அன்பினிய நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள் எதிர்வரும் 27-12-15, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெயீடும் நடைபெற உள்ளது. மூத்த படைப்பிலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் கலந்துகொள்ளூம் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் இத்துடன் இணைக்கபட்டுள்ளது. அனைவரும் வந்திருந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். – விழாக்குழுவினர்
சிறகு இரவிச்சந்திரன் 0 எனது பால்ய காலத்தில் எனக்கு தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்த பாட்டி வீட்டில் தான் வாசம். அப்போதெல்லாம் உஸ்மான் சாலை வெறிச்சோடி இருக்கும். ஒரே ஒரு ஒன்பதாம் நெ பேருந்து அல்லது பத்தாம் நெ பேருந்து மெல்ல கடந்து போகும். ரங்கநாதன் தெரு தாண்டியதும் ஒரு நிறுத்தம் கூட உண்டு. உஸ்மான் சாலை முழுக்க தூங்குமூஞ்சி மரங்கள் தான். அதென்ன தூங்குமூஞ்சி என்று கேட்கிறீர்களா? காலையில் சூரியன் ஒளி பட்டவுடன் விரியும் […]
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/BvrzM-BavDg https://youtu.be/PoV4qSwg7nc https://youtu.be/j1sFidXtKIU https://youtu.be/NAbcmtwyxgg https://youtu.be/t90lVO1JkGc https://youtu.be/W-gp5lapzi0 https://youtu.be/vy6dj_ZWOos https://youtu.be/Idtk16T-cyY ++++++++++ பூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள் கோளுக்குள் கோளின் குடலுக்குள் பாறைக்குள், உறங்கும் படு பாதாள ஊற்றுக்குள் நெளிந்தோடும் ஆற்றுக்குள், நிலையான ஏரிக்குள் நிரம்பியது எப்படி நீர் வெள்ளம் ? எப்போது தோன்றியது ? நூறு கோடி ஆண்டுகட்கு […]
சுப்ரபாரதிமணியன் இறந்ததைத் தின்று இருப்பதைக் காக்கும் பாறுக்கழுகுகளை பாதுகாக்கிற விழிப்புணர்வு பேரணியை திருப்பூரில் ஆரம்பித்து வைக்கிற போது டூடூ பறவை பற்றியும் நினைத்துக்க் கொண்டேன். என் உரையில் டூ டூ பற்றியும் குறிப்பிட்டேன். அந்த இரு சக்கர வாகனப்பேரணியை அருளகம் அமைப்பும் ( இயறகி பாதுகாப்பு அமைவனம்) , திருப்பூர் தகவல் தொழில்நுட்பக்கழக இளைஞர்களும் இணைந்து நடத்தினார்கள். திருப்பூரில் தொடங்கி மேட்டுப்பாளையம் கோத்தகிரி, கூடலூர், முத்தங்கா, குண்டல்பேட்டை., தாளவாடி, ஆசனூர் சக்தி வழியாக 400 கி மீ […]
லா. சா. ரா.வின் ” பிராயச்சித்தம் ” சமுத்திரத்தைக் காணச் சென்ற கண்களுக்கு கிடைத்த ஒரு வாளி தண்ணீர் தரிசனம் ஸிந்துஜா லா.ச.ரா.வின் நாவல் என்று ” பிராயச்சித்தத்”தை ஆவலுடன் அணுகும் ஒரு தேர்ந்த வாசகருக்கு , அது ஏமாற்றத்தைத் தரும் எழுத்தாகவே அமைந்திருக்கிறது . இதற்கு முன்னுரை எழுதியவர் அதை எழுதத் ” தனக்கு என்ன தகுதி உள்ளது என்று தெரியவில்லை ” என்கிறார் ! முன்னுரையை முடிக்கும் போது “இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் […]
பிரேமா மகாலிங்கம் (சிங்கப்பூர்) சிங்கையில் மிகவும் பிரபலமான ‘கண்டாங் கெர்பௌ’ மகப்பேறு மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கருத்தரித்து சிலவாரங்களே ஆன தாய்மார்களும், குழந்தை வரம் வேண்டி நம்பிக்கையோடு வந்திருக்கும் பெண்களும் அங்கே வண்ணப்பூக்களாய் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குச் சிறந்த சேவை வழங்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு தாதியர்கள் பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்துகொண்டிருந்தார்கள். டாக்டர் சத்தியநாராயணன் என்ற பெயர்ப் பலகை தொங்கிக்கொண்டிருந்த அறைக்குள் ரம்யாவும் அவளது அம்மா கௌரியும் பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் மாணவிகள்போல் பதட்டத்தோடு காணப்பட்டனர். […]
டாக்டர் ஜி. ஜான்சன் வாய்ப் புண்கள் வாய்க்குள் உள் கன்னங்களிலும், பற்கள் ஈறுகளிலும் , உதடுகளின் உள்புறமும் சிறு வட்டவடிவில் தோன்றுபவை. இவை அதிகம் வலி தரும்.இவை மஞ்சள், சாம்பல், வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களிலும் தோற்றம் தரலாம். அதைச் சுற்றிலும் சிவந்து வீங்கி அழற்சி உண்டாவதால் வலி ஏற்படுகிறது.இதனால் சாப்பிடும்போதும், நீர் பருகும்போதும் வலி உண்டானாலும், அது தற்காலிகமானதே .சிறிது நாட்களில் (சுமார் இரண்டு வாரங்களில் ) அது தானாகவே ஆறிவிடுவதுண்டு. ஆனால் அதற்கு மேலும் […]
வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது வந்தவாசி.டிசம்.19.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ்-க்கு புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார். புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி (எ) கோதண்டராமன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் […]
இரா. ஜெயானந்தன். “இதுவரை எழுதி என்ன கண்டோம் “என்று மூத்த எழுத்தாளர் மாதவன் 1994-ல் சலித்துக் கொண்டார். கூடவே, “தாசிக்கு வயசானலும் கொண்டை நிறைய பூ வைத்துக்கொள்ள ஆசைதான்” என்றும் தனது ஆசையினையும் கூறியுள்ளார். 2015-ல் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும், டெல்லிக்கும் வெகு தூரம்தான்.கூடவே, அரசியலும் நுழைந்துக்கொண்டு படாய்படுத்துக்கின்றது. திருவனந்துப்புரத்து சாலை வட்டாரத்தழிழை, மனிதர்களை உயிர்துடிப்புடன் பேசவைத்தவர் மாதவன் என்று, மலையாள எழுத்தாளர் சி.மணி கூறியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் கூட, […]
வையவன் அவர்கள் நிதி பற்றாக்குறை மற்றும் உடல் நலம் காரணமாக இந்த படக்கதை தொடராது என்று அறிவித்துள்ளார்கள். நிறுத்தத்துக்கு வருந்துகிறோம்.