தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !

This entry is part 22 of 30 in the series 17 பிப்ரவரி 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா புன்னகை ஆரத்தைக் கையில் ஏந்தி நின்றாள் அவள் பன்னிற வண்ணப் பூக்கள் போல் ! கண்ணீர்ச் சுவைத் துளிகள் சொட்டும் மனச் சோர்வுக் கனிகளின் கனத்த பாரத்தை மனத்தில் நான் சுமக்கிறேன் !   அந்த அழகி திடீரென வந்து “அருகில் வா ! நாம் மாற்றிக் கொள்வோம் !” என்பாள் அவள் முகத்தை உற்று நோக்கி அதிர்வடைந்தேன் ! அவள் […]

மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.

This entry is part 21 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையினரால் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்காணி ஆய்விருக்கை சார்பில், ஆண்டு தோறும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களுக்கு கரிகாலன் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்ன. 2010 மற்றும் 2011க்கான விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவுடன் தலை நகர் குவால லும்பூரில் நடைபெறவிருக்கிறது.  இவ்விழா வரும் மார்ச் 10ஆம் நாள் காலை 9.30 மணிக்கு கிராண்ட் பசிஃபிக் விடுதியில் நடைபெறும். 2010ஆம் ஆண்டுக்கான […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45

This entry is part 20 of 30 in the series 17 பிப்ரவரி 2013

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45 சீதாலட்சுமி மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்களை ஓர் குறிக்கோளுடன் புரட்டிக் கொண்டிருந்தேன். குறியீட்டைஅணுகியவுடன் கடமையை முடித்துவிட்டோம் என்று நின்றிருக்க வேண்டும். ஆசை யாரைவிட்டது? ஒர் நெட்டைக்கனவில் மேலும் நகர்ந்தேன். காலம் என்னைப் பார்த்து சிரித்தது. என் வாழ்க்கையே ஓர் தடகளப் போட்டி.. திடீரென்றுஓர் முட்டுக்கட்டை என்னைத் தடுக்கி விழ வைத்தது. சமாளித்து எழுந்து ஓடலாம் என்று நினைத்தேன். இன்னொருதிக்கிலிருந்து வேறொரு […]

ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…

This entry is part 19 of 30 in the series 17 பிப்ரவரி 2013

மகா கணேசன் அமுதாராம் குல் மகாய் உன் தேனிரும்புக் கபாலத்தைத் துளைத்தெடுத்தக் கொடுந்துப்பாக்கிகள் இப்போது தலைகாட்ட முடியாமல் தலைகவிழ்ந்து பூமிக்கு வெளியே நிற்கின்றன ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து புஷ்கு மொழியில் கசிந்த உனது சோககீதம் உலகை உசுப்பியதற்கு விலையானதோ உன் இன்னுயிர் புர்காவிற்குள் புதைந்துபோன வாய்ப்பூட்டப்பட்ட உம்மம்மாக்களின் பேத்திகள் யாவரும் அடர்இருள் பொசுக்கும் அக்கினிக் குஞ்சுகளென அப்பதர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை. தீனும் துனியாவும் இஸ்லாத்தின் இருகண்களென்பது எப்போது இவர்களுக்குப் புரியப்போகிறது? அதுபோல் உச்சிமலைத் தேனைப் பருக மிங்கோரா நகரப் பட்டாம்பூச்சிகளுக்கு […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1

This entry is part 29 of 30 in the series 17 பிப்ரவரி 2013

        ”என்னடி யோசனை? இன்னும் கொஞ்சம் கறி போடட்டுமான்னு ரெண்டு வாட்டி கேட்டுட்டேன். பதில் சொல்லாம பெசஞ்ச சோத்தையே திரும்பத் திரும்பப் பெசஞ்டுக்கிட்டுக் கெடக்குறியே? காலேஜ்ல என்ன நடந்திச்சு?”       தனலட்சுமியின் குரல் மிக இரைந்து ஒலித்த பிறகுதான் ராதிகாவின் எண்ணங்கள் கலைந்தன.  அவள், ஒரு திடுக்கிடலுடன் தலையைக் குலுக்கியபடி, “லேசாத் தலை வலிக்குதும்மா.  வேற ஒண்ணுமில்லே. என்று கூறிவிட்டு, “கொஞ்சமாப் போடுங்கம்மா,” என்றாள்.   தலையை இடக்கையால் பற்றியவாறு. மகள் சொன்னது […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6

This entry is part 18 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் […]

வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!

This entry is part 17 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  -மேகலா இராமமூர்த்தி தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது. அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’

This entry is part 16 of 30 in the series 17 பிப்ரவரி 2013

இலக்கிய விமர்சனம் செய்வது தமிழுக்கே புதிய சரக்கு. தண்டியலங்காரம், ஒப்பிலக்கணம் இவைகளின் ஜீவிதத்தைக்கொண்டு, தமிழுக்கு இலக்கிய விமர்சனம் புதிதல்ல என்று சாதித்துவிடமுடியாது. ஏனைய நாட்டு இலக்கியங்களின் மேதா விலாசத்தோடும் த்த்துவங்களோடும நம் நாட்டின் இலக்கிய தத்துவங்களையும் அசுர சாதனைகளையும் எடை போடுவது இந்த இருபதாம் நூற்றாண்டில் தலையெடுத்திருக்கிறது. இந்தத் தலைமுறையைத் தொடங்கி வைத்தவர் காலஞ்சென்ற வ.வே.சு அய்யர் என்றே சொல்லலாம். அவருடைய ‘கம்ப ராமாயண ரசனைச்சுவை’யும், ‘கவிதை’யுந்தான் இன்றைய விமர்சகர்களுக்குப் பாதை காட்டிற்று என்றும் சொல்லலாம்.  அதன்பின் […]

வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)

This entry is part 15 of 30 in the series 17 பிப்ரவரி 2013

​ (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++     வலிமை படைத்த இசை அறிவுடன் உலவி வருகிறேன் நான் எனது மேள தாள மோடு இன்னிசைக் கருவிக ளோடு. வெற்றி வீரருக்கு மட்டும் அல்ல, நான் வாசிப்பது, தோற்றோ ருக்கும், மாண்டோ ருக்கும் வாசிப்பது நான் ! தெரியுமா அது அன்றைய தினத்தின் ஆதாயம் என்று ! தோற்பது கேவல மில்லை ! […]

செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4

This entry is part 13 of 30 in the series 17 பிப்ரவரி 2013

ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மலரும் மணமும் என்ற தலைப்பு என்று நினைவு, அதைப்  படித்திருக்கிறேன். அதில் நிறையப் பேர்களால் பாராட்டப் பெற்ற நக்ஷத்திரக் குழந்தைகள் என்ற கதையில் குழந்தையின் கேள்வியும் அதன் துக்கமும் மிகவும் செயற்கையாகத் தோன்றியது. எந்தக் குழந்தை, ”நக்ஷத்திரம் விழுந்துடுத்து, யாரோ பொய் சொல்லீட்டா அதனாலே தான்”, என்று அழும்? ஆனால் […]