பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முதன்முறை மூன்று சூரியன்கள் தோன்றும் அற்புதக் காட்சிப் படமெடுப்பு

This entry is part 3 of 23 in the series 15 பெப்ருவரி 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NuXPAQOLato https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pV9R5sqRnW8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WQ2c9DB3EnU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FYOZv8dNheM ++++++++++++++++     பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரித்த முதன்மை விண்மீன்களில் கருவிண்மீன் ஒருவிதப் பூர்வீக விண்மீன் ! பரிதி விண்மீன் போல் ஒரு யுகத்தில் ஒளி வீசிக் கருவிண் மீன்களாய் நமக்குக் காணாமல் போனவை ! ஆற்றலுடன் அசுர வடிவம் கொண்ட அபூர்வ விண்மீன்கள்  ! ஆயினும் திணிவு மிக்கவை ! நியூட்ரான் விண்மீன்கள் நிறை பெருத்தாலும் உருவம் சிறுத்தவை ! ஆனால் […]

அனேகன் – திரைப்பட விமர்சனம்

This entry is part 4 of 23 in the series 15 பெப்ருவரி 2015

கொலைகாரன் ஏதேனும் ஒரு க்ளூவையாவது விட்டுவைப்பான் என்று துப்பறியும் அகராதிகள் சொல்வதுதான். கொலையானவனுக்கு மட்டுமே கொலை செய்தவனைத் தெரியும் என்கிற நிலையில் வேறெதுவும் க்ளூவே கிடைக்கவில்லை எனும்போது, கொலையை யாரும் பார்க்கவேயில்லை எனும்போது, கொலையை துப்பறியும் நிபுணரும் சுஜாதா, ராஜேஷ்குமார், சாம்பு, டி.சி.பி. ராகவன் அளவிற்கு இல்லாமல் போகும்போது, கதையை எப்படித்தான் நகர்த்துவது? கொலையானவரே எழுந்து வந்து ‘இன்னார் தான் கொலையாளி’ என்று சொன்னால்தான் உண்டு. செத்தவன் எப்படி எழுந்து வந்து சொல்ல முடியும்? பேயாக வந்து […]

உதிராதபூக்கள் – அத்தியாயம் 2

This entry is part 5 of 23 in the series 15 பெப்ருவரி 2015

இலக்கியா தேன்மொழி முரளியும் , சிந்துஜாவும் கிழக்கு கடற்கரைச்சாலையில் அந்த கடற்கரையோர ரிசார்டில் சந்தித்தபோது, மணி மதியம் 12 ஆகிவிட்டிருந்தது. ‘இப்போ என்ன ப்ளான்?’ என்றாள் சிந்து. ‘வந்தாச்சு.. மணி 12. பசிக்கிது சிந்து.. சாப்டுடலாம்’ என்றான் முரளி. இருவரும் கடலை பார்த்த திக்கில், அமர்ந்தார்கள். கடலின் அலைகள் அவர்களை விழுங்குவது போல் பொங்கி வருவதும், பின்வாங்குவதுமாக இருந்தது. உச்சத்து சூரியனின் உக்கிரத்தில் கடல் அலைகள், வெள்ளி பாத்திரங்கள் போல் மின்னின. இருவரும் சிக்கன் பிரியாணி ஆர்டர் […]

காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா

This entry is part 6 of 23 in the series 15 பெப்ருவரி 2015

  பாவலர் கருமலைத்தமிழாழன்   காதலர்கள்   நாளென்றால்   கடற்க   ரையில் கரம்கோர்த்து   உடலுரசித்   திரிவ   தன்று காதலர்கள்   நாளென்றால்   சாலை   தன்னில் காண்பவர்கள்   முகம்சுளிக்க   நடப்ப   தன்று காதலர்கள்   நாளென்றால்   சோலைக்   குள்ளே கள்ளத்தில்   முத்தமிட்டு   அணைப்ப   தன்று காதலர்கள்   நாளென்றால்   காத   லித்தோர் கடிமணம்தான்   புரியும்நா   ளாக   வேண்டும் !   மலர்கொடுத்து   புன்னகைத்து   மகிழ்வ   தோடு மணப்பதற்கு   நாள்குறிக்க   வேண்டும்   அன்று பலர்பார்க்க   வாழ்த்துகளைச்   சொல்வ   தோடு பலர்வாழ்த்த   நாள்குறிக்க   வேண்டும்   அன்று அலரெழுந்து   […]

ஆம் ஆத்மி கெஜ்ரிவால்

This entry is part 7 of 23 in the series 15 பெப்ருவரி 2015

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஜெயித்திருக்கிறது. ஏறத்தாழ அனைத்து பாஜக எதிர்ப்பு வாக்குக்களையும், ஆம் ஆத்மி கட்சி ஆதரவு வாக்குக்களையும் இணைத்து அசுர வாக்கு பலத்துடன் வெற்றி பெற்றிருக்கிறது. 32 சதவீத வாக்குக்களை பாஜக தக்கவைத்துகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 20 சதவீத வாக்குக்களை காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்திருக்கிறது. இதனால், 55 சதவீத வாக்குக்களை ஆம் ஆத்மி கட்சி பெற்றிருக்கிறது. இந்திய நடுத்தர வர்க்கத்தின் அரசியல்சாரா நிலைப்பாடுகள், கொள்கையில்லா நிலைப்பாடுகளின் இன்றைய அரசியல் உருவாக்கமே ஆம் […]

ஆத்ம கீதங்கள் –16 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! என் ஆன்மாவின் முறிவு

This entry is part 9 of 23 in the series 15 பெப்ருவரி 2015

  ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     மாளிகை அடித்தள அரங்கத்தின் கீழிருக்கும் போது ஊர்ந்து நகர்வாய் முன்போல்; ஆங்கோர் முகத்தைக் காண்பாய்; முன்பே அது உனக்குத் தென்பட்ட பழைய முகம் இல்லை தான் ! முணுமுணுப் பாயா அடிக்கடி ? வலி மிகுந்து நான் முனங்கு வதை நீ இங்கே கவனித் திருக்கிறாய் ! ஒளிவீசும் விழிகள் வெளிப்படுமோ இனிமேல் ?   மாளிகையில் வாழும் […]

Caught in the crossfire – Publication

This entry is part 10 of 23 in the series 15 பெப்ருவரி 2015

Another English book of mine – translation by me of my Tamil MadhdhaaLangaL – telecast by Director Mr. K. Balachander, on RAJ TV several years ago – has been published and released by Cyberwit.net Publishers of Allahabad, recently. It is a hilarious comedy about a good youth sandwiched between his possessive mother and his nagging […]

நேரம்

This entry is part 11 of 23 in the series 15 பெப்ருவரி 2015

பரமேஸ்வரன் மத்யமரின் அடையாளம். அவனுக்கு எல்லாமே விட்ட குறை தொட்ட குறைதான். எதிலும் திருப்தி இல்லை. எந்த செயலும் முழுமை அடைந்ததாக அவன் சரித்திரத்தில் இல்லை. படிக்கிற காலத்தில் அவன் கணக்கில் புலி. ஆனால் பள்ளி இறுதி வகுப்பில், அவன் முழுப் பரிட்சை எழுதும்போது, பாழாய் போன டைபாய்டு ஜுரம் வந்து, தேர்வையே கோட்டை விட்டான். அதனால் ஒரு ஆறு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது. நடுவில் சும்மா இருப்பானேன் என்று தட்டச்சு கற்றுக் கொண்டான். ஒரே மாதத்தில் […]

தொடுவானம் 55. உறவும் பிரிவும்

This entry is part 12 of 23 in the series 15 பெப்ருவரி 2015

  நாட்கள்தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன! இறுதித் தேர்வுகளும் நெருங்கின. பாடங்களில் கவனம் செலுத்தினேன். இடையிடையே சில சிறுகதைகளும் எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். அவை மலேசியாவில் பிரசுரம் ஆனது. கல்லூரியின் இன்னொரு அரையாண்டு மலரில், ” மயிலோ மங்கையோ ” என்ற தலைப்பில்  இலக்கியச் சிறுகதை எழுதினேன். அது பேகன் ஒரு மயிலுக்கு சால்வைப் போர்த்தினான் எனும் புறநானூற்றுப் பாடலை வைத்து எழுதப்பட்டது. அதற்கும் நிறைய பாராட்டுகள் பெற்றேன். அன்றன்று பாடங்களை அறையில் அமர்ந்து ஆழ்ந்து […]

மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை -ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்

This entry is part 13 of 23 in the series 15 பெப்ருவரி 2015

  ஆணின் துணையில்லாமல்  வாழ்வது பெண்ணுக்கு தரும் சிரமங்கள் அளவில்லாத்துதான். தநதையின் இழப்பு அது போன்ற சம்யங்களில்  பெரிய இடிதான். அப்படியொரு பெண்ணின் அனுபவங்களை விவரித்திருக்கிறார் இடைமருதூர் கி.மஞ்சுளா இந்த நாவலில். நீதிமன்ற வாசலில் அவள் சந்திக்கும் வெவ்வேறு நபர்கள் இன்னும் வேதனை தருகிறவர்கள். விவாகரத்து முடிந்து விட்டால் போது  . நீதிமன்றத்திற்கு வந்து போகும் செலவாவது மிஞ்சுமென்று  ஏக்கப்படும் சில iபெண்கள். குழந்தைக்காக விட்டுக்கொடேன் என்று ஏங்கும் சிலர்.சில உறவுகளை நகங்களை வெட்டுவது போல் வெட்டினால்தான் இரு […]