வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38

This entry is part 11 of 31 in the series 2 டிசம்பர் 2012

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.   சொல்வது எளிது. ஆனால் அதன்படி நடப்பது எளிதல்ல அரிமாசங்கத்தின் திட்ட நோக்கங்கள் அருமையானவைதான். உலக வரலாற்றை நன்கு ஆழப்படித்தவர்களுக்கு இது புதிதாகத் தோன்றாது. மனிதன் தோன்றி லடசக் கணக்கான ஆண்டுகளாகி விட்டன. ஆனால் மொழி தோன்றியது சில ஆயிரவருடங்களுக்கு முன்னர்தான். எழுத்தும், இப்பொழுது நாம் காணும் வடிவில் வந்திருப்பது அதற்குப் பின்னர் தான். ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் சிறந்த சிந்தனையாளர்கள் வாழ்ந்திருக் கின்றனர். அவர்கள் வழி நடத்தலில் […]

தளபதி .. ! என் தளபதி ..!

This entry is part 10 of 31 in the series 2 டிசம்பர் 2012

மூலம் : வால்ட் விட்மன் (1819-1892) (புல்லின் இலைகள்) தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஓ காப்டன் ! என் காப்டன் ! ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் ! கப்பல் தளங்கள் தப்பின சூறா வளியை ! தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு ! அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை ! வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் ! ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே ! ஓடுது பார் […]

நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.

This entry is part 9 of 31 in the series 2 டிசம்பர் 2012

நீ நதி போல ஓடிக் கொண்டிரு.. ஒரு பார்வை. நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே.. என்று நதிக்கும் பெண்ணுக்கும் ஒப்புமைப்படுத்தி ஒரு படத்தில் அர்ஜுன் பாடுவார்.  நதிக்குப் பெண் பெயரிடுவதும் நதியை வணங்குவதும் நம் பண்பாடு. நதிக்கரையோரங்களிலேயே நாகரீகங்கள் தழைத்தன. நீரின்றி அமையாது உலகு என பனிக்குடத்திலிருந்து நீர் உடைக்கும் குடம் வரை நம் வாழ்வு நீரோடு சம்பந்தப்பட்டது. மேகத்திலிருந்து மழையாய், அருவியாய், ஏரியாய், நதியாய், காட்டாறாய், கால்வாயாய், வாய்க்காலாய், குளமாய், குட்டையாய், […]

மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்

This entry is part 8 of 31 in the series 2 டிசம்பர் 2012

(மறு பிரசுரம்) தமிழ் நாட்டில் நான்கு பேர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றிருக்கிறார்கள். அந்த மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாய் மாற்ற வேண்டும் என்று போராட்டங்களும் , கையெழுத்து இயக்கங்களும் நடை பெறுகின்றன. ஒரு நவீன அரசமைப்பில் மரண தண்டனை என்பது இருக்கக் கூடாது என்பது பல சமூகவியல் நிபுணர்களின் கருத்து. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருபதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை முதலில் வழங்கப் பட்டது. இது மாதிரியான […]

நாம்…நமது…

This entry is part 7 of 31 in the series 2 டிசம்பர் 2012

முகில் தினகரன்     அப்பா அந்தத் தகவலைச் சொன்னதும் ‘ஜிவ்”வென்று சந்தோஷம் ரத்த நாளங்களில் பரவ ஆகாயத்தில் சிறகடித்தாள் நந்தினி.  ஒரு நாள்…இரண்டு நாள் கனவல்ல…கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக மனசுக்குள் பொத்தி வைத்திருந்த அந்த ஆசைக்கனவு கூடிய விரைவில் நனவாகப் போகின்றது.  நினைப்பே இனித்தது.       ‘த பாரு நந்தினி…உன்னோட விளையாட்டுத் தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு…இனிமே பொpய பொண்ணா…அடக்க ஒடுக்கமா..லட்சணமா… நடந்துக்க…மாப்பிள்ளை ரகு உனக்கு சொந்த அத்தை மகனாயிருந்தாலும் நெறையப் படிச்சவரு…அமொpக்காவில் கல்லுhhpப் பேராசிரியர் […]

பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்

This entry is part 6 of 31 in the series 2 டிசம்பர் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வாழ்வில் விருப்பம், விருப்பின்மை என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் உண்டு. இவை இரண்டும் தனி நபர், மற்றும் குழுக்கள், சமுதாயம் சார்ந்தவையாக விளங்குகின்றது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் விருப்பமும் விருப்பின்மையும் தொன்று தொட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சர்க்ரை நோய் உள்ள ஒருவரைப் பார்த்து, ‘‘ஐயா இந்த இனிப்பை சாப்பிடுகிறீர்களா?’’ என்று கேட்டால் அவர், ‘‘எனக்கு இனிப்புப் பிடிக்காதப்பா. அதோடு மட்டுமல்லாது மருத்துவர் இனிப்பைச் சாப்பிடக் […]

தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !

This entry is part 5 of 31 in the series 2 டிசம்பர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     வெகு நாட்க ளுக்கு முந்தி இருண்ட பல நடுநிசிகளில் முணுமுணுத்தேன் நானுன் காதிலே பல்வேறு சம்பவங்கள்; பற்பல ரகசியப் பாடல்கள் நான் படைத்து வைத்தவை ! “நினைவில் உள்ளதா அவை ?” யென்று வினாவ மட்டும் தான் நான் வந்துள்ளேன் மீண்டும் . இந்த நள்ளிரவின் இதயத்திலே இரண்டறப் பின்னி நிலைத் துள்ளன எனது பாடல்கள் !   ஆதலால் […]

மரண தண்டனை- நீதியின் கருநிழல்

This entry is part 4 of 31 in the series 2 டிசம்பர் 2012

முகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammed Ajmal Amir Kasab) பம்பாயின் 26/11 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரோடு பிடிபட்ட ஒரே பயங்கரவாதி. அவன் உரிய நீதி மன்ற விசாரணைக்குப் பின் , கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின் தூக்கிலிடப்பட்டு விட்டான். கடைசி வரை இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது அவன் துக்கிலிடப்பட்டது. அதைப் பற்றியும், அவன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிடாத இருண்மையும் மற்றும் அவனுக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்டத்தின் மேலான ஒரு நீதிமறு ஆய்வு(judicial […]

தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….

This entry is part 3 of 31 in the series 2 டிசம்பர் 2012

பொதுவாக இந்திய  வெகுஜன இதழ்களில் குடும்பம், திருமணம், மணமுறிவு, மன முறிவு, பிரிவு, கூடுதல் சம்பந்தமான லட்சக்கணக்கான தொடர்கதைகள் இது வரை வெளிவந்திருக்கும்.பெரும்பாலும் இந்துவா சிந்தனைகள், சடங்குகளின் மேன்மை, இந்தியர்களின் குடும்ப்ப் பெருமை பற்றி சிலாகிப்பவை . இது தமிழிலும்  சாத்தியமாகியுள்ளது.       தமிழ் மகனின்  “ ஆண்பால் பெண்பால்” நாவலில் மணமுறிவு சார்ந்த நுணுக்கமான உளவியல் சார்ந்த விசயங்கள் ஆக்கிரமித்திருருப்பதைக் குறிப்பிடலாம். பலவீனமான குடும்ப அமைப்புகளின் அடையாளம் இந்த மண முறிவு. மேற்கத்திய நாட்டுக்குடுமபங்கள் இந்த பலவீன்ங்களைக்கொண்டவை. […]

இலக்கு

This entry is part 2 of 31 in the series 2 டிசம்பர் 2012

       சங்ககால இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டத்தோ இனியனுக்கு, குறுஞ்சி நிலத்தின் கூறுகளாகக் காணப்படும் மலையும் மலையைச் சார்ந்த இடமும் மிகவும் பிடிக்கும். மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தமிழ் இலக்கியங்களை ஆழமாகப் பயின்று தமிழின் இனிமையைக் கண்டவர்.அதன் எதிரொலியாக அவரது வாழ்க்கையும் இயற்கையோடு இரண்டரக் கலந்தவொன்றாகிவிட்டது.       மலைச்சரிவில் அமைந்துள்ள தனது இரட்டை மாடி வீட்டின் ‘பல்கனி’ யில் நின்றவாறு இளஞ்சிவப்பில் காணப்படும் காலைச் சூரியனின் உதயத்தைப் பார்த்து இரசிக்கிறார். வெள்ளாடைப் […]