செலவுப் பத்து செலவுன்னா ஒரு எடத்துலேந்து வேற எடத்துக்குப் போறதுன்னு பொருள். இந்தப் பகுதியில இருக்கற பத்துப் பாட்டுகளும் அந்தச் செலவைப் பத்திப் பேசறதால இந்தப் பெயர் வந்தது. ================================================================================= செலவுப் பத்து—1 வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஆர்இடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம் காடு இறந்தனரே காதலர் நீடுவர் கொல்என நினையும் என் நெஞ்சே! `[கொய்யுநர்=பறிப்பவர்; பஞ்சுரம்=பாலைநிலப் பண்; ஆர்-அரிய; விளிப்பினும்=பாடினாலும்; ஆறு=வழி; வெரூஉம்=அஞ்சும்; இறந்தனர்=கடந்தனர்] அவன் பிரிஞ்சு போனதால அவ ரொம்பவும் வருந்திக் கெடக்கறா. […]
ஜனவரியில் வெளிவர உள்ள ‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம் நாகரத்தினம் கிருஷ்ணா ——————————————————————————– « ….. வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும், ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் […]
மதுரை வீரன் (1956) படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் பேசுவதாக ஒரு வசனம் வரும். ‘தேவாமிர்தம் தேவாமிர்தம்னு இதத்தான் சொல்லியிருப்பாகளோ?’ பழைய கஞ்சியோடு அந்த நீராகாரத்தின் கடைசிச் சொட்டை ருசித்துவிட்டு அவர் பேசும் வசனம் இது. அந்தக் காலங்களில் எங்கள் வீட்டிலும் காலையில் பழைய கஞ்சிதான். கோப்பை நிறைய கஞ்சியோடு ஓர் ஆப்பை பசுந்தயிர் விட்டு அளவாக உப்புப்போட்டு அம்மா தருவார். உள்ளங்கை முழுவதையும் நனைத்துப் பிசைவேன். கடலெண்ணையில் வறுபடும் சுண்டவத்தல் காப்பிக் கொட்டை நிறத்துக்கு வரும்போது […]
சென்னைத் தாரிணிப் பதிப்பக அதிபர் வையவன், எனது கவிதை நூல் “விழித்தெழுக என் தேசம்” என்பதை வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாறுமாறான தலைப்புகளில் என் முதற் கவிதை நூல் படைப்பு தளிர்த்து வளர்ச்சி பெறுகிறது. ஆயினும் தாறுமாறான கலப்பு உணர்ச்சிகளின் ஊடே, கவிதைகளில் நேரிய மனித நேயம் தொனிக்கவே முயற்சி செய்திருக்கிறேன்.. என் “நெஞ்சின் அலை” அடிப்புகள் மானிடத்துக்கு ஆக்க முறையில் ஏதாவது செய்யத் தூண்டுமா, தூண்டாதா என்பதை நான் அறியேன். இந்த நூலைப் […]
கோ. மன்றவாணன் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்துக்கு ஏழு வயது பெண்குழந்தை வந்து, ஒரு புகார்மனுவை உதவி ஆய்வாளரிடம் தந்தது. துணைக்குத் தன்தாயையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தது. அந்தக் குழந்தையின் பெயர் ஹனீஃபா ஜாரா. ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று வருகிறார். அக்குழந்தையின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை கட்டித் தருமாறு பலமுறை தன்னுடைய தந்தையிடம் ஹனீஃபா ஜாரா கேட்டு வந்துள்ளார். பள்ளியில் […]
[Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ [21] எழுதிச் சென்ற ஊழியின் கை ! முடிந்தது அவள் ஆயுள் என விதி மொழிந்தால் நான் ஏற்க மாட்டேன் ! முடிந்தது அவள் வினைகள் எல்லாம் என் வீட்டில் எனக் காலன் ஓலமிட்டால் நான் காதில் கேட்க மாட்டேன் […]