சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அக்கருத்தரங்கின் நிகழ்வுகள் அழைப்பிதழாகப் பின்வருகிறது. அனைவரும் வருக.
மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் மலிவுப் பதிப்பாக ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ வாங்கினேன். ஆழ்வார் பாடல்களின் கவிநயத்தை பலரது எடுத்துக்காட்டுகளில் ரசித்து, முழுதும் படிக்க விரும்பி வாங்கிய நூலை இன்னும் படித்தபாடில்லை. முறையான அறிமுகமும், வழிகாட்டுதலும் இருந்தால் ரசித்து அனுபவிக்கலாமே என்ற ஏக்கம் இருந்தது. சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சுஜாதாவின் ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூலைப் படிக்க நேர்ந்தபோது அந்த ஏக்கம் தீர்ந்தது. சுஜாதா தன் சிறுகதைகள், நாவல்களால் மட்டுமல்லாமல் திருக்குறள் புதியஉரை, […]
கணியம் பதிப்பகத்து சம்பந்தனாரின் மகள் திருமணம். என்னுடைய பதிப்பகத்தார் வீட்டுத்திருமணம். நான் எழுதுவதை எல்லாம் அவர் வெளியிட்டுத்தான் நான் எழுத்தாளன் என்று ஆனேன். அப்படியெல்லாம் இல்லை என்று நான் எப்படிப்பொய்ச்சொல்வது. எழுதியதைப் புத்தகம் என்றாக்கி ஒர் உருக்கொடுத்து க்கொண்டு வந்தால்தான் வெளியுலகம் நாம் எழுதியிருப்பதாய் சொல்கிறது. என்னத்தை நாம் அப்படி எழுதியிக்கிழித்து விட்டோம் என்பது யாருக்கும் தெரியவேண்டிய அவசியமே இல்லை. எவருக்குமே அக்கறை இல்லாத எழுத்தின் ஆழம் கனம் இவை பற்றி நாம் மட்டும் கவலைப்படுவானேன். எழுதியவன் […]
(கட்டுரை: 91) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரொளி வீசும் பெரும் பூதவுரு விண்மீன் தெரிந்தது விண்ணில் ! உஷ்ணம் ஏறும் விரைவாய் ! கன உலோகம் கதிரியக்க யுரேனியம் போல் சிதைந்து நிலைத்துவம் அடைவது ! வடிவம் பெருத்து வெடிக்கும் விண்மீன் முடிவில் ! அசுரக் காந்த ஆற்றல் கொண்ட மரண விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மக்களின் உடற் மூலக்கூறுகள் முறிந்து முடமாக்கி விடும் ! உயிரினத்துக்கு மரணம் உண்டாக்கும் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ யிங்கு வர இயலாது போயினும் அது ஓர் காரண மாகுமா நீ என்னை ஒதுக்கிட ? என் உள்ளத்தில் நீ இல்லையா என்முன் நீ நில்லா திருப்பினும் ? உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் எப்படி நீ எனை நீக்கி விட முடியும் ? வெறுப்பு மௌனத்துடன் நான் வெளியேறி விட்டாலும் வஞ்சிக்கப் படாது என் காதல் ! ஊசியால் குத்துவதை […]
காந்தியவாதியின் மகன், தில்லுமுல்லு பேர்வழி. கோடீசுவர மது வியாபாரியின் மகள் சமூக சேவகி. மதுவை வென்று, காந்தீயம் நிலைக்கும் கதையை, கிச்சு கிச்சுவோடு சொல்லியிருக்கிறார்கள் 145 நிமிடங்களில். அடிப்படையில் ஒரு காதல் கதை. ஆனால் சுவாரஸ்யமாக, சிறு வயது பகை, ஆள் மாறாட்டம், நகைக் களவு என்று சில வண்ணங்களைச் சேர்த்து, பளபள பட்டாக்கி இருக்கிறார் இயக்குனர் ஷ·பி. நடிகர்கள் தேர்வில், தலைமையாசிரியர் பட்டம் அவருக்கே. நாயகன் குஞ்சாக்கோ போபன் என்றாலும், நடிக்க வாய்ப்பு, ஜெயசூர்யாவுக்குத்தான். பெண் […]
குணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பின் துயரம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது. இறைத்தேடலை இதற்கான உபாயமாக காணவும் இது விருப்புறுகிறது. கீர்த்தனை பாடலொன்று நாயனைத்தேடி நாயனே நாயனே நாயனே என்றும், மாயனே மாயனே மாயனே என்றும், தூயனே தூயனே தூயனே என்றும், நேயனே நேயனே நேயனே என்றும் கத்திக் கத்திக் தொண்டை கட்டிச் செத்தேனே என தொண்டைகட்டி செத்த வரலாற்றை தவிப்பைச் சொல்கிறது. அகத்தீசன் சதகத்தில் காகமாய் நின்று கதறிக்கதறி அழும் என்னை கையணைத்து அருள்புரியச் கோரும்குரல் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பிரமஹம்சா எப்போதும் போலவே வந்து போய்க் கொண்டிருந்தான். ரகசியமாய் குடும்பம் நடத்திக் கொண்டுதான் இருந்தான். முன்னைக் காட்டிலும் சாஹிதியிடம் அன்பாய் பழகினான். ஓரிருமுறை எல்லோருமாய் சேந்து வெளியே சாப்பிட்டார்கள். சினிமாவுக்குப் போனார்கள். சாஹிதிக்கு எது வேண்டும் என்றாலும் சுயமாய் அழைத்துக் கொண்டு போய் வாங்கித் தந்தான். ஒருமுறை புத்தகக்கடையில் அவனுடைய நண்பன் தென்பட்டான். “என் மகள் சாஹிதி” என்று அறிமுகம் […]
மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இவ்வாரம் அனுப்ப வேண்டிய கட்டுரையை அனுப்ப முடியவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ( வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்- 40) . அடுத்தவாரம் தவறாமல் அனுப்பிவிடுவேன் சீதாலட்சுமி
டிசம்பர் மாதக் குளிரும் , பனிக் காற்றும் மூடிய கண்ணாடி ஜன்னலை தட்டிப் பார்த்து தோற்றது. இருந்தும் இடுக்கு வழியாக நுழைந்து கட்டிலில் சுருண்டு படுத்திருந்த வேதவல்லியை குளிர் ஒரு உலுக்கு உலுக்கியது.. நடுங்கியவாறே வேதவல்லி ….ஷ்….ஆ….என்று கட்டிலில் தேடி விலகிக் கிடந்த கம்பளியை இழுத்துப் போர்த்தியபடி கண்ணை மூடிக் கொண்டாள். அறையின் நீல நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளி மூடிய கண்களுக்குள்ளும் புகுந்து எழுப்பி …. “நீ தூங்கினது போதும்”ன்னு கண்ணுக்குள்ளே காவல் […]