செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – முதல் பாகம் சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் கி.பி 1896, மார்ச் 15 சிங்கப்பூரின் செலேடார் ஆறு, கடலோடு கலக்கும் அந்த ஆற்று முகத்துவாரத்தில், நான் என் சம்பன் படகில் இருந்து, கரை இறங்கினேன். கரையில் இறங்கிய உடன், நான், எனது கையில் இருந்த டீகம் ஈட்டியை, பாசத்துடன் முத்தமிட்டேன், காரணம், இன்று என் டீகம் ஈட்டி, செலேடர் ஆற்றுக்குள், வேட்டையாடி, வேட்டையாடி, நிறைய மீன்களைப் பிடிக்க, எனக்கு உதவியாய் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் சென்னையில் வங்கி ஊழியராக இருக்கும் சம்யுக்தா மாயா [ கோ. உமா மகேஸ்வரி ] போடிநாயக்கனூரைச் செர்ந்தவர்; 1982 – இல் பிறந்தவர். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘ டல்கௌசியின் ஆரஞ்சு இரவு ‘ . உயிர்மை வெளியீடான இத்தொகுப்பில் 65 கவிதைகள் உள்ளன. இவர் கவிதைகளைப் பற்றி மனுஷ்யபுத்திரன் தனக்கே உரிய நடையில் அறிமுகப்படுத்தியுள்ளார். தனிமையின் பெரு நதியொன்றின் அடியாழத்தில் யுகாந்திரங்களாய் கிடக்கும் புராதன சிற்பமொன்றைப் போல மௌனமாகத் […]
Posted on January 19, 2020 சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் நடுக் கருவில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை ஒன்றுகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருப் பொருளை இடையேபெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நிறுத்தம் அடைந்தும்விட்டு விட்டு வேலை செய்வது !வெளிக் கருவிலேகனல் குழம்பைச் சமைத்துக்கொதிக்க வைக்குது !குவல யத்தைக்குத்தூசி போல் குடைந்துபீறிடும் எரிமலைகள் !தாறு மாறாய் தடம் மாறிஊர்ந்து தாளமிடும்தாரணியின் குடல் தட்டுகள் !அங்கிங் கெனாதபடிபொங்கிப் […]
தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம் அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக கைலுக்கித் தோளில் கையிட்டு அரவணைத்து புகைப்படத்திற்காக என்பதைத் தாண்டிய அளவில் மனம்விட்டுச் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பதைப் பார்த்து அவனுக்குள்ளிருந்த தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர் அலமலங்க விழிக்கிறான். அவர்கள் தான் இவனையும் இவனொத்தவர்களையும் இப்பிறவியில் இனியிருக்குமோ இருக்காதோவென இழுபறியிலிருக்கும் ஏழேழ் பிறவிக்கும் ஜென்மப்பகை கொண்ட இருதரப்பினர்களாக்கி சொற்கூர்வாட்களை அவர்கள் மனங்களில் சேகரிக்கச் செய்து அகிம்சை பேசியவாறே அந்த ஆயுதங்களைக் கண்டமேனிக்கு எதிரித்தரப்பு மீது எறிந்துகொண்டேயிருக்கச் செய்தவர்கள். அவர்களிருவரும் இன்று […]
இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். அப்பொழுது […]
மு. கோபி சரபோஜி வேக வாழ்க்கையில் எதையும் கணிக்கத் தவறுவதைப் போல கவனிக்கவும் தவறி விட்டோம். பிரபஞ்சத்தைச் சுற்றிலும் நிகழும் அத்தனை நிகழ்வுகளும் ஏதோ ஒரு அதிசயத்தை, ஆச்சர்யத்தை, ஆர்ப்பரிப்பை, அற்புதத்தை, வாஞ்சையை தன்னுள் புதைத்தே வைத்திருக்கிறது. போகிற போக்கிலோ, மேம்போக்காகவோ வாழ்க்கையை நகர்த்திப் போகிறவர்களால் அவைகளை இரசிக்கவும், அனுபவிக்கவும் முடியாது. கொஞ்சம் மெனக்கெட்டால், ஒரு குழந்தையின் உற்று நோக்கலோடு அணுகினால் சாத்தியம் என்பதற்கான சான்றாய் சந்தியா பதிப்பக வெளியீட்டில் “பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்” பூத்திருக்கின்றது. […]