இராமகாதையில் எதிரணித் தலைவனாக விளங்குகிறான் இராவணன். மிகப்பெரிய வீரன்! முப்பத்து முக் கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், எக்கோடி யாராலும் வெல்லப்படானென்ற வரபலமும் உடையவன். ஈசன் உறையும் கயிலாயமலையைத் தன் தோள் வலியால் தூக்க முயற்சித்தவன்.திசை யானைகளோடு பொருது அவற்றின் கொம்பு களைத் தன் மார்பில் ஆபரணமாக அணிந்தவன்! இதை திசையானை விசை கலங்கச் செருச்செய்து, மருப்பு ஒசித்த இச்சையாலே நிறைந்த புயத்து இராவணாவோ! [ஆரணிய காண்டம்] சூர்ப்பணகைப் […]
குணா (எ) குணசேகரன் முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக், குவளை உண்கண் குய் புகை கழுமத் தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர், இனிதெனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே. வைசாகியிடம் பேசிவிட்டு வைத்ததும் விவேக்கின் மன ஓட்டம் மாறுபட்டிருந்தது. பிள்ளைகள் வளர்ந்து அவரவர் வழிக்கு தெளிந்த பின்னர் சற்று பரவாயில்லை. பெரியவன் கல்லூரி இறுதியாண்டு. இளைய மகள் இன்னமும் இரண்டு வருடம். இருவரும் கல்லூரி […]
“தூரப் பிரயாணத்”தில் பாலியின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தின் தாத்பர்யம் என்னவென்று அறிவது ஒரு சவாலாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு காரணத்தை வைத்து இந்த தாத்பர்யத்தைக் கணித்திருந்தால் மற்ற விசேஷ அம்சங்களை நாம் தவற விட்டிருப்போம் என்னும் உறுதியான எண்ணம் இக்கதையைப் பலமுறை படித்த பின் தோன்றுகிறது. ஜானகிராமனின் சம்பாஷணைகள் கத்தி மேல் நடப்பது போன்ற லாகவத்தைத் தம்முள் அடக்கிய வண்ணம் இருப்பது இந்தச் சிறுகதையில் விஸ்தாரமாகவே வந்திருக்கிறது. கல்யாணமாவதற்கு முன், பாலியின் நட்பில் இருந்த ரங்கு அவளுக்குத் திருமணமான பின்னும், ஏன் அவனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துவிட்ட பின்னும் […]
காப்பியத் தலைவனான இராமனின் தோள்வலியோடு, அவன் தோளழகையும் ஆங்காங்கே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன் இருகுன்றம் போன்று உயர்ந்த தோள் விசுவாமித்திரமுனிவர் தான் இயற்றப் போகும் யாகம் காக்க இராமனைத் தன்னுடன் அனுப்பும்படி தயரதனிடம் விண்ணப்பம் செய்கிறார். முதலில் மன்னன் தயங்கினாலும் குல குரு வசிட்டனின் அறிவுரையின்படி அனுப்ப சம்மதிக்கிறார். அண்ண னைப் பிரியாத இலக்குவனும் உடன் கிளம்புகிறான் , இரு குன்றம் போன்று உயர் […]
2020 கார்த்திகை மாதம்- மெல்பேன் – மல்கிறேவ் மிருக வைத்தியசாலை வசந்தகாலமாக இருக்கவேண்டும் ஆனால் இந்த வருடம் குளிர்காலமும் வசந்தமும் ஒன்றுடன் ஒன்று பிரியாது இருந்தது. அது பெரிதான பிரச்சனை இல்லை . கொரானால் மெல்பேன் நகரம் மூடப்பட்டு அல்பேட் காமுவின் பிளேக்கின் கற்பனைக்கு, 21ம் நூற்றாண்டில் நிஜமான வடிவம் கொடுக்கப்பட்ட காலம். ஆனால் மிருகவைத்தியர்கள் அவசரகால வேலையாளர்களின் பகுதியாக இருப்பதால் தொழில் செய்ய அனுமதியுள்ளது. மிருக வைத்திய நிலையத்தில் காலை பத்து மணிக்குப் பதியப்பட்டிருந்த முதலாவது […]
அழகியசிங்கர் அழகிரிசாமியின் நகைச்சுவை கதை. ஒரு நகைச்சுவை கதையை எழுதும்போது படிப்பவருக்கு அது நகைச்சுவை கதை என்ற உணர்வே ஏற்படக்கூடாது. பலர் நகைச்சுவை கதையைச் சொல்லும்போது தேவையில்லாததை நகைச்சுவை என்ற பெயரில் சேர்த்து துணுக்குத் தோரணமாக மாற்றி கதையைப் பலர் வீணாக்கி விடுவார்கள். கு.அழகிரிசாமி இயல்பாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார்.தானே கதையைச் சொல்கிறார். உண்மையில் தானே சொல்வதால் கு.அழகிரிசாமி இல்லை. ‘நான்’ என்பது ஒரு கதைசொல்லிஅந்தக் கதைசொல்லிக்குப் பெயர் கிடையாது. பெரும்பாலான கதைகளில் கு.அழகிரிசாமி இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார். “ கதைசொல்லி அவன் இருந்த மாம்பலத்திலேயே அவன் […]
(மங்கை ஆகஸ்ட், 1988 இதழில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.) ”லலிதா! ஏ, லலிதா! சீப்பைக் காணோமே?” என்று இரண்டு நிமிடங்கள் போல் சீப்புக்காக அது இருக்கக்கூடிய இடங்களையெல்லாம் ஆராய்ந்து, பிறகு சோர்ந்து போய்க் கூச்சல் போட்ட ஜனகராஜனுக்குப் பதில் கிடைக்கவில்லை. சீப்பைத் தேடி எடுக்க முடியாததால் தாமதம் விளைந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டிலும், லலிதாவிடமிருந்து தனது கூச்சலுக்குப் பதிலேதும் வரவில்லை என்பது அவனை அதிகப்படியான எரிச்சலுக்கு உட்படுத்தியது. […]
ஜெ.பாஸ்கரன். கு அழகிரிசாமியின் கதைகள் சிக்கலில்லாத எளிய கதைகள். பெரும்பாலும் ஒரு கதையை உளவியல் நோக்கில், ஒரு நேர்க்கோட்டில் மண்ணின் மணத்துடன் எழுதியிருப்பார். மாக்ஸிம் கார்க்கியின் இரண்டு நூல்களை இவர் மொழிபெயர்த்துள்ளார். அதன் தாக்கம் இவரது கதைகள் சிலவற்றில் இருப்பதைக் காணலாம். அப்படிப்பட்ட ஒரு கதைதான் “வெறும் நாய்” – முப்பது பக்கங்களில் ஒரு கதை – ஆறு பகுதிகளாக சொல்லப்படுகின்ற குறுநாவல் என்றே சொல்லலாம்! ஒரு பெரிய பணக்கார, உத்தியோக வட்டாரத்தில் செல்வாக்கு மிகுந்த டாக்டர் […]
வல்லம் தாஜ்பால் நாடறிந்த கவிஞர். கேட்டோர் பிணிக்கும் தகைமையாய் கேளாரும் வேட்ப மொழிவதாய்ப் பேசும் ஆற்றல் உள்ளவர். நகைச்சுவையோடு கருத்துகளை மனத்தில் பதியவைக்கும் கலை கைவரப் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாகப் பழகுதற்கு இனிய மனிதநேயம் மிக்க பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட கவிஞர். அவருடைய ஆறு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் ஏழாவது தொகுப்பாக, “கம்பன் கவியரங்கில்……” என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. பல கவிஞர்களின் கவியரங்கக் கவிதைகள் நூலாக வெளிவந்துள்ளன. ஆனால் நானறிந்து இதுபோல நூல் வந்ததில்லை. […]
எல்.ரகோத்தமன் அப்பாவிற்கு நிறைய சிநேகிதர்கள் உண்டென்று தெரியும். ஆனால் இவ்வளவு நண்பர்களா என்று வியந்து கொண்டது இப்போது தான். தினமும் ஐந்தாறு பேராவது அப்பாவை விசாரித்து விடுகிறார்கள். அப்பா இந்தியா முழதும் நிறைய இடங்களில் வேலை பார்த்திருக்கிறார். சுற்றியும் இருக்கிறார். ஏழெட்டு மொழிகள் அவருக்கு ஸ்லாக்யம். ஓடிஓடி சம்பாதித்தார். அந்த சம்பாத்யத்தில் சென்னையில் ஒரு வீடு. தங்கையின் திருமணம். அம்மாவுக்கு கேட்டதெல்லாம். ஆனால் அதில் பத்து சதவிகிதம் உடலைப் பேணியிருத்தால் இந்த ஐசியு தேவையில்லாமல் போயிருக்கும். இன்று […]