தொடுவானம் 82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்

This entry is part 23 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் தமிழ் நாட்டு வரலாற்றில் சரித்திரப் புகழ்மிக்க தரங்கம்பாடியில் நான் தங்கியிருந்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் வரலாற்றை ஓரளவு தெரிந்து கொண்டேன். தரங்கம்பாடியை டேனிஷ் நாட்டவர் ஆண்டபோது காரைக்காலை பிரான்ஸ் நாட்டவரும் நாகப்பட்டினத்தை போர்த்துகீசியரும் ஆண்டுவந்துள்ளனர். அப்போது ஆங்கிலேயர்கள் சென்னையில்தான் இருந்துள்ளனர்.இவ்வாறு தமிழ் நாட்டின் கடற்கரையை மேல் நாட்டவர் வாணிபம் செய்ய வந்து கூறுபோட்டிருந்தனர்! இதே கடற்கரையில்தான் தமிழரின் பெருமை கூறும் பூம்புகாரும் இருந்ததுள்ளது. அப்போது ரோமாபுரிவரை சோழர்கள் சென்றுவந்துள்ளனர். ரோமர்களும் கிரேக்கர்களும் […]

புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்

This entry is part 24 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

லதா ராமகிருஷ்ணன் (புத்தனின் விரல் பற்றிய நகரம், கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்) பலவகையான ’ஆட்கழிப்பு’ உத்திகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்த நாடுகளிலும் நவீன தமிழின் தனிப்பெருங் கவியாய்த் தங்களை அடையாளங்காட்டிக்கொள்ள அலைக்கழிந்துகொண்டிருக்கும் சிலரைத் தாண்டிய அளவில், தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் கணிசமாகவே உண்டு. சமீபத்தில் தோழமைப் பதிப்பக வெளியிட்டுள்ள கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த […]

இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை

This entry is part 25 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்க இயக்குனர் மிஷ்கின் முன்வந்துள்ளார். இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும் பணம் முழுக்க தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளுக்காகவே இயக்குனர் மிஷ்கின் கொடுக்க முன்வந்துள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகிய இரண்டு துறை சார்ந்தும் எதிர்வரும் செப்டம்பர் 26, 27 (சனி, ஞாயிறு) இரண்டு நாட்களும் சென்னையில் இந்த பயிற்சிப் பட்டறை நடக்கவுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் நண்பர்களுக்கு […]

சினிமாவுக்கு ஒரு “இனிமா”

This entry is part 26 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

ருத்ரா இளம்புயல் ஒன்று கோலிவுட்டுக்குள் தரையிறங்கி இருக்கிறது. குறும்படங்களை குறும்படங்களாகவே எடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி குறுநெடும்படமாக்க எடுத்து குவிக்கிறார்கள். மொத்த அண்டாவில் கதை அவியல் வேகிறது. சில மிளகாயை கடிக்கும். சில ஜிகர்தண்டாவில் சாம்பார் வைக்கும். சில குள்ளநரிக்கூட்டக் குருமா வைத்திருக்கும். சில பெருங்காய டப்பாடக்கர் என்று இருக்கும். தலைப்புகள் கூட‌ ஒண்ணாய் ஒடக்காம் அடிச்சி ஒண்ணுக்கு பெஞ்சதை கதைக்கு சூட்டப்பட்டிருக்கும். அப்புறம் அவங்களுக்கே நாற்றம் சகிக்காமல் “ஒண்ணாப்படிச்சதை” தலைப்பாக்கியிருக்கும். “மொசக்குட்டி”..”தெஹிடி”..என்று வடிவேலுக்கள் […]

பெண்ணே

This entry is part 2 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

=ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு நூல்கள் ஆயிரம்..ஆயிரம்.. ஆனாலும் உன் வளையல் சத்தங்களுக்கும் மல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும் மாங்கல்ய மாஞ்சாக்களின் கண்ணாடித்தூள் அறுப்புக்காயங்களுக்கும் இங்கே எழுதாத இதிகாசங்கள் எத்தனையோ? எத்தனையோ? பிறப்பு எனும் பிரபஞ்ச வாசலில் மாணிக்கவெளியின் மாயக்கணிதப்புதிரை நீ விடுவிக்கின்றாய். ஆனால் இந்த மண்ணின் பாஷ்யங்கள் பிறப்பை தீட்டாக்கி மோட்சத்தை தேடுகின்றன. உலகத்திலேயே கடைந்தெடுத்த போலித்தனம் அல்லவா இது! தங்களுக்குள்ளேயே பூட்டிக்கொண்டு விடுதலைக்கு வீறிடுகின்ற‌ குரல்களில் தான் ஆத்மா முதன் […]

சிறார்களுக்கான கதை. சுத்தம்:

This entry is part 1 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

மணி கிருஷ்ணமூர்த்தி குழந்தைகளே, தொப்பி விற்பவன் தூங்கும்போது குரங்குகள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்ட பிறகு அவன் ஒரு தந்திரம் செய்து அவற்றையெல்லாம் திருப்பி வாங்கின கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். வாருங்கள் “அதுக்கும் மேலே” ஒரு கதை பார்க்கலாம். வத்தலகுண்டு வத்தலகுண்டுன்னு ஒரு ஊராம், அந்த ஊர்ல ஒரு பஸ் ஸ்டாண்ட் இருக்குதாம். பஸ் ஸ்டாண்ட்ன்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு? பஸ்ஸெல்லாம் இங்கிருந்துதான் எல்லா ஊருக்கும் போகும், வரும். இப்போ “தூய்மையான பாரதம்”ன்னு சொல்றாங்களே அதப்பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா, தெரிஞ்சுக்கனும். […]