ப.தனஞ்ஜெயன் பச்சை மொழி காற்றிலெங்கும்புறப்பட்டுக் கலைந்துசெல்கின்றனதுருவ தேசம் சென்று திரும்பிபென்குயினின்நடனத்தில்குளிர் அருந்திப் பேசுகின்றன மஞ்சள் வானம் பார்த்துரசித்த எலியிஸ் குயினென்சிஸ்ஆப்பிரிக்கத் தோட்டமாய்ஆடி நின்றுவான் விலக்கும் குடிசையில்ஏழ்மை மொழி பேசி வழிகின்றனஉலகெங்கும் நிரம்பிவழிந்தோடும் குருதிகளின்கால்வாய்கள்வறண்டு போய் திகைக்கிறது மண் எழுதும்மானுடமாய் பிணவாடை வீசும்ஆஷ்விட்ஸ் அடக்குமுறைகள் உலகெங்கும் கட்டியெழுப்பியஅதிகாரம்துருவம் தேடி அலைகிறது உலகை விழுங்கும் கருநாகமொன்றாய்வாய்த்திருந்து உள்ளிழுக்கசடங்கின்றிஉள் சேரும் உடல் பூவாய்கனக்கிறது காற்றெங்கும் விஷம் வீசகூண்டுக்குள்நிறவேடம் நடந்தேறி நின்றிருக்கஎதிர்வினைகள் கலக்கிறது இயேசுவின் மூன்றாம் நாள்இங்கு இல்லைபுத்தனின் மௌனத்தில்அமைதியில்லைபிறையின் ஒரு பகுதிஉடைந்த துகள்களில்நட்சத்திர முகங்கள் பார்த்து […]
செல்வராஜ் ஜெகதீசன் ஆச்சரியமாக இருந்தது, பத்து மணி ஆகியும், சுந்தரத்திடமிருந்து ஒரு கேள்வியும் வரவில்லை. இடது பக்கம், மும்முரமாக கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சுந்தரத்தைப் பார்த்தான் ராஜன். இன்றைக்கு வேலை கொஞ்சம் அதிகம் போலிருக்கிறது, அல்லது கேள்வி கேட்க எந்த விஷயமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சுந்தரத்திற்கு விஷயம் என்று ஏதும் தேவையில்லை. வானத்தின் கீழுள்ள எது பற்றியும் கேள்வி வரும். பெரும்பாலும் ஒரு மோன நிலையில் வேலையில் மூழ்கி இருப்பவர், திடீரென்று ஏதாவது ஒரு கேள்வி […]
கோ. மன்றவாணன் நித்தம் நித்தம் எழும் வாழ்க்கை நிகழ்வுகளில் நமக்குக் கிடைத்துள்ள திரும்பக் கிடைக்காத நொடிகளைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதில். மனைவி சுவையாக உணவு சமைத்து அன்போடு பரிமாறுகிறார். எங்கோ சிந்தனையைப் பறக்கவிட்டு, அனிச்சை செயலாகச் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவுகிறோம். வாகனம் ஓட்டியவாறு அலுவலகமோ வேறு வேலைக்கோ போகிறோம். நம் மனம் வாகன வேகத்தையும் தாண்டித் தறிகெட்டு எங்கோ ஓடுகிறது. எப்படியோ விபத்து இல்லாமல் போய் சேர்ந்து […]
கோவை எழிலன் நாடகம் என்பது வெறும் சொற்களில் அமைவதன்று. ஒரு பாத்திரம் சொல்லும் சொல்லுக்கோ அல்லது செய்யும் செயலுக்கோ காட்சியில் இருக்கும் மற்ற பாத்திரங்களும் எதிர்வினை ஆற்ற வேண்டும். இது மேடை நாடகங்களில் எளிதாக இருந்தாலும், எழுத்தில் இவற்றைக் கொண்டு வருவது கடினமான செயல். ஒவ்வொரு செயலுக்கும் மற்ற பாத்திரங்களின் எதிர்வினையை வருணித்துக் கொண்டு இருந்தால் கதை ஓட்டம் தடைபடும். கம்பன் தன் காவியத்தில் இத்தகைய காட்சிகளைத் திறம்படக் கையாள்வதைக் காணலாம். சில காட்சிகளைக் கம்பன் […]
பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட வந்து பொருளும்ஒரு பொருநர்கைத் தங்கு சிலைமலை கொண்ட பொழுதுஉல கங்கள் தகைவதுதண்டமே. [161] [பொருநர்=வீர்ர்; சிலை=வில்; தகைதல்=கட்டளை இடுதல்] இவ்வுலகங்களைத் தம் தண்டாயுதத்தால் அன்னை அருளாட்சி செய்து வருகிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமான் திரிபுரங்களை வெந்து பொடிபட அழித்தபோது வீரரான அவர் கையில் இருந்த வில்லாக இருந்த மேருமலைதான் அன்னையின் கையில் இருக்கும் தண்டாயுதமாகும். ===================================================================================== தடிந்த துரக குலங்கள் உரக பிலங்கள் […]
திருமங்கையாழ்வாருக்கு இவ்வுலக வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதால் திருவிண்ணகரில் கோயில் கொண்டிருக்கும் பெருமானிடம் தன் கருத்தைச் சொல்கிறார். விண்ணகர் மேயவனே! எனக்கு உன்னைக்காண வேண்டும் என்ற ஆவல் மிகுந்ததால் மனை வாழ்க்கையை வேண்டாம் என்று வெறுத்து உன்னிடம் வந்திருக்கிறேன் ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருள் எனக்கு அருளிதியேல் வேண்டேன் மனை வாழ்க்கை [பெரியதிருமொழி] (6ம்பத்து 1ம்திருமொழி1) 1462 என்கிறார். நீலமேகவண்ணா! சிவபெருமான் முப் புரத்தை எரிக்கச் […]
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்ட வர்மாவிற்கு பின் வந்த மன்னர்களெல்லோரும் பத்மனாபசுவாமியின் சார்பாக பத்மனாப தாசர்களென்றே தன்னை அறிவித்து ஆட்சி செய்தனர். அவர்களின் ஆணைகள், தீர்ப்பென எல்லாவற்றையும் பத்மனாபன் செயலெனவே அறிவித்து கடவுளின் ஆணையை அறிவிப்பவர்களாக மட்டுமே மன்னர்கள் தன்னைக் கருதினர். ஆனால் நான் இங்கு குறிப்பிடும் பத்மனாபன் வேறு. அவர் காலடி பத்மனாபன். மிகப் பெரிய சமஸ்கிருத அறிஞர். தமிழ், இந்தி. ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் என பன்மொழி வல்லுனர். சிறந்த மொழி பெயர்ப்பாளர். தமிழின் குறிப்பிடத்தக்க […]
அன்புடையீர், 23 ஆகஸ்ட் 2020 இன்று சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் காணலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பாரதியின் கடைய வாழ்வு கிருஷ்ணன் சங்கரன் அ.வெண்ணிலாவின் நாவல்- கங்காபுரம்-குறித்து ஒரு வாசகப்பார்வை – வித்யா அருண் இந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு – கிருஷ்ணன் சுப்ரமணியன் அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 – லதா குப்பா ஆற்றுப்படுத்தல்! – மீனாக்ஷி பாலகணேஷ் சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3) – ரவி நடராஜன் தீராத விளையாட்டு பிள்ளை – பார்வதி விஸ்வநாதன் ஓட்டையின் உள் ஓர் ஓட்டை – சுஜாதா தேசிகன் ‘குற்றமும் தண்டனையும்’- நாவலும், ஊரடங்கின் படிப்பினைகளும் – டேவின் டென்பி – தமிழாக்கம்: பானுமதி ந. மகரந்தம் கதைகள்: இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும் – மாக்ஸிம் கோர்க்கி – மொழி பெயர்ப்பு: ராஜி ரகுநாதன் பொம்மை – லாவண்யா சத்யநாதன் ருருவின் பிரம்மத்வாரா – ராமராஜன் […]