ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய் தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள் ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு கிட்டாரை வாசிக்கிறார்கள். அல்லது கிட்டார் வாசித்த கையோடு காணக்கிடைத்த தலையை அல்லது தலைகளை கனகச்சிதமாகக் கொய்துவிடுகிறார்கள். தன்னிசையாகக் கிளர்ந்தெழும் கோபம் பெரிதா தருவிக்கப்பட்ட கோபம் பெரிதா என்ற பட்டிமன்றங்கள் நடத்தப்படுவதேயில்லை. தேவைப்படும்போதெல்லாம் சில அன்னாடங்காய்ச்சிகளின் சிரசுகளில் கிரீடங்களைப் பொருத்துகிறார்கள் கையோடு கரும்புள்ளி செம்புள்ளிகளையும் குத்திவைக்கிறார்கள் கிட்டாரின் இனிமையான இசையின் பின்னணியில் அவர்களைத் தெருவோரமாக […]
_ லதா ராமகிருஷ்ணன் மதிப்பிற்குரிய மூத்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரர் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இடம்பெறும் இந்த நூலை சமீபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. Dr.K.S. உயிரோடு இருக்கும்போதே பிரசுரத்திற்கு அனுப்பிவைத்திருந்தார். புத்தகத்தைப் பார்த்தி ருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். இலக்கியம் – சமூக வெளிகளில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களைக் கட்டுரைக ளாக டாக்டர் கே.எஸ். எழுதி பல்வேறு தொகுப்புகளில் அவை வெளியாகியிருக்கின்றன. அவற்றி லிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளும், புதிதாக […]
நண்பர் சஃபி clinical psychologist ஆகப் பணியாற்றிவருகி றார். அவரும் எழுத்தாளரும் நண்பருமான கோபி கிருஷ் ணனும்தான் எனக்கு Psychiatry, anti-Psychiatry சார்ந்த பல விஷயங்களை, நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி அந்தத் துறை சார்ந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளையும் ஒன்றி ரண்டு நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தவர்கள். சஃபியும் நிறைய எழுதியிருக்கிறார்; மொழிபெயர்த்திருக்கிறார். இப்போது சஃபியின் முனைப்பான உழைப்பில் 1001 அராபிய இரவுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.
புதுப்புனல் (சமூக – இலக்கிய மாத இதழ்) திரு.ரவிச்சந்திரன் புதுப்புனல் பதிப்பகம் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிகைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிற்றிதழ்களின் விரிவாக்கமான இடைநிலை இதழ்கள் தோன்றியுள்ளன எனலாம். முதலில் பன்முகம் பிறகு புதுப்புனல் என்று தமிழ் இலக்கிய வெளியில் புதுப்புனல் பதிப்பக உரிமையாளர் ரவிச்சந்திரனின் பங்கு கணிசமானது. சிறுகதைத்தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கவிதைத்தொகுப்புகள், திறனாய்வுக்கட்டுரைகள் என நூற்றுக் கணக்கான நூல்களை புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழின் குறிப்பிடத் தக்க புதின எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷின் புனைவு, அ-புனைவு நூல்கள் […]
வெயிலில் காய்ந்ததைவறட்சி வாட்டியதைவெள்ளம் விரட்டியதைபுயல்கள் புரட்டியதைஎந்தத் தாவரமும் தன்பூவிடம் சொல்வதில்லை அமீதாம்மாள்
ஸ்ரீ சரண் கு சீர்த்தெழுந்து புவி பிளந்துவிதை சற்றே உயிர் பெற்றெழுந்துமுதல் சுவாசம் கண்டுமுதல் மழை உண்டுதுளிர் விட்டு தன் வருகை அறிவித்துநாலாபுறமும் விரோதம் சம்பாதித்துகரியமிலம் கொண்டு ஒளிச்சேர்க்கையதன்துணையால் ஒருவேளை உணவுண்டுதுளிர் வளர்ந்து கிளையாககிளை வளர்ந்து இலையாகசுற்றத்து மாந்தர் சுற்றி வேலி கட்டி சிறையிடசில வருடம் சிறைக்குள் கழித்துநெகிழியுடன் நெருடி அவ்வப்போதுவான் தந்த பால் வருடிஆண்டுகளின் வேகத்தால் அசுர வளர்ச்சி பெற்றுதண்டெனும் தங்கத்தால் பச்சை மேகம் தாங்கிஇடர் தந்த இம்சைக்கெல்லாம்இனிமையாய் நிழல் தந்துஎன் சுவாசம் ஈந்து உனை […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சக் குயவனின் மர்மக் களிமண்கண்ணுக்குத் தெரியாதகருமைப் பிண்டம் !கண்ணுக்குப் புலப்படாதகருமைச் சக்தி,பிரபஞ்சச் சக்கரத்தின்இயக்க சக்தி !கவர்ச்சிக்கு எதிராக நியூட்டன்புலப்படா புற இயக்கி, முதல் விதியில் எழுதி உளது .கைத்திறன் காண்பது படைப்பாளிமெய்வினை உணர்வது,தாரணிகாரண நிகழ்ச்சி அறிவது,அற்புத மனிதனின் கற்பனைமகத்துவம் ! ************** A change in velocity means, by definition, that there is acceleration. Newton’s first law says that a net external force causes […]
சாந்தி மாரியப்பன். எந்தக்குளத்தில் பூத்தாலென்ன எல்லாத்தாமரைக்கும் ஒரே மணம் எந்த உலையில் வெந்தாலென்ன எல்லா அரிசியிலும் ஒன்று போல்தான் பசி தீர்கிறது எல்லாத்தாய்களும் ஒருவளே குழந்தையின் பசி உணர்வதில் எந்தத்துறையில் முங்கினாலென்ன எல்லாத்துறையிலும் ஒரே கடல் எல்லாச்சாளரங்களின் வழியும் நுழைகிறது காற்று உன் என் வியர்வையை ஆற்ற எல்லாமும் சேருமிடம் ஒரு புள்ளியில் பரந்து பிரிவதும் அங்கிருந்தே பலவற்றிலிருந்து ஒடுங்கியிணைந்தவையெலாம் சிதறிப்பறக்கின்றன ஒன்றுதான் ஒன்றுதான் என்றபடி — அன்புடன்,
தில்லிகை மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும்ரொமிலா தாப்பரின் எதிர்ப்புக்குரல்கள் நூல் அறிமுக நிகழ்வு வரவேற்புரைத.க. தமிழ்பாரதன்தில்லிகை. நூல் அறிமுக உரை : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைகழகம். நூலாசிரியர் உரை :பேரா. ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர். நன்றியுரை:செவாலியே கண்ணன் சுந்தரம்,காலச்சுவடு பதிப்பகம். நாள் : 25.02.23நேரம் : மாலை 3 மணி. இடம் : பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், RK புரம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். — அன்புடன், தில்லிகை நண்பர்கள்
ஆர். வத்ஸலா இரவு கூட்டி வந்து விட்டது முழு நிலவையும் கையோடு இன்னும் சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கப் போகிற அவன் மனைவி குழந்தைகளின் நினைவில் அமிழ்ந்துப் படுத்திருந்தான் தரையில் உயர் சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தது நிலவு அவன் செய்திருந்த குற்றத்தில் இருந்த நியாயத்தை அவனது ஏழ்மையை நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின் அக்கறையின்மையை அறிந்த அது அவனைத் தழுவி ஆசுவாசப் படுத்த யத்தனித்தது தனது வெளிச்சத்தால்