பீர்முகமது அப்பாவின் பாடல்வரிகள் சிலவற்றை வஹாபிய நண்பர்கள் சர்ச்சைக்குரியதாய் முன்வைத்தார்கள். இதுநாள்வரை இப்பாடல்வர்களுக்கான விளக்கங்கள் யாராலும் சொல்லப்படாததற்கு காரணம் அவை இஸ்லாமிய இறையியலுக்கு எதிராக உள்ளதுதான் என்பது போன்று இவ்விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. தமிழ் சூபிக்கவிஞர்களின் மொழியையும், கலாச்சார நிலைபாட்டையும் புரிந்து கொள்வதில் இன்னும் தெளிவுகள் உருவாக வேண்டும். தற்போது சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்ட சில கவிதைவரிகளுக்கான சில வாசிப்புகளை கவனிப்போம். 1) நீயே புவிக்குள் ரஸூலாக வந்தாய். முதல்நிலை அர்த்தம் ரஸுல் என்பதன் பொருள் இறைத்தூதர். தூதர் […]
அந்தப் படம் லண்டன் மாநகரில் ஆயிரமாவது நாளாக ஓடிக் கொண்டிருந்தது. அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்தக் கொட்டகையில் பெரிய விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். படத்தின் கதாநாயகி நேரிலே மேடையில் தோன்றுகிறாள் என்பதால், ஒரு பவுண்ட் டிக்கெட் ஐம்பது பவுண்டுக்குக்கூட, கள்ளமார்க்கெட்டில் கிடைக்கவில்லை. கொட்டகை முழுதும் கூட்டம் பொங்கி வழிந்தது. இந்த விழாவில் இன்னொரு சிறப்பு. அகில உலக மேதை பெர்னாட்ஷா தலைமை தாங்குகிறார். அவர்தான் அந்தப் படத்திற்கு கதை அமைத்து உரையாடல்களை எழுதியிருந்தார். நடிகை மேடைக்கு வந்ததும் […]
அரங்காடல்
– செங்காளி – மறைந்த யுகத்தில் மானிடர் எல்லாம் இறைவன் அருளால் இருந்தனர் கடவுளாய் கடவுள் தாமென்ற கர்வத்தில் அவர்கள் அடக்கம் இன்றி அழும்புகள் செய்தனர். இதனைப் பார்த்த இதர கடவுளர் வேதனை மிகைப்பட வேண்டுதல் செய்திட நாடியே வந்தனர் நான்முகன் தன்னை வாடிய முகத்துடன் வந்ததைச் சொல்லிட மூவருள் செயலால் முதலில் வருபவன் ஆவன செய்வோம் அஞ்சிட வேண்டாம் தவறு செய்வோர் தெய்வத் தன்மையை அவரிட மிருந்து அகற்றி விடுவோம் தீவினை செய்பவர் திறனே போய்விடும் […]
¬¬¬ ம.காமுத்துரை அல்லியூர் அந்தப்புரத்திலிருந்தபோதுதான், சூ கூ சுகுமாறன் நம்பியாருக்கு அதிஅற்புதமான யோசனை உதித்தது. அதன்பிறகும், ஆசை நாயகிகள், அசின்பத்மினி, நயனாதிகா, த்ரிசாம்பிகா, குஷாலினி மற்றும் ஸ்ரேயாரஞ்சனி களோடு சல்லாபிக்க முடியவில்லை. அந்தப்புரமண்டபத்தின் ஆலோசனைக் கூடத்திற்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த பஞ்சதீர்த்த வாவியில் நீட்டாமல் நெளிக்காமல் படாரெனக்குளித்து, யோசனை உலருமுன், பட்டாடை வஸ்திரங்களை உடலில் பூட்டிக் கொண்டார். பாதரட்சை அணிந்து, உடைவாளை இடுப்பில் மாட்டியபோது வாசனைத் திரவியங்களோடு சேடிபெண்கள் ஓடிவந்தனர். தாமதமாக வந்த அவர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கும்படி […]
‘கணினியில் தமிழைப் பரப்பும் முயற்சியில் கடந்த 11 ஆண்டுகளாக துபாயை மையமாக வைத்து செயல்பட்டு வரும் அமீரகத் தமிழ் மன்றம் தனது உறுப்பினர்களின் மனமகிழ்ச்சிக்காக ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் ஒரு மாபெரும் ஒன்று கூடலை கடந்த வெள்ளிக்கிழமை துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் வைத்து மிகச் சிறப்பாக நடத்தியது இந்த ஒன்|று கூடல் நிகழ்ச்சியில் உறுப்பினர்களும் விருந்தினர்களும் குழந்தைகளுமாக 300 பேர் கலந்து கொண்டனர் துபாய் மற்றும் சார்ஜா நகரங்களிலிருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக […]
மலையென்றால் அது ஒன்றும் பெரிய மலையல்ல. ஒரு குன்றுதான். அதன் பின்புறம் ஒரு பெரிய தண்ணீர் டேங்க் உண்டு. ரயில்வே க்வார்டர்ஸ் முழுவதற்கும் குடிதண்ணீர் சப்ளை இதிலிருந்துதான். மலைக்குன்றின் முன்புறம் மேலே வழக்கம்போல முருகனும் கீழே பொன்னேஸ்வரி அம்மனும் அருள்பாலித்துக்கொண்டிருப்பார்கள். ஆஸ்திகப் பெருமக்களுக்கு தெய்வீகமாகவும் இளைஞர்களுக்கு ‘லவ்’கீகமாகவும் சிறுவர்களுக்கு விளையாடவும், வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கு முடிவாகவும் அந்தக் கோவிலும் டேங்கும் திகழ்ந்துகொண்டிருந்தன. கிறிஸ்தவர்களுக்கு மூன்று அழகிய தேவாலயங்கள் ஊரின் நடுவிலும், மேற்கிலும் மற்றும் வடக்குக் கோடியிலும் வழிபாட்டுக்கென இருந்தன. […]
பா வரிசை படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் மகன் எடிட்டர் பி.லெனின். பீம்சிங் அவர்களே எடிட்டராகத்தான் திரை வாழ்வுதனை ஆரம்பித்திருக்கிறார். எடிட்டர் லெனினன நான் சந்தித்தது முதலில் எடிட்டராகத்தான். அப்போது தான் அறிந்தேன் அவர் ஒரு புகழ் பெற்ற எடிட்டராக இருந்தாலும் எல்லாப் படங்களையும் அவர் எடிட் செய்வதில்லை என்று. முதலில் அவரிடம் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. புகழ் பெற்ற எடிட்டரின் மகன். அவரே அன்றைய முன்னணி நடிகர்களின் படங்களை எடிட் […]
சுசீந்தரனின் அடையாளம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. முதல் படத்திலேயே கவனம் பெற்றவர் என்பதை விட, அடுத்தடுத்த படங்களில் எந்த பாணியிலும் சிக்கிக் கொள்ளாதது தான் அவரது அடையாளம் எனலாம். வெண்ணிலா கபடிக் குழு என கிராமப் பின்னணியில் படம் பண்ணியவர், உடனே நகரம், வன்முறை என தான் மகான் அல்ல என நிருபித்தார். அடுத்தது ஆச்சர்யம்! அழகர்சாமியின் குதிரை.. விக்ரமை வைத்து மசாலாப் படம் என அறிவித்த போது ‘ ஏன் இவருக்கு இந்த […]
ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நமது புதல்வனால் புரிந்து கொண்டு நடத்த முடியாது ! நாற்காலியில் அமர்ந்து மேற்பார்வை செய்வான் பீரங்கித் தொழிலைப் புரிந்து கொள்ளாது ! அவனுக்கு அந்தத் தகுதி இல்லை. அவன் இல்லாமல் தொழிற்சாலை இயங்கும் ! அவன் நடத்தினால் அது முடங்கும் ! நான் […]