‘ஆர்வி’ என்கிற – 1950 -80 களில் பிரபலமாக விளங்கிய திரு ஆர்.வெங்கட்ராமன் என்கிற எழுத்தாளரை இன்றைய தலைமுறையினரில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ‘கலைமகள்’ ஆசிரியர் குழுவில் முக்கிய உறுப்பினரான அவர் அற்புதமான ‘கதை சொல்லி’. ‘சுதேசமித்திரன் வார இதழி’ல் அவர் எழுதிய ‘கனவு மயக்கம்’ தொடர்நாவலையும், தனி நூலாக வந்த திரை உலகப் பின்னணியில் அமைந்த ‘திரைக்குப்பின்’, ‘யுவதி’ மற்றும் வரலாற்று நாவலான ‘ஆதித்தன் காதல்’ போன்ற […]

வெறுமை

This entry is part 27 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் மருள் பார்வையில் மயங்கி புடவையின் நுனி பற்றி இழுத்தும் கவனம் கார் கண்ணாடியிலும் சிக்னல் விளக்கிலும் … கைசேர்த்த காசுகள் ஒரு பாலாடை பாலுடன் சிறிது மதுவும் ஊற்றி மயக்கத்தை உறுதிபடுத்தி வாகன ஊர்வலத்தில் இடைசெருகி மாலை நேர கணக்கு முடித்து கமிஷன் வாங்கி சேயை அதன் தாயிடம் சேர்க்கையில் கண்ணில் நிழலாடியது தன்னை விற்றுப்போன தாயின் முகம் ….. – கவிப்ரியா பானு

ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.

This entry is part 26 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல். _________________________________________ நாள் : 13/08/2011 சனிக்கிழமை நேரம் : மாலை 5.30 மணி இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட் 6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78 ( பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) ___________________________________________________ தலைமை பேராசிரியர்.இராமகுருநாதன் பங்குபெறுவோர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுத்தாளர் நடிகர் பாரதிமணி பன்முக எழுத்தாளர் சங்கரநாராயணன் (எ) கேபிள் சங்கர் ஏற்புரை எழுத்தாளர் தமிழ்மகன் அனைவரும் வருக! பேச […]

பொம்மை ஒன்று பாடமறுத்தது

This entry is part 25 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஹெச்.ஜி.ரசூல் குரலைத் திருடியது யாரென்று தெரியவில்லை பொம்மை ஒன்று பாடமறுத்தது பொம்மையின் பேச்சு எப்படி இருக்கும் பொம்மைகள் விளையாடிக் கொண்டிருந்தன பூக்களைதலையில் சூட்டியும் நாசியால் முகர்ந்தும் குழந்தைகளை இடுப்பில் தூக்கியும் முத்தம் கொடுத்தும் துப்பாக்கிமுனைகளை துடைத்தும் சுடுவதாய் பாவனை செய்தும் பொம்மைகள் பொம்மைகளாய் இருந்தவரை பொம்மைகளின் விளையாட்டில் படைக்கப்பட்ட உலகம் யாருக்கும் வசப்படாதது பார்ப்போருக்கும் கேட்போருக்கும் பொம்மையின் பேச்சு பிடிபடுவதாக இல்லை இடியோசை கேட்டும் மின்னல்களைப் பார்த்தும் பொம்மைகள் பயப்படவில்லை ஏற்கெனவே அறிமுகமான பொம்மை ஜின்களின் தலைகளில் […]

காற்றும் நிலவும்

This entry is part 24 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

குமரி எஸ். நீலகண்டன் சிதறிக் கிடந்த கருமேகங்களைக் கூட்டி அதற்குள் மறைந்து மறைந்து போனது நிலா. காற்று அந்த கருந்திரையைக் கலைத்துக் கலைத்து நிலாவின் முகத்தை நிர்வாணமாக்கியது. கருந்திரை எங்கோ பறந்து போக முகம்மூட ஆடை தேடி மிதந்து சென்று கொண்டிருந்தது நிலா. நிலவுடன் காற்று காதல் விளையாடிக் கொண்டிருக்க… மேகத்தைக் கலைத்து மழையைக் கொண்டு சென்று விட்டதாக காற்றைக் கடுமையாய் திட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர் பலரும்.

நானும் ஸஃபிய்யாவும்

This entry is part 23 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தெரிந்தெடுத்த பூக்கள் கொய்து வரிந்து கட்டிய செண்டாய் என் – வீட்டினர் மத்தியில் கலி ஃபோர்னியக் கைக்குழந்தை ஸஃபிய்யா அள்ளியணைக்க கொள்ளையாசை! அம்மாவின் கைகளினின்றும் அட்சரம் விலகினாலும் அழுதது ஸஃபிய்யா அப்பனின் முகமும் அலைபாயும் கண்களுமென… எதையோ… யாரையோ… தேடிய ஸஃபிய்யா நிலா, பொம்மை, பூக்கள், புத்தகம், பூனை, பல்லி எல்லாம் புறக்கனித்து எதையோ… யாரையோ… தேடிய ஸஃபிய்யா சட்டென உதித்தொரு யுக்தி. கைகள் ஏந்தி… கண்கள் பார்த்து… சொன்னேன்…மந்திர வாக்கியமொன்று- தாவி வந்தது ஸஃபிய்யா அள்ளியணைத்து […]