நதீம் எஃப் பரச்சா இறைவன் வெளியே, பைத்தியக்காரத்தனம் உள்ளே ஜூலை 4 ஆம் தேதி, புதன் கிழமை, பஹவல்பூர் (தெற்கு பஞ்சாப்) நகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டெஷனின் உள்ளே வெறியேறிய கும்பல் ஒன்று உடைத்து புகுந்தது. அந்த கும்பலின் குறி ஒரு நாடோடி. இப்படிப்பட்ட நாடோடிகளை பாகிஸ்தானில் ஏராளமாக இருக்கும் சூபி துறவிகளின் தர்க்காக்களின் அருகே பார்க்கலாம். இந்த நாடோடிகளை மலாங் malang என்று அழைப்பார்கள் அந்த பகுதி மக்கள் இந்த நாடோடியை சித்தசுவாதீனம் இல்லாதவர் என்று […]
நிலாவண்ணன் எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன… அதற்கான சொந்தத்தை மனம் மறக்குமா என்ன…? அந்த மேளத்தை – தொல் தமிழர்களின் அந்த தோல் கருவியை, மிருதுவாயிருந்து இப்போது கொஞ்சமாக முரடேறிப்போயிருந்த அதன் மேற்பாகத்தைத் தடவிக் கொடுக்கும்போது பழைய ஞாபகங்கள் மனதுக்குள் ஓடி வந்து சம்மணம் இட்டுக் கொண்டன. ‘இவ்வளவு நாளா உபயோகிக்காம கெடந்தாலும் கொஞ்ச நாழி அனல்ல சூடு காட்டினா டண்டணக்கு…டண்டணக்குன்னு ஏழூருக்கும் கேக்கற மாதிரி தயாராயிடுமில்ல..!’ அம்மாசி தன் இசைக்கருவியிவின் நாதத்தில் ஆழ்ந்து போனார். “ஏம்பா உங்களுக்கு […]
சமயோசித புத்தியற்ற குயவன் ஒரு ஊரில் ஒரு குயவனிருந்தான். அவன் ஒரு சமயம் கவனமில்லாமல் வெகு வேகமாக ஓடி கூர்மையான நுனி உடைய ஒரு உடைந்த பாத்திரத்தின் மேல் விழுந்தான். அதன் கூரிய நுனி அவனுடைய நெற்றிக்கட்டை நன்கு கிழித்து விட்டது. ரத்தத்தினால் நனைந்த உடலுடன் எப்படியோ எழுந்திருந்தான். பிறகு சரியாக அதற்கு வைத்தியம் செய்யாததால் அந்தக் கூர்மையான அடி கோடுமான பெரிய வடுவாக ஆகிவிட்டது. ஒரு சமயம் ஊர் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டபொழுது பசியால் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com புதுநெறி காட்டிய கவிஞர்கள் நல்ல சிந்தனையிலிருந்துதான் நல்ல கவிதைகள் பிறக்கும் சிறந்த குறிக்கோளை உடையவர்கள்தான் சிறந்த கவிஞராகத் திகழ முடியும். சிறந்த கவிஞன் தன்னுடைய உயிர்-மூச்சு-உழைப்பு-தொழில் எல்லாம் கவிதைதான் என்று எண்ணுவான். கருத்துக்கள் செறிந்த கற்பனை வானில் எவரும் எட்டிப்பிடிக்க முடியாத மிக உயர்ந்த நிலையில் சிறகடித்து வட்டமிட்டுத் திரிவான். அவன் பழைமைகளைப் பார்ப்பான். இருக்கின்ற உண்மைகளை உணர்வான். எதிர்காலததில் எழவேண்டிய புதுமைகளை உணர்த்துவான். செய்ய […]
3. எப்போது எண்ணலாம்? மதியாளன் மிகவும் செல்வந்தராக இருந்த காலம். எல்லோரும் அவருடைய நெருங்கிய நண்பர்களாக ஆக வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டு, போட்டா போட்டி போட்டிக் கொண்டு, அவருடைய நட்பு வட்டாரத்தில் இருக்க விருப்பினர். அப்போது ஒரு நாள், ஒருவர் அவரிடம், “நசிர்தின்.. அப்பப்பா.. எத்தனை நண்பர்கள்? உங்களால் அவர்கள் எல்லோரையும் எண்ணிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். முடியாது என்பதை தலையை ஆட்டிக் காட்டி விட்டு, “எண்ணுவதா? எல்லோரையுமா? இப்போதைக்கு அது சாத்தியமில்லை. […]
அடக்க நினைக்கும் கூட்டத்திலிருந்து தப்பித்து அகதியாக ஒதுங்கும் ஒரு மனிதனின் கதை.”அங்கருக்கப்பவே நீ ஒழுங்கா இருந்ததில்ல, இப்பவும் அப்டியே தான் இருக்கியாடா”ன்னு அக்கா கேட்கிறார்.தவறி விழுந்த துப்பாக்கியை தடவி எடுத்து அஜித் தன் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது. சீண்டப்படுதல்,ஒதுக்கிவைத்தல், மிருகம் போல நடத்தப்படுதல், முழுக்க அங்கீகாரம் கிடைக்கவிடாது தள்ளிவைத்திருத்தல், தாம் நினைத்த அமைதி வாழ்க்கையை, எல்லோரும் போல வாழ நினைப்பவனை வாழ விடாது தடுத்தல், இதெல்லாம் தொடர்ந்தும் நடந்தால் ஒருவன் என்ன தான் செய்வான் ? இதற்கும் […]
இரா.முருகன் 1938 டிசம்பர் 28 வெகுதான்ய மார்கழி 13 புதன்கிழமை இன்னொரு வாரணாசிக் காலை. பனியும் பழகி விட்டது. பகவதி நடந்து கொண்டு இருக்கிறாள். இருட்டு தான் எங்கேயும். அது விலகி சூரியோதயம் ஆகிறதுக்கு ரொம்ப நேரம் செல்லும். வெளிச்சத்துக்காக சத்திரத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் வேலை நடக்காது. போயே ஆக வேண்டும். போய்க் கொண்டிருக்கிறாள். பகவதிப் பொண்ணே, வேண்டாம்டி, சொன்னாக் கேளு. திரும்பிடலாம் வா. ஆம்பிளைகள் இல்லாம இப்படி புலர்ச்சை வேளையில் தனியா எங்கேயும் போகண்டா, […]
முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் நினைவு கல்லூரி சிவகங்கை மனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்குப் பலப்பல பதில்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். வீடு என்பது ஒரு தனிமனிதனின் விடுதலை மிக்க இடமாகும். ஒரு மனிதன் தனக்கான வசதிகளை தானெ தேடிச் சேர்த்து அவற்றை அனுபவிக்கும் […]
– நாகரத்தினம் கிருஷ்ணா 39. பிள்ளை மனம் குழப்பத்தில் இருந்தது. கிருஷ்ணபுரத்தில் நாளைய தினம் எதுவும் நடக்கலாமென்ற நிலை. இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயநகரத்தில் ஏற்பட்டிருருந்த தலைகீழ் மாற்றம், பேரரசின் கீழிருந்த சிற்றசர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. விஜயநகர சாம்ராச்சியத்தை உரிமைகோரி, இரு அணிகள் மோதிக்கொள்ளும் நிலமை உருவாகியிருந்தது. மன்னர் வெங்கடபதியாருக்குப்பின் விஜய நகர சாம்ராச்சியம் வேறொருவர் கைக்குப் போகக் கூடாதென்றெண்ணி அவருடைய மூத்ததாரமும் கோபுரி வம்சாவளியைச் சேர்ந்தவளுமான வையாம்பிகாவும் அவள் சகோதரர் ஜெகராயரும் எங்கோ பிறந்த சிக்கமராயனை […]
சிறுகதை – இராம வயிரவன் —————————- ‘நண்பா…சாரி டு டிஸ்டப் யு. நாலுநாள் ஹாலிடே வருதுல்ல. ஜென்ட்டிங் போலாமுன்னு கெளம்பியாச்சு. எல்லாம் அந்த லதாவின் ஏற்பாடு. ரெண்டுநாள் அங்கே தங்கப்போறோம். ரூம் எல்லாம் அவளே புக் பண்ணிட்டா..யாராவது என்னை கேட்டா தெரியாதுன்னு சொல்லிடுங்க… ரொம்பத்தொந்தரவு பண்ணினாச்செத்துட்டான்னு சொல்லிடுங்க..நண்பா!..வர்ட்டா…? என்ஜாய்னு சொல்லி வாழ்த்தி அனுப்புங்க நண்பா!…’ நவீன் என்னை வாழ்த்தச் சொல்லிக் கேட்டபோது வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி. சற்று முன்னர்தான் கடின உழைப்புக்குப் பிறகு கட்டையை நீட்டிக் […]