திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். முதலமைச்சராக இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஒரு கும்பல் கைதட்டும் என்பதற்கு இந்த வரிகளே உதாரணம். சங்கரமடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மகன் அல்ல ஜெயேந்திரர். ஜெயேந்திரரின் மகன் அல்ல விஜயேந்திரர். எந்த சங்கரமடத்திலும் மகன் பதவி ஏற்பதில்லை. திருமணம் […]
பிரபஞ்சத்தில் நம் சூரியனை போன்ற ஏராளமான சொல்லப்போனால் பல கோடி கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. கடந்தகாலத்தில், பல்வேறு தத்துவவியலாளர்கள் நம் சூரியனை போன்றே மற்ற நட்சத்திரங்களை சுற்றியும் கிரகங்கள் இருக்கலாம் என்று யூகித்துள்ளனர். 1885இல் சென்னையில் கேப்டன் w.s.ஜேக்கப் என்பவர் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை வானியல் மையத்தில் binary star 70 Ophiuchi என்ற நட்சத்திரத்தை ஆராய்ந்து அதன் நிலையற்ற தன்மையை கண்டு அதனை சுற்றி கிரகங்கள் இருக்கலாம் என்று கூறினார். ஆனால், முதன் முதலாக கனடிய […]
முகவுரை உலக அறிவின் சாரத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி, ஐந்து விதமான தந்திரங்களைக் கொண்டு சிந்தையைக் கவரும் ஒரு சாஸ்திரத்தை விஷ்ணுசர்மன் வகுத்தான். இது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம். தெற்குப் பிரதேசத்தில் மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்றிருக்கிறது. அதை அமரசக்தி என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் உலக அனுபவ சாஸ்திரத்தில் தேர்ச்சி மிகுந்தவன். வலிமை பொருந்திய வேந்தர்கள் பலர் அவனை முடி தாழ்த்தி வணங்குவார்கள். அப்படி வணங்குகையில் அவர்கள் அணிந்த மணி மகுடங்களில் பதித்த ரத்தினங்கள் […]
சமஸ்கிருதம் 42 இந்த வாரம் गत (gata) அதாவது சென்ற (கடந்த) மற்றும் आगामि (āgāmi) அதாவது ‘ இனிமேல் வருகிற’ என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். எப்போதும் कदा (kadā) அதாவது எப்போது ? அல்லது எத்தனை மணிக்கு ? என்ற வினாவின் விடை सप्तमीविभक्तिः(saptamīvibhaktiḥ) ஏழாவது வேற்றுமையில் அமையும் என்று ஏற்கனவே படித்தோமல்லவா? उदा – अरुणः कदा उत्तिष्ठति ? aruṇaḥ kadā uttiṣṭhati ? அருண் எப்போது எழுகிறான்? […]
ஒலிபெருக்கியில் ஒப்பாரி சத்தம் உறக்கத்தைத் துரத்தியது நேரத்தைக் கூட்டியது தாகமெடுத்தது அருகில் சென்ற போதுதான் தெரிந்தது கானல் நீரென்று கதவு திறந்திருந்தது உள்ளே எட்டிப் பார்த்தேன் ஈர விறகால் அடுப்பு புகைந்தது வானத்தின் உச்சியில் பறக்கும் கழுகின் நிழல் பூமியில் விழும் விளக்கிலுள்ள சுடர் தான் இருளை விரட்டியடிக்கின்றது மரணப் புதிரை அவிழ்க்க முயல்பவனை எச்சரிக்கும் பைசாசங்கள் கரைகளுக்கிடையே ஓடும் ஆறு கடல் போய்ச் சேருமா நீர்மட்டத்திற்கு மேலே துள்ளும் மீனை கவ்விச் செல்லும் பறவை.
(Subduction Zones Drift & Sea-Floor Spreading) (கட்டுரை : 3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டு காலக் குமரி எல்லை வரைந்த வண்ணப் பீடங்கள் நாட்டியம் புரியும் ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தளங்கள் துண்டு துண்டாய்த் தவழும் கடல் சூழ்ந்திட ! ‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக […]
1. ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு […]
நூலிழை கொண்டு நெய்து வைத்தது போல் பெய்து கொண்டிருந்தது மழை இடியாமலும் மின்னாமலும் சற்றேனும் சினமின்றி சாந்தமாயிருந்தது வானம் சீயக்காய் பார்க்காத சிகையைப்போல சிக்குண்டு கிடந்தன மேகங்கள் உதயகாலம் உணராமல் உறங்கிக்கொண்டிருந்தது உலகம் பஞ்சுப்பொதி மேகம் போர்த்திப் படுத்துறங்கிக் கொண்டிருந்தது பகலவன் தற்காலிக ஓடைகளிலும் தான்தோன்றிக் குட்டைகளிலும் துள்ளின தவளைகள் நைந்தும் சிதைந்தும்போய்விட்ட மழைநீர் சேகரிப்புக் கொள்கலன்களில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அனிச்சையாகவே சேகரமாயது மழைநீர்.
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நினைவில் மட்டும் இருக்கிறான் அவன் இப்போது. காரணம் இந்தப் புவியின் மீதுள்ள உன்னத பாதைகளில் அவன் இனிமேல் நடக்கப் போவதில்லை. ஆயினும் அவனது பொன்மொழிகள் நம்மிடையே இன்னும் உலவி வருகின்றன. அவை வேறு யுகத்துக்கோ அல்லது வேறு தளத்துக்கோ நம்மை மீண்டும் வழிநடத்திச் செல்லும்.” கலில் கிப்ரான் (மீட்சி – The Return) மனிதச் சொற்கள் மூலமே உனது கனவுகள், விருப்பு, வெறுப்புகள் […]
இரைச்சலிடும் தையல் இயந்திரம் ஒருக்கால் அறுந்துபோன என் கனவுகளைத் தைக்கலாம். ஆனால் ஊசியின் ஊடுருவலும் பாபினின் அசைவும் கனவுகளை மிகக்கோரமாய் ரத்தம் கசியவைக்கும். குருதிப்பெருக்கில் திகிலுற்று என் பாட்டி கேட்பாள் “ஏன் உன் கனவுகள் தைக்கப்பட வேண்டும்?”. பதில் என்னவோ சுலபம்தான். அறுந்துபோன கனவுகளை ஒரு தையல் தைக்கும்போது நிர்வாணமான மனதை மூடிக்கொள்ள ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது. ரமணி