ரேவா * ஓர் ஒப்பீட்டிற்கு உன்னளவில் நியாயங்கள் இருக்கலாம் எளிய உண்மை ஏழையாகும் தருணம் வசதியின் வாசலில் மாவிலைத் தோரணம் குலைத்தள்ளும் சம்பிரதாயம் கூட்டிவரும் நாடகத்தில் பசை இழத்தல் காதபாத்திரத்தின் ஊனக்கால்கள் நொண்டிடும் காரணம் கருணை வேண்டிட பிடித்திடும் தோளில் வழுக்கு மரம் முன்னேறும் வாய்ப்பு பறிபோகும் நீர்மையில் ஆழ வேர்பிடித்த பாசி கற்றுத்தரும் சலனத்தில் முளைக்கிறது கடல் – ரேவா
புதர்களும் செடிகளும் மரங்களும் போய் அழகிய பெரிய பூங்கா அளவாக வெட்டிய வரிசையாய் பூச்செடிகள் விரிந்து பரவாத வகை மரங்கள் ஒழுங்கு செய்யப்பட்ட பசும்புல் விரிப்பு கொடிகள் தோரணமாய் வளைவுகள் மெல்லிய செங்கற் சதுரங்கள் மேவிய நடைபாதை ஓரங்களில் இருக்கைகள் சிறிய தூண்களில் ஒளிரும் மின்விளக்குகள் பெரியவர் குழந்தைகள் இளைஞர் ஜோடியாய் தனியாய் வண்ண வண்ண ஆடைகளில் எத்தனை எத்தனை பேர் […]
கோகிலத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு மீண்டும் குளத்தங்கரையில்தான் கிடைத்தது.அவள் என்னிடம் எதையோ சொல்ல வருகிறாள் என்பது எனக்குத் தெரியும். அது என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ள நானும் ஆவல் கொண்டிருந்தேன். அன்று பால்பிள்ளையும் நானும் குளத்தங்கரை அரசமரத்தடியில் நின்று தூண்டில் போட்டுக்கொண்டிருந்தோம்.தொலைவில் வயல் வெளியின் வரப்பில் கோகிலம் வருவதைப் பார்த்தேன்.அவளுடைய இடுப்பில் கூடை. அதில் நிறைய பசும் புல். அவர்களுடைய வீட்டில் கறவைப் பசுக்கள் இருந்தன. ” அண்ணே.. வரப்பில் கோகிலம் வருது. உங்களிடம் ஏதாவது பேசும். […]
அவளுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் பாத்திமா. ஆனால் அந்தப்பகுதியில் இருக்கும் மக்கள் அவளுக்கு வைத்த பெயர் பஜாரிம்மா. அந்தளவுக்கு சண்டைக்காரி. சண்டைக்காரி என்றவுடன் ஏதோ இரட்டை நாடி சரீரம், கர்ணம் மல்லேஸ்வரி என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அவள் சரீரம் ஒற்றை நாடிக்கும் குறைவு. ஆனால் குரல் இருக்கிறதே அது எட்டு ஊருக்குக் கேட்கும் மைக்செட் இல்லாமலே. அவள் புருஷன் இப்ராகிம் அவளுக்கு ஒன்றும் சளைத்தவனில்லை. அவனும் சண்டைக்காரன் தான். எதற்கெடுத்தாலும் கத்தியைத் தூக்குபவன். அவன் […]
மழையின் நீர்க் கால்கள் நிலத்தில் தொடும். மழை வலுத்தாலும் வலுக்கலாம். பிசு பிசுத்தாலும் பிசு பிசுக்கலாம். அது அதன் இஷ்டம். வலுத்தாலும் வலுக்கட்டாயமில்லை. நீ நனையலாம். நனையாமலும் இருக்கலாம். உனக்கென்ன கவலை? உனக்குப் பதில் நனைய உன் வீடிருக்கும். இல்லையானால் ஒதுங்க ஒரு கூரையிருக்கும். ஒரு மரத்தடியாவது இருக்கும். ஓடிப் போக முடியாமல் ஒற்றைக் காலில் மரம் தான் நனையும். […]
ப குருநாதன் பாரதி ஒரு பன்முகம் கொண்ட விந்தை மனிதர் என்பது பாரறிந்தது. ஒப்பற்ற இலக்கியவாதியாக, மகாகவியாக, தேசியவாதியாக, பத்திரிக்கையாளராக, சிந்தனையாளராக, ஞானியாக, மனிதாபிமானியாக அவர் என்றும் அறியப்பட்டவர்; அறியப்படுகிறவர். ஆனால், அவர் ஒரு தன் நிகரில்லாதத் தலைவனாகவும் இருந்திருக்கிறார் என்பது வெகுவாக அறியப்படாத, பேசப்படாத ஒன்று. ஒரு சில கூறுகளை அளவுகோல்களாகக்கொண்டு நோக்கினால், வள்ளுவனுக்குப் பிறகு, தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் தலைவனாகவும் இருந்தவர் பாரதி மட்டுமே. இன்னும் சொல்லப் போனால், பாரதி இயற்கையாகவே ஒர் […]
இயற்கை எல்லா விலங்கினங்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்தை தன்னுள்ளே உணவுச் சங்கிலியாக வைத்திருக்கிறது. அப்போது, நிகழும் பொழுதும், பசித்தால் உண்ண உணவும் மட்டுமே மனித இனத்தின் பிரதான தேடலாக இருந்தது எனலாம். இப்போது அப்படி இல்லை. மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏணிப்படி (ladder) என்ற ஒன்று இருக்கிறது. இந்த ஏணிப்படியின் ஏதாவதொரு நிலையில் தன்னை பொருத்திக்கொள்ளவே மனிதன் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. பெரும்பாலான அவனது உழைப்பு, இதற்கே போய்விடுகிறது. அதாவது, ஆதி காலத்தில் நீங்கள் பிறந்திருந்தால், […]