தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நேற்றைய தினத்திலே எனது துயரெல்லாம் வெகு தூரம் போய் விட்டது ! இப்போ தவை மீண்டது போல் தெரியுது எனக்கு ! நம்பிக் கிடக்கிறேன் இன்னும் நேற்றைய தினத்துக்கு ! இப்போது திடீரெனப் பாதி அளவு வாடிக்கை மானிடனாய்க் கூட நானில்லை ! உடலுக்கு மேல் விழுகிறது ஒற்றை நிழல் ! திடீரென நேற்றைய தின நினைவு எனக்கு மீளுது ! எனக்குப் புரிய வில்லை, என்னை விட்டு […]
ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள் என்னும் அதி அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையில், ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள் என்றார் வைரமுத்து. அது தவறு என்று நாம் நிரூபித்தோம். மேலும் அவரது கட்டுரை பறைசாற்றும் அவரது தமிழறிவைப் பற்றி 18 சறுக்கல்கள் என்று தலைப்பிட்டு விவரித்திருந்தோம். இவற்றின் தொடர்ச்சியாக ஆண்டாள் குறித்து வைரமுத்து, மற்றும் அவரது கட்டுரைக்குத் தோள் கொடுத்த நாலு பேர் சொன்ன அவதூறுகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில் கொடுப்போம். நாலு பேரில் ஒருவர் […]
தேஸூ சரித்திரகாலத்திலேயே குடிப்பழக்கத்தை கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு சத்ரியர்கள் ருசித்த ‘சுரபானமும் ருக்வேதம் சொல்லும் தேவலோகத்து‘சோமபான’மும் உதாகரணங்களாகும். நாட்டுமக்களின் ஆரோக்கியத்தைப் பற்றியோ சமூகத்தைப் பிடித்திருக்கும் குடிப்பேயைப் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்காமல் சில ;குடி’க்கதைகளைப் பேசப்போகிறோம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8000 கோடி ரூபாய்க்கு அரிசியும் 12000000 கோடி ரூபாய்க்கு மதுபானமும் விற்கப்படுகின்றதாம். இது புள்ளிவிவரம். இது பரந்து கிடக்கும் பாரதத்தில் விரிந்து கிடக்கும் விவசாயம் என்றால் மிகையாகாது. இன்று கண்ணியம் என்றால் ‘குடிப்பழக்கம்’ என்றும் குடிக்காதவன் […]
சு. இராமகோபால் விட்டது கிடைப்பதில்லை கிடைப்பது போவதில்லை தொட்டது எடுப்பதில்லை எடுப்பது கலப்பதில்லை சுட்டது சுவைப்பதில்லை சுவைப்பது வைப்பதில்லை நட்டது முளைப்பதில்லை முளைப்பது விளைவதில்லை கட்டது நிற்பதில்லை நிற்பது கற்பதில்லை ஒட்டது பிடிப்பதில்லை பிடிப்பது முடிவதில்லை கொட்டது குவிவதில்லை குவிவது மிகுவதில்லை பட்டது தொடுவதில்லை தொடுவது நகர்வதில்லை எட்டது புரிவதில்லை புரிவது தெரிவதில்லை கெட்டது ஒன்றுமில்லை ஒன்றுவது என்றுமில்லை சட்டத்தை மதிப்பதில்லை மதிப்பது விடுவதில்லை மகா ராஜாவாக வாழ்ந்து வருகிறோம்
தேவி நம்பீசன் சோம்பல் முறித்து எழும் காலைப்பொழுதுகளில் எல்லாம் அம்மா – ‘இதை’ சொல்லித்தான் வசைபாடுவாள். வியாபாரத்தில் நட்டம் வந்தபோது அப்பா – நான் பிறந்த நேரத்தைப் பழித்து ‘இதை’க் கூறியே சதா வதை செய்தது. சடங்காகி மனையில் அமர்கையில் அப்பத்தாளும் ‘இதை’ப்பற்றி எந்நேரமும் சொல்லியழுது புலம்பி தீர்த்தது. இன்னும் மீதமிருக்கும் குழந்தைத்தனம் தேடுவதால் தலை சீவி வகிடெடுக்கும் பொழுதெல்லாம் தேடுகிறேன் ‘அதை’.
-எஸ்ஸார்சி பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது ‘பச்சைக்கிளியே பறந்துவா’ அது அவர் சிறுவர்கட்கு எழுதிய கவிதைகள். என்னுடைய தேடுதல் நிறைவடையவில்லை அவரிடமே தொலைபேசியில் விசாரித்தேன்.’எனக்குத்தங்களின் கவிதைத்தொகுப்பு வேண்டும்’ என்றேன். ‘நகலெடுத்து அனுப்பட்டுமா’ என்றார்.நான் நேரில் வந்து பெற்றுக்கொள்கிறேன் அவருக்குப் பதில் சொன்னேன்.2017 ஜூன் முதல் வாரம். பெங்களூரு மாநகரின் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவள் மிக அழகான பெண் அவன் மிக அழகான ஆண் இருவருக்கும் திருமணம் முடிந்தது நாட்கள் செல்லச் செல்ல ஒருவரின் கரும் பகுதியை மற்றொருவர் புரிந்துகொண்டனர் அவள் சுதந்திரம் கண்டு அவன் கோபப்பட்டான் அவன் அறியாமை கண்டு அவள் எரிச்சல் அடைந்தாள் வாழ்க்கை இடைவெளியின் பரப்பளவு அசாதாரண நீள அகலங்களால் மௌனத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது! மனம் ஒன்றுபடாமல் அவர்களின் அழகு வெளியே பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறது வாழ்க்கை விசித்திரங்களில் நாம் ஓரிடத்தில் நிற்கிறோம் அந்த இடம் அவ்வப்போது […]
26. மாலே மணிவண்ணா மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் ஆகும். இப்பாசுரத்திற்குப் பூர்வாச்சாரியார்கள் மிகச்சிறப்பான அவதாரிகை அருளியிருக்கிறார்கள். கண்ணன் இச்சிறுமிகளிடம் பேசுகிறானாம். ”சிறுமிகளே! வியாசர் ’சாரீரகமீமாம்ஸை’ என்று பெரிய சாஸ்திரம் எழுதினார். […]
திருப்பூர் அரிமா விருதுகள் 2018 * ரூ 25,000 பரிசு திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ( 2 பிரதிகள் ), திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி மார்ச் 15 , 2018. முகவரி: 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , […]
நிலாரவி. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் ? எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச் சென்று விட்டு வந்து விடுவது என்று முடிவு செய்து கொண்டார் ராஜகோபாலன். அவரின் மனதில் கடந்த கால நினைவுகள் நிழலாடத் துவங்கின . இருபத்தைந்து வயதில் வேலை கிடைத்து சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தில்லிக்கு வந்தது . வேலையில் சேர்ந்த பின் தில்லியிலேயே தொடர்ந்து வசித்துக் கடந்த முப்பது வருடங்களில் அவர் “தில்லிவாலா”…ஆகிவிட்டிருந்தார் . […]