எஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா சத்யஜித் ரே சிறுகதைகள் நிகழ்வுகள்
‘ரிஷி’ முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்… சற்றே மூச்சுத்திணறுகிறது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் ‘நட்புக்கான கோரிக்கைகள்’ பக்கம் நகர முடியும். தவறாக நினைத்துவிடவேண்டாம். அதுசரி, நட்பென்றாலே பரஸ்பரம் தானே? இதில் என்ன தனியாய் ‘mutual friend’? – சாதா தோசை மசாலா தோசை கணக்காய்… ஏதும் புரியவில்லை. Mutual friend, actual friend ஆகிவிடமுடியுமா ? Actualக்கும் Factualக்கும் இடைத்தூரம் […]
[Juno Spacecraft Orbits Jupiter] (2011 – 2016) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ அமெரிக்க விடுதலை நாள் [ஜூலை 4, 2016] கொண்டாட்ட தினத்தில் விழாவின் போது, அடுத்த முக்கியப் பாராட்டு நிகழ்ச்சி ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் சூற்றுவீதியில் துல்லியமாகப் புகுந்தது. இது நாசாவின் துணிச்சலான முயற்சி. இத்திட்டத்தில் இதுவரை எந்த விண்கப்பலும் செய்யத் துணியாதத் தீரச்செயல்களை ஜூனோ செய்துகாட்டப் போகிறது. இதுவரை அறியப் படாத பூதக்கோள் வியாழனின் […]
( மூத்த தமிழ் எழுத்தாளரும், தீபம் இலக்கிய குடும்பத்தைச் சார்ந்தவரும் குறு நாவல் பரிசுகளை கணையாழியில் மூன்றுமுறை தொடர்ந்து வென்றவரும், ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது -என்னும் புதினம் வழி இலக்கிய அரங்கில் தடம் பதித்தவரும்,ஞானரதத்தில் ஜெயகாந்தன், கணையாழி படைப்புக்களில் பல தொகுப்புக்கள் வெளியிட்டவரும்,திண்ணையில் தொடர்ந்து பல கதைகளை கட்டுரைகளை க்கொடுத்து நிறைவு செய்தவரும், அவர் வாழ்ந்த பகுதியில் எழுதத்தொடங்கிய எழுத்தாளர்களின் உறுதுணையும்,கவி பழமலயின் ஆசிரியரும், ஜெயகாந்தனின் இனிய நண்பரும் என் சகிருதயருமான வே.சபாநாயகம் 04.07.2016 அன்று விருத்தாசலம் […]
பி.ஆர்.ஹரன் சர்க்கஸானாலும், கோவில்களானாலும், தனியார்வசமானாலும், யானைகள் சரியாகக் கவனிக்கப்படாமல், முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்துபோவதற்கான காரணங்களை அலசி ஆராயாமல், இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவைக் காண முடியாது. அந்தக் காரணங்களைக் கண்டறிந்தால், அவற்றைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து யானைகளின் நலனைக் காப்பாற்ற முடியும். யானைகள் அனுபவிக்கும் துன்பங்களுக்கான காரணங்களைப் பார்ப்போம். யானைகளின் துன்பத்திற்கான காரணங்கள். தனிமை தேவையான உணவின்மை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை பாகன்களின் சித்திரவதை முறையான சிகிச்சையின்மை […]
இந்த எழுத்தாளர் பெண்ணுரிமைவாதிதான். ஆனால் “லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் – வெளிப்பாடான உடைகளுக்கு முதல் எதிரி. எனவே, என் உடை என் சொந்த விஷயம் என்று ஒரு பெண் சொல்லுவதில் உடன்பாடு இல்லாதவள். உடலளவில் வலுக்குறைவான பெண்ணை ஆண் அடிப்பது தவறெனில், மனத்தளவில் வலுவற்ற ஆணை ஒரு பெண் பாலியல் தூண்டுதல் செய்வதும் தவறுதான். சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைக் கூடச் சில ஆண்கள் விட்டு வைக்காத நிலையில் […]
(ஹிப்போகிரேட்டஸ் சிறுவனுக்கு சிகிச்சை) ‘ நான் குணமாக்கும் தெய்வமான அப்போலோ, அஸ்கிலிபியுஸ் , ஹைஜீயீயா , பானசீயா, இதர எல்லா தெய்வங்களின் மீதும், அவர்களை சாட்சியாகவும், நான் இந்த உறுதிமொழியை என்னுடைய திறமைக்கும், நேர்மைக்கும் ஏற்றவகையில் இதைக் கடைப்பிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன் . எனக்கு இந்தக் கலையைப் பயிற்றுவித்த ஆசிரியரை என் பெற்றோருக்குச் சமமாக மதிப்பேன்.அவரை என் வாழ்க்கைப் பாதையில் உறுதுணையாகக் கொள்வேன். அவருக்குத் தேவையான வேளையில் என் செல்வத்தை அவருடன் பகிர்ந்துகொள்வேன். அவருடைய […]
முருகபூபதி “ஏமாற்றத்துடன் விடைபெற்றிருக்கும் செங்கை ஆழியான் “- தகவலை பதிவுசெய்கிறது யாழ்ப்பாணம் ஜீவநதி மறைந்தவரிடத்தில் மறைந்தவர் தேடும் ஈழத்து நாவல்க ள் தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான் ” தொகுப்புகள் பெறுமதிவாய்ந்தவை என்பதை யாவரும் ஒப்புக்கொள்கிறார்கள். சற்றுநேரம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு தொகுப்பிற்குப் பலமணிநேரத்தை செலவிடவில்லை. வருடக்கணக்கில் செலவிட்டம். உதாரணமாக பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத் தேடிப்பெற்று அதனைப்பிரதி எடுத்து அவற்றில் சிறந்ததை தெரிவுசெய்து பின்னர், பதிப்பித்தல், பதிப்புச்செலவு, அதனை விற்பனை செய்தல், களஞ்சியப்படுத்தல் […]
சேயோன் யாழ்வேந்தன் இவ்வளவு நேரமும் அந்த பூங்கா இருக்கையில் அமர்ந்திருந்த பறவையிடம் இருந்த கவிதை, காரணம் ஏதுமின்றி அது பறந்துபோனவுடன், இருக்கையில் அமர்ந்து கொண்டது. இப்போது அந்தக் கவிதையின் மீது ஒரு பெண் வந்தமர்கிறாள். சிறிது நேரம் கழித்து கவனம் கலைத்து அவள் எழுந்துபோகிறாள், பின்புறம் அப்பிக்கொண்ட என் கவிதை குறித்த பிரக்ஞையின்றி! seyonyazhvaendhan@gmail.com
“பரிணாமத்தை கணிக்க முடியாது. இயற்கையை வரையறுக்க முடியாது. இதற்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும். மீண்டும் ஜீன்களில் மாற்றம் வரலாம், மனிதகுலம் துளிர்க்கலாம், அப்படி நிகழாமலும் போகலாம்.” இப்போது விஞ்ஞானி கோபன் அடுத்த கேள்வியைத் தட்டினார். “மனித ஜீன்களில் நாங்கள் ஏதாவது திருத்தங்கள் செய்து பழைய மனிதர்களை உருவாக்க முடியுமா?..” —அது சிறிது நேரம் மவுனம் சாதித்தது. “வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்.” மறுநாள் காலை விஞ்ஞானியிடமும்,தலைவரிடமும் சிலவற்றை கலந்து ஆலோசிக்க வேண்டி ஜீவன் […]