என்னவைத்தோம்

This entry is part 1 of 17 in the series 1 பெப்ருவரி 2015

பாவலர் கருமலைத்தமிழாழன் முன்னோர்கள் தூய்மையாக வைத்தி ருந்த மூச்சிழுக்கும் காற்றினிலே நஞ்சை சேர்த்தோம் முன்நின்று காற்றிலுள்ள அசுத்தம் நீக்கும் முதலுதவி மரங்களினை வெட்டிச் சாய்த்தோம் பொன்கதிரை வடிகட்டி ஒளிய னுப்பும் பொற்கவச ஓசோனை ஓட்டை செய்தோம் என்னவைத்தோம் சந்ததிக்கே தன்ன லத்தால் எல்லாமும் கலப்படத்தால் கெடுத்து வைத்தோம் ! ஆயிரமாம் ஆண்டுகளாய் சேர்த்து வைத்த அடிநீரைக் குழாய்வழியே காலி செய்தோம் பாய்மரம்போய் கடல்நீரில் எண்ணெய் குண்டால் பரிதவிக்க மீன்களினைச் சாக டித்தோம் தாய்மண்ணில் உரங்களினைப் போட்டுப் போட்டுத் […]

மறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்

This entry is part 2 of 17 in the series 1 பெப்ருவரி 2015

  வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டு என்பது விளை என்றால் விருப்பம் என்றும் ஆட்டு என்பது ஆட்டம் என்று பொருள்படும். இவ்விதமான விளையாட்டுக்களின் மூலம் உடலியல், உளவியல், சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணையாக அமையும்.விளையாட்டுக்களில் நாட்டுப்புற விளையாட்டுக்கள் என்றும் நகர்ப்புற விளையாட்டுக்கள் என்று […]

காணாமல் போகும் கிணறுகள்

This entry is part 3 of 17 in the series 1 பெப்ருவரி 2015

    வைகை அனிஷ் நாகப்பட்டினம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மற்ற மாவட்ட வீடுகளை விட மாறுபட்டு இருக்கும். வீட்டின் முன்புறம் தாழ்வாரம், வீட்டிற்கு வருவபவர்களை உட்கார வைப்பதற்கு திண்ணை. மாலை வேளைஆனால் மாடக்குளம் என்ற விளக்கு வைக்கும் பகுதி. மழை நீர் வழிந்தோடும் வகையில் கட்டைகள் செய்யப்பட்டு நேரே ப+மிக்கடியில் செல்லுமாறு அமைக்கப்பட்டு இருக்கும். இவை தவிர நிலைகள் 7, 9, என்ற அடிப்படையில் அழகிய நுட்பத்துடன் பர்மா தேக்குகளில் கட்டப்பட்டிருக்கும். வீடுகளில் […]

வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்

This entry is part 4 of 17 in the series 1 பெப்ருவரி 2015

    [வையவன்]   கதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது.   திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.   சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யு மாதிரி சாவி வெளிவரத் தவிக்கிறது.   என்னடா, உபமானத்தில் அபிமன்யு என்கிறான். ஆசாமி கிழவனோ என்று தோன்றுகிறதோ?   உண்மைதான், சென்ற வருஷம் ரிட்டயர் ஆய் விட்டேன்.   நான் என்ன வேலை செய்தேன், எந்த மலையை வெட்டி எந்தச் […]

ஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !

This entry is part 5 of 17 in the series 1 பெப்ருவரி 2015

(அருகில் மரணம்) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ அவரைத் தாழ்வாக மதித்து, அவர் உன்னை மேலாக மதித்தால் இழந்த அவரது ஒளிமயம் எழுந்திடும் புதிதாய் ஒன்று சேர்ந்து ! சத்தியம் அவரது தகமை, மினுக்கும் காதலில் தோன்றும் எழில்வளம்; கனிவான சுடர் விழிகள் என்றும் காணப்படும் ! அந்தோ பரிதாபம் என்னிலை ! நினைவில் மட்டும் காதலியாய் நீ என்னைப் பார்க்கிறாய் மெல்லிய தாய்ப் புன்னகைத்து நள்ளிராக் […]

சிறு ஆசுவாசம்

This entry is part 6 of 17 in the series 1 பெப்ருவரி 2015

கட்டிலை நகர்த்தி ஜன்னல் பக்கம் போட்டுக் கொண்டதில் சில சவுகரியங்கள் இருந்தன. எழுந்திருக்கும்போது ஜன்னலின் உள்பக்க கான்கிரீட்டின் நீட்சியைப் பிடித்துக் கொள்ளலாம். கொஞ்சம் எம்பி நின்று கொள்ளலாம். தலையை முன்னால் நீட்டிப் பார்த்தால் வீதியின் மறுபக்கம் தெரியும். தெருவில் நடமாடுபவர்கள் கண்களில் தட்டுப்படுபவர்கள். வாகனங்கள் ஏதாவது விரைந்து கொண்டிருக்கும். ஆனால் எந்த சவுகரியத்தையும் உணர முடியாத அளவு உடம்பு இறுக்கமாகி விட்டதைப் போல உணர்ந்தார் மணியன். உடம்பு மீது வெறுப்பு வந்து கொண்டே இருந்தது. தூங்கினால் மூக்கின் […]

சுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு

This entry is part 7 of 17 in the series 1 பெப்ருவரி 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&v=mjTFaSRd7QU&x-yt-cl=85114404&feature=player_embedded https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&x-yt-cl=85114404&v=DSyVXmdWsdo&feature=player_embedded https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&feature=player_detailpage&v=LDVRLWhlqhk&x-yt-cl=85114404 http://video.foxnews.com/v/4017531813001/scientists-discover-ring-system-200-times-bigger-than-saturn/#sp=show-clips https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&feature=player_embedded&v=7DhiKZKo1VE&x-yt-ts=1422579428 https://www.youtube.com/watch?feature=player_embedded&x-yt-cl=85114404&v=VnrsJDhm3no&x-yt-ts=1422579428 http://www.foxnews.com/science/2015/01/28/giant-planet-boasts-rings-200-times-bigger-than-saturn/ ++++++++++++ அணுவின்  அமைப்பைக் கண்டோம் அணுவுக்குள் கருவான நுணுக்கக் குவார்க்குகள் அறிந்தோம் ! ஆனால் கோடி மைல் விரிந்த சனிக்கோளின் சுற்றும் வளையத்தை, வானத்தில் ஒளிந்த பூத வளையத்தை காணாமல் போனோம் ! அண்டவெளிக் கப்பல்களும் விண்நோக்கி விழிகளும் கண்மூடிப் போயின ! சனிக்கோளுக்குச் சாத்தி விட்ட பனித்த வெளி மங்கொளி மாலை அல்லது […]

வேற என்ன செய்யட்டும்

This entry is part 7 of 17 in the series 1 பெப்ருவரி 2015

-மோனிகா மாறன் வனீ”எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னும் எப்சியின் குரலில் அதே அன்பு.ஊர்ல இருந்து வந்திருக்கேன்டீ. எப்சி என் கல்லூரி நாட்களையும்,விடுதி வாழ்வையும் ஆக்ரமித்த இனிய தோழி.என் இளமை நினைவுகள் அவளன்றி தனித்து எதுவுமில்லை.          பெரிதாக எந்த அனுபவங்களுமின்றி சின்னஞ்சிறு ஊரிலிருந்து நகரத்திற்குப் படிக்க வந்த எனக்கு கல்லூரியும் விடுதியும் மிரட்சியாக இருந்த பொழுதில் கண்களில் பொங்கும் உற்சாகத்துடன் கிடைத்த அறைத்தோழி எப்சி. பதின் பருவ கனவுகள் எப்பொழுதும் பிரம்மாண்டமானவையே.எப்சி எனக்கு நிறைய ரசனைகளை சொல்லித்தந்தாள்..அவள் கனவுகள் […]

பொன்பாக்கள்

This entry is part 8 of 17 in the series 1 பெப்ருவரி 2015

  [ வளரி எழுத்துக் கூடம் வெளியிட்டுள்ள “பெண்பாக்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து] ஆண் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கையில் அதில் அப்படைப்பாளரை உள் நிறுத்திப் பார்க்காத வாசக உலகம் பெண் படைப்பாளி என்றால் அவரை அப்படைப்பின் மையமாக நிறுத்திப் பார்ப்பது இலக்கிய உலகின் மிகப்பெரிய அவலம். ஒரு படைப்பின் ஓட்டத்தில் வரும் உறுப்பு வருணனைகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை அப்படைப்பின் கருவைக் கொண்டே உணர வேண்டும். எழுத்தாளர் தன் கூற்றாக வெளியிடும் படைப்பில் கூட ஆண் பெண்ணாகவும், […]

வர்ணத்தின் நிறம்

This entry is part 9 of 17 in the series 1 பெப்ருவரி 2015

  – சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)   முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம்   நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம் பூசியிருக்கலாம்   வார்த்தையிலும் சில நேரம் வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்   நான்கு மூலைகளில் மஞ்சள் தடவிய திருமண அழைப்பிதழ்களில் முந்தைய தலைமுறையின் வால்களில் வர்ணங்கள் தெரிகின்றன   சிவப்பு பச்சை நீலம் அடிப்படை வர்ணங்கள் மூன்றென்கிறது அறிவியல் நான்காவது கறுப்பாக இருக்கலாம்