அழகர்சாமி சக்திவேல் அந்தக் குடிசையை விட்டு, ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என. நான் தவியாய்த் தவித்தேன். தங்கம்மா, “என் உடம்பு, உங்களுக்கும் வேணுமா சின்ன ராசா?” என்று கேட்ட கேள்வியில், நான் நிலைகுலைந்து போனேன். “இல்லை தங்கம்மா” என்று பலமாகத் தலைஆட்டினேன். தங்கம்மா, என்னை ரொம்பநேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். ஒரு, தர்மசங்கடமான நிலையில், நான், தலைகுனிந்து கொண்டேன். “சின்னராசா.. மத்தவங்க மாதிரி, என்னை ஒழுக்கம் கெட்டவளா, நீங்களும் நினைச்சுட்டீங்களா சின்னராசா? கண்ணால காண்பதும் பொய், காதால கேட்பதும் […]
அழகியசிங்கர் க.நா. சுப்ரமணியம் 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்தார். ஒரு குறிப்பு வலங்கைமானில் பிறந்தார் என்கிறது. இன்னொரு குறிப்பு சுவாமிமலையில் பிறந்தார் என்கிறது. 16.12.1988 அன்று அவர் புதுதில்லியில் அமரரானார். சென்னையிலிருந்து தில்லிக்குப் போன க.நா.சு பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்தார். தில்லிக்கே குடிபோன க.நா.சு சென்னைக்கு வந்தபோது அவரை ஒரு பத்திரிகையாளர் காரணத்தைக் கேட்டார். தமிழ்நாட்டில் செத்துப் போகலாமென்று வந்தேன் என்று கூறினார். ஆனால் அவர் […]
குழந்தைக்கு ஜுரம் – 7 “மனைவி சொல்வதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக்கொண்டு வந்தது” முதல் நாலு வரிகள் இவை . விதையை ஆழப் புதைக்கிறார். அது விருட்சமாகத் தலையெடுக்கிறது. ஒரு குறிப்பு: கீழ்வரிகளில் கதை சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. விமரிசனத்தில் கதைச் சுருக்கத்துக்கு அவ்வளவு வேலை இல்லை என்று நினைப்பவன் நான். ஆனால் இங்கே அதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அது பின்னால். சரவண வாத்தியார் ஸ்கூலில் வேலை […]
சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் தாக்கியிருக்கிறது சிலரை நிர்வாணமாக்க முயன்று என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது என் நாட்காட்டியின் இன்றைய தாளையே கிழித்திருக்கிறது என் எழுத்தையே அமிலமாய் எரித்திருக்கிறது அவிழ்க்க வேண்டிய முடிச்சுக்களை இறுக்கி யிருக்கிறது விடை சொல்லாமல் வினாவாகவே நின்றிருக்கிறது முளைவிதைக்கு வெந்நீராகி யிருக்கிறது நெய்து முடித்த பட்டுச்சேலையில் தீப்பொறியாய் விழுந்திருக்கிறது ஊமைக் காயங்களால் பலரை ஊனப்படுத்தி யிருக்கிறது சுகமான பயணத்தை […]
குணா கேட்டு பார்த்ததுண்டு அகழ்ந்ததையும் கேட்டதுண்டு மூதாதோர் எழுதியதை பானையின் சில்லுகளை செங்கற் செதிலுகளை தாழி கூட்டங்களை தடுமாற்ற எழுத்துகளை சிக்கி முக்கி தேடி நின்றார் பத்திரமாய் மூலம் கண்டார் அற்புதங்கள் சொல்லி நின்றார் கதைகள் பலவும் சொன்னார் அடுத்து வந்தவரோ காகிதக் குவியல்களை காணாமல் செய்திட்டார் அத்தனையும் மரமென்றார் நானெழுத தலைப்பட்டேன் பதிப்பதற்கு கல்லும் இல்லை எழுதி வைக்க ஓலையில்லை மரம் தந்த காகிதமில்லை சில்லுப் புரட்சியின் சிப்பென்றார் கையடக்க செப்பேடு நூலகத்தை கொள்வதோடு வரலாறும் […]
செவல்குளம் செல்வராசு 1. நேத்து சாமக் கொடையில் ஊருக்கெல்லாம் குறி சொன்ன சாமியாடிப் பெரியப்பாவை காலையில் திட்டித் தீர்த்தாள் பெரியம்மா. “இருபத்தொரு நாள் எப்படித்தான் இல்லாமக் கிடந்தானோ விடிஞ்சதும் போயிட்டான் பிராந்தி கடைக்கு சாத்திரம் சொன்ன பல்லி கழனிப் பானையில விழுந்துச்சாம்” 2. புத்தக லயிப்பிலும் பேனா எடுக்க எழுந்திரிக்காத சோம்பலிலும் குறிக்காமல் விட்ட ஒரு வார்த்தையை திரும்பத் தேடுகிறேன் கிடைக்கவேயில்லை பிணவறை பற்றிய வார்த்தைதான் அது என்ன வார்த்தை அது …? 3. தூங்காத பின்னிரவில் மயானப் பயணம் பற்றி பாதி […]
வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரபாரதிமணியன் நாவல்கள்/படைப்புகள் பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதியக் கட்டுரைத் தொகுப்பான ” சுப்ரபாரதிமணியனின் நாவல்கலை “ என்ற நூல் இவ்வாரம் இடம்பெறுகிறது., இந்நூலின் தொகுப்பாளர் : மதுராந்தகன் அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. கனவு நூலகத்தில் வெளியீடு நடைபெற்றது. இந்நூலில் கீழ்க்கண்டவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 200 பக்கங்கள் கொண்டது இந்நூல் கட்டுரையாளர்கள் : ஆர்.நல்லகண்ணு/ கோவை ஞானி /ஜெயமோகன்/நகுலன்/பிரபஞ்சன்/ ஜெயந்தன்/காமு/ ப […]
கடல்புத்திரன் அடுத்தநாள், அயலுக்குள் ஒரே களேபரமாக இருந்தது. இரவு போல, தீவுச் சென்றிக்கு சென்ற திலகன் எம் 80 கண்ணி வெடியை செக் பண்ணும் போது தற்செயலாக ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்திருந்தான். அவனோடு நின்ற ஒருத்தன் இறந்து போனான்.சீரியசான அவனை அவசர அவசரமாக அராலித்துறை வழியாக வந்து, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டோடினார்கள். தீவுப் பெடியள்கள் சிலர் திரும்புற போது புனிதத்துக்கும் செய்தியை தெரியப் படுத்தினார்கள். மன்னி அழுது கொண்டிருந்தாள். வாசிகசாலையும் முருகேசுவும் காரைப் பிடித்துக் கொண்டு அவளை […]
செவல்குளம் செல்வராசு சுயத்தால்நேர்ந்த பாதிப்புகளின் பட்டியல் நீட்டி தேர்ந்தெடுத்த சாட்டைச் சொற்களால் விளாசித் தள்ளியதுசோதனைகளின் சஞ்சலங்களால் தூங்காமல் தவித்து சிவந்த விழிகளுடன் மறுநாளைத் துவங்கியபோது முகமன் கூறிச் சிரிக்கிறது என்ன செய்ய… 2. அந்த நாளின் ஆவலாதிகளை மனைவியிடம் ஒப்புவித்துக்கொண்டே அமைதிப்படுத்தியிருந்த தொலைக்காட்சியை வெறித்திருந்தேன் ஆறிக்கிடந்தது இரவு உணவு 3. இருவரும் பழகத் துவங்கிய ஆரம்ப நாட்களில் முன்னாள் நண்பர்களைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தோம் இப்போது அவனைப் பற்றிய புகாரைத்தான் நீங்கள் வாசித்து கொண்டிருக்கிறீர்கள் 4. விழுந்த போதெல்லாம் காயப்பட்டு காயப்பட்டு சிதிலமானது. தடுமாறாமல் இருக்க கற்றுத் தேர்ந்த போது சுயமிழந்திருந்தது நட்பு
கொஞ்ச நேரம் நடந்த பிறகு தெரிந்தது அந்த வெளி அது யாருமற்ற சுடுமணல் பிரதேசம் தனிமையின் ஏராளமான கரங்கள் என்னைத் தழுவி மகிழ்ந்தன அங்கு பசுமைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது எப்போதாவது காற்று வரும் நான் முற்றாக உறிஞ்சப்பட்டு வீசி எறியப்பட்டேன் காலம் என்னைக் கரைத்து முடித்தது இப்போது என் சுவடென மணல்பரப்பில் பாதாச்சுவடுகள் மட்டுமே அந்த வெட்டவெளி மட்டும் அப்படியே நிரந்தரமாக … *****