கோவை இலக்கியச் சந்திப்பு

This entry is part 11 of 41 in the series 8 ஜூலை 2012

கோவை இலக்கியச் சந்திப்பு என்ற  இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில்      இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. ஜுன் மாத நிகழ்வு நரசிம்மலுநாயுடு நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்த்து.. கோவையில் இதழியலின் முன்னோடியாக இருந்தவர் நரசிம்மலுநாயுடு. பயண இலக்கியங்களில் முத்திரை பதித்தவர். அரிய நூல்களைப் பதிப்பித்தவர்.எண்ணிக்கையில் அவர் பதிப்பித்தவை நூற்றுக்கு மேல் இருக்கும். கோவை கிழாரின் நூல்கள் வெளிவர உத்வேகமாக இருந்தவர்.கோவையின் சிறுவாணி குடிநீரின் மூலத்தைக்கண்டு பிடித்து […]

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

This entry is part 10 of 41 in the series 8 ஜூலை 2012

கல்வி கரையில! கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குறுகின் தெரிந்து. – நாலடியார். ஒரு மாணவனின் படிப்பு வாழ்க்கையை தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என்று பொதுவாக பிரித்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த நடைமுறை உண்மைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது. (மாணவன் என்பது என் வசதிக்கான குறியீடு அதில் மாணவியும் அடக்கம் எனக் கொள்க) தொடக்கப் பள்ளி நகரத்து பள்ளிகளில் மாணவர்களை […]

அம்மாவாகும்வரை……!

This entry is part 9 of 41 in the series 8 ஜூலை 2012

  ஒரு வழியாக் பெண்ணோட கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தின் கணக்கை சரி பார்த்து முடித்து விட்டு கடைசியாக இருக்கும் மிச்சம் மீதி சாமான்களைக் கட்டி டெம்போவில் ஏற்றிக் கொண்டிருந்ததை மேற்பார்வை பார்த்தபடி பரபரத்தாள் ராஜம். அந்த இலைக்கட்டையும் எடுத்துப் போட்டுக்கோ,அதோ அங்க ஒரு கூடை கிடக்கு பாரு…அதையும் எடு….எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு வைக்காமல் பரவலா வைப்பா..கடைசீல அங்க வந்து எடுக்கும்போது எல்லாம் கவிழ்ந்து கொட்டிப் போச்சுன்னு சொல்லுவீங்க….என்றபடி கடைசியா ஒரு பார்வை […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 27)

This entry is part 8 of 41 in the series 8 ஜூலை 2012

++++++++++++++ காதலரின் இரவுச் சிந்தனைகள் ++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

வாழ்வியலில் வரலாற்றில் சிலபக்கங்கள் -20

This entry is part 7 of 41 in the series 8 ஜூலை 2012

  ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.   தமிழ்நாடு சமூக நல வாரியம் திருமதி .அம்புஜம்மாள் தொடங்கி திருமதி சரோஜினி வரதப்பன், இன்னும் பலர் அதன் தலைமைப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் பல. அதனால்தான் அவர்கள் இன்றும் வரலாற்றில் நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். திருமதி. அம்புஜம்மாள் அண்ணல் காந்திஜியின் மகள். ஆம் அப்படித்தன் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பெற்ற தந்தையின் பெயர் திரு சீனிவாசன் ஆகும் ஆனாலும் தனக்கு தந்தைகள் இருவர் […]

‘துப்பாக்கி நாயுடு’: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர்

This entry is part 6 of 41 in the series 8 ஜூலை 2012

  தமிழ் நாட்டில் காங்கிரஸ் மகாசபை அகலக் கால் பதித்து வளரக் காரணமாயிருந்த மூத்த தலைமுறைத் தலைவர்களில் முக்கியமானவரான டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மக்கள் அளித்த செல்லப் பெயர் ‘துப்பாக்கி நாயுடு.’ வரதராஜுலு பொதுக் கூட்ட மேடைகளில் பேசுகையில் அடிக்கொருதரம் சுட்டு விரலை நீட்டி, எதிராளிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும். இந்த சுவாரசியமான தகவலை வ.ரா.வின் ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்ற நூலிலிருந்து பதிவு செய்திருப்பவர், வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை […]

’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’

This entry is part 5 of 41 in the series 8 ஜூலை 2012

”மச்சான்! விஷயம் தெரியுமா? சுஷ்மா டிவோர்ஸ்டு கேஸாம்ல?.”——திவாகர் உற்சாகமாய் அடித்தொண்டையில் கத்த, மற்ற சீட்களில் இருந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர். ஆஹா அப்படியா?.இப்பவே பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி இவன்க வாயில் விழுந்திட்டதுன்னு ஒவ்வொருத்தனுக்கும் நெனைப்பு. அப்ப சுஷ்மா ருசி கண்ட பூனையா?.வெரிகுட்…..வெரிகுட்…சுலுவாய் அமுக்கிடலாம் அந்த நொடி முதலே அவளை வீழ்த்துவதற்கான வியூகங்கள் ஒவ்வொருத்தனுக்குள்ளும் ஓட ஆரம்பித்தன. அது கனிமவள சர்வே டிபார்ட்மெண்ட்டின் துணை இயக்குநர் அலுவலகம்,ஹெட் ஆபீஸ் மும்பையில் இருக்கிறது. இங்கே எம்ப்ளாயிஸ் […]

நினைவுகளின் சுவட்டில் (92)

This entry is part 4 of 41 in the series 8 ஜூலை 2012

ராஜ்காங்பூர், கல்கத்தா சுற்றிவந்த புராணத்தை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொன்னதில் ஒரு விஷயம் தவறி விட்டது. அது எங்களுடன் இருந்த ஜியார்ஜின் பிரசன்னத்தை. மறந்து தான் போனேன். எங்களுடன் அவரது பிரசன்னத்தை நான் மறந்த போதிலும் அவரது பிரசன்னத்தை மாத்திரம் கவனித்தவர்கள் உண்டு. நாங்களும் அவருடன் இருப்பது அந்த ஜீவன்களுக்கு எப்படி தெரியாமல் போகிறது?, ஜியார்ஜி மாத்திரமே அவர்களுக்கு தெரிவது எப்படி? என்பது எனக்கும் சரி மற்ற நண்பர்களுக்கும் புரிந்ததில்லை. அது மாலை நேரம். ஜெர்ஸகுடா […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2

This entry is part 3 of 41 in the series 8 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா […]

காக்க…. காக்க….

This entry is part 2 of 41 in the series 8 ஜூலை 2012

லக்ஷ்மண பெருமாள் எல்லா நாட்களிலும் மாலையில் இருட்டு ஒரே மாதிரி வருவதில்லை. எத்தனையோ நாட்களில் அது, தான் விரும்புவது போல வந்து விடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவும் மாலை நேரத்து மஞ்சள் வெயில் பார்ப்பதற்கு வானத்தில் நிறத்தையே ஓரிடத்தில் மாற்றிக் காண்பிக்கிற அந்த அழகு காணக் கண் கொள்ளாதது. அன்றும் அப்படி ஓர் அழகுக் காட்சி. கிரிக்கெட் விளையாடும் போது மாலை நேரக் கதிரவன், கேட்ச் பண்ண முடியாத அளவுக்கு கண்ணைக் கூசச் செய்த போது, […]