அக்னிப்பிரவேசம்-23

This entry is part 11 of 30 in the series 17 பிப்ரவரி 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அவன் தள்ளாடிக்கொண்டே வருவதை பாவனா கவனித்தாள். அவள் ஒருவினாடி மூச்சு விடவும் மறந்துவிட்டாள். அவளுக்குத் துக்கம் வரவில்லை. அதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வளவு போதையிலும் ராமமூர்த்தி தெளிவாய் பேசினான். “ஏய், கடிதம் ஏதாவது வந்ததா?” “உங்களுக்கு எதுவும் வரவில்லை. எனக்குத்தான் எங்க அப்பா எழுதியிருக்கிறார்.” சுருக்கமாய் சொன்னாள். “பணம் அனுப்பினானா?” “இல்லை.” “எப்போ அனுப்புவானாம்?” “அனுப்பமாட்டார். அனுப்ப வேண்டாம் என்று கடிதம் எழுதிவிட்டேன்.” “ஏன்? எதற்காக?” […]

ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்

This entry is part 10 of 30 in the series 17 பிப்ரவரி 2013

பஷீரைப் போல என்னை ஈர்த்த இன்னொருவர் தோப்பில் முகம்மது மீரான். இவரது சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். குமரி மாவட்டத்தின் சொல்வழக்கில் மிக அற்புதமான கதைகள். ஒரு குட்டித்தீவின் வரைபடம். இதை வெளியிடுவதை எஸ். பொ அவர்கள் ஒரு பேறாகவே கருதுவதாக குறிப்பிட்டு இருந்தார்கள். இதைப் படித்ததையே ஒரு பேறாகக் கருதுகிறேன். சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் பஷீரின் கதைகளில் எனக்கு தரிசனம் தந்த ப்ரபஞ்சம் இந்த நாவலில் குமரி முனையாகக் காட்சியளித்தது. பஷீரின் எழுத்துக்கள் பேரன்பைப் பேசினால், தத்துவத்தைப் […]

தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்

This entry is part 9 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  27 அரிய நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. புதுவை முரசில் புதுவை சிவப்பிரகாசம்,  சாமி சிதம்பரனார், ம. சிங்காரவேலர், மாயவரம் சி. நடராசன், நாகை என். பி. காளியப்பன்,செல்வி நீலாவதி,  குஞ்சிதம், பூவாளூர் அ.பொன்னம்பலனார், எஸ்.இராமநாதன், பட்டுக்கோட்டை அழகர்சாமி, கி. ஆ. பெ. விசுவநாதன், சித்தர்க்காடு இராமையா, சாத்தன் குளம் அ.இராகவன், நாகர்கோவில் பி. சிதம்பரம் பிள்ளை, காரைக்குடி சொ. முருகப்பா, ஊ. அ. பூ. சௌந்தரபாண்டியன் மற்றும் பலரின் சொற்பொழிவுகளும், எழுத்துக்களும்; இங்கர்சாலின் கடவுள், மதம் போன்ற […]

வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)

This entry is part 8 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  இப்புவியின் சுகங்களனைத்தையும் முழுமையாகத் தங்கு த்டையின்றி அனுபவிக்கும் வகையில் துண்டாடிய புவனமதைத்   துறந்தவர் எவரோ அவரே துறவி.   சான்றோருக்கும், கவிவாணருக்கும் இடையே அங்கோர் பச்சைப்பசும்புல்வெளி இருக்கிறது; அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிறாரவர்; கவிவாணரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார்.   இருப்பினும் சந்தையில் தங்கள் தலைகளைக் கூடையில் சுமந்து கொண்டு, ”ஞானம்! விற்பனைக்கு ஞானம்!” எனக்கூவித் திரியுமந்த தத்துவ ஞானிகளைக் கண்டேன் யான். பாவமந்த தத்துவ ஞானிகள்’. தம் இதயத்திற்கு உணவளிக்கும் பொருட்டு தம் […]

‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு

This entry is part 7 of 30 in the series 17 பிப்ரவரி 2013

கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் ‘தலைப்பற்ற தாய்நிலம்’ எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல், இவ் வருடத்தின் முதலாவது தொகுப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். எழுநா, நிகரி பதிப்பகங்களின் இணைந்த வெளியீடாக வெளிவந்திருக்கும் இத் தொகுப்பின் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மாதங்களில் கீழுள்ள நாடுகளில் நடைபெற உள்ளது. ஏப்ரல், 2013 – லண்டன், நோர்வே மே, 2013 – கனடா, ஸ்விட்ஸர்லாந்து இலங்கை, […]

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013

This entry is part 6 of 30 in the series 17 பிப்ரவரி 2013

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,   சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், பிப்ரவரி 19,20,21 – 2013 ஆகிய நாட்களில் பெருந்தலைவர் காமராசர், முனைவர் தமிழ்க்குடிமகன், கலாநிலையம் டி.என்.சேசாசலம் ஆகியோர் பெயர்களில் அமைந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுகளும், நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.  அது தொடர்பான விவரக் குறிப்பு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் இதழில் செய்தியினை வெளியிட்டு உதவும்படி கேட்டுகொள்கிறேன்.   நன்றி   முனைவர் ஆ.மணவழகன் அறக்கட்டளை பொறுப்பாளர் பேராசிரியர் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் […]

அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …

This entry is part 4 of 30 in the series 17 பிப்ரவரி 2013

புனைப்பெயரில் ……கிருஷ்ணம்மாளும் ஜகனாதனும் , ஊழலற்ற ஜனநாயகத்திற்கான ஜேபியின் இயக்கத்தை ஆதரித்து, பீகார் சென்றனர். 1975-ல் இந்திரா காந்தி , எமெர்ஜென்சியை அறிவித்த போது நாடெங்கிலும் பல நூறு தேசிய உணர்வும், நாட்டுப்பற்றும் கொண்டோர் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவருள், அய்யா ஜகநாதனும் ஒருவர். அது பற்றி அவர் சொல்லும் போது, ”அச் சிறைவாசம் பிரிட்டிஷாரின் சிறைக் கொடுமையை விட கொடியதாக இருந்தது” என்கிறார். ஆம், அவர் பணக்கார குடும்பத்தில் […]

அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….

This entry is part 3 of 30 in the series 17 பிப்ரவரி 2013

    திண்ணை உறவுகள் தெருமுனையில் முடிந்துவிடும் என்பார்கள். நாம் சந்தித்த திண்ணையும் சரி நம் உறவுகளும் சரி முடியாமல் மரணித்தப் பின்னும் காலனை வென்ற புதுமைப்பித்தனின் கிழவியாய் அருகிலிருந்து மயிலிறகாய் வருடிக் கொடுக்கிறது.   எப்படி சொல்வேன்? “நீ இல்லை “என்பதை நீயே அறிவித்த உன் கைபேசி குறுஞ்செய்தி அப்பாவின் மரணத்தை மகள் அறிந்த தருணங்கள் இரண்டாவது முறையாக மீண்டும் அதே வலியை உணர்ந்தேன்.     எப்போதாவது பேசிக்கொள்வோம் அதை எப்போதும் நீ எல்லோரிடமும் […]

எழுத்து

This entry is part 2 of 30 in the series 17 பிப்ரவரி 2013

கைவிலங்கை உடைத்தெறிந்தால் சமூகம் அவனை பைத்தியமென சிறை வைக்கிறது விதி வெண்கலப் பாத்திரத்தைக் கூட வீட்டில் இருக்கவிடாது எத்தனை இரவுகள் நீ அருகிலிருந்தும் நான் விலிகி இருந்தேன் மனைவியை மதிக்காமல் உடைமையாக்க முற்பட்டது மனப்பிறழ்வின் ஆரம்பம் மெல்லிய லெட்சுமணக் கோட்டை தாண்டுவதற்கு தயாராகும் சீதைகள் உதிர்ந்த இலைகளையும் வானத்து விண்மீனையும் விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்தேன் காலம் அனுகூலமாக இருந்தாலும் இருபுறமும் கூர் உள்ள கத்தி ஒருவரை பலி கேட்கிறது. ————————————–

விசுவும் முதிய சாதுவும்

This entry is part 1 of 30 in the series 17 பிப்ரவரி 2013

(ஜப்பானியக் கதை) (ஜப்பானில் வழிபாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் அதே நேரத்தில், தங்கள் வேலைகளைச் செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் கதை) பற்பல வருடங்களுக்கு முன்பு, சுருகா என்ற தரிசு நில வெளியின் நடுவில் காட்டுவாசிகள் வாழ்ந்து வந்தனர்.  அதிலொருவன் விசு.  அவன் உருவம் பெரியது.  அவன் நிலத்தில் பயிர் விளைத்துத் தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் குடிசைக்கு ஒரு முதிய சாது வந்தார்.  அவனது மனைவி பெரியவருக்கு உணவளித்து […]