மோட்டுவளை

This entry is part 21 of 41 in the series 8 ஜூலை 2012

நித்ய கல்யாணி —- ஒருவருக்கு கஷ்டம் எனில், அவன்/அவ ஆடிய ஆட்டத்திற்கு இருமி இருமிச் சாவான்(ள்), என்னைப் பாடாய் படுத்தியதற்கு கை கால் இழுத்துக் கொண்டு தான் சாவாய் என்று.. ஏன்..? தமிழ் சினிமா இயக்குனர் ஆர்.சி.சக்தி முன்பொருமுறை குமுதத்தில் ஒரு பக்க கதை எழுதினார், “ ஒரு இட்லிக்கார கிழவியிடம் ஒரு ரௌடி ரவுடித்தனம் பண்ணிக் கொண்டேயிருக்க… அவளோ “உங் கால்ல கட்ட முளைக்க…” என்று திட்டுவது மட்டுமே முடிந்தது… கட்டைல்ல மயிர் தான் முளைக்கும்… […]

தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்

This entry is part 20 of 41 in the series 8 ஜூலை 2012

இஸ்லாமிய மார்க்கப்பிரச்சாரம் செய்வதற்காக இந்தியமண்ணிலும், தமிழகத்தின் பலபகுதிகளிக்கு வருகைதந்த அரேபிய மார்க்க பிரச்சாரகர்களும், இந்தியாவிலும், தமிழகத்திலும் தோன்றி இஸ்லாத்தை ஆழமாக அடித்தளமக்கள் மத்தியில் கொண்டு சென்ற சூபிகள் என்னும் மெய்ஞானிகளும் முக்கிய பங்குவகிக்கின்றனர். இஸ்லாம் ஆட்சிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இந்திய மண்ணில் காலூன்றுவதற்கு முன்பாகவே அரேபிய மண்ணின் மார்க்க பிரச்சாரச் குழுக்கள் கடல்வழிப் பயணமாக இங்கு வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் தெரியவருகின்றன. கி.பி. 632 ல் கேரளத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் சேரமான் பெருமாள் இஸ்லாமிய சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டார். அப்போது […]

கள்ளக்காதல்

This entry is part 19 of 41 in the series 8 ஜூலை 2012

    காதலன் இல்லாமல் வாழ்ந்துவிட முடிகிறது கவிதை இல்லாமல் வாழ்வது ?     கட்டில் மெத்தையில் காமம் கூட அந்த மூன்று நாட்கள் முகம் சுழித்து விலகிக்கொள்கிறது. கவிதை மட்டும்தான் அப்போதும் காற்றாய் சிவப்புக்கொடி ஏந்திய தோழனாய் துணைநிற்கிறது.   சுவடிகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கவிதைமொழியை விடுதலையாக்கிய பாட்டனின் பாடல் வரிகள் எல்லைகள் தாண்டி எப்போதும் என் வசம்.   ஆளரவமில்லாத காட்டுப்பாதையில் பூத்திருக்கும் செடிகளின் இலைகளின் அசைவில் கவிதைமொழி கண்சிமிட்டி கண்ணீர்விட்டு கட்டி அணைக்கிறது. […]

உகுயுர் இனக் கதைகள் (சீனா)

This entry is part 18 of 41 in the series 8 ஜூலை 2012

1. தேவையற்ற முன்னெச்சரிக்கை ஒரு நாள் மிதியாளர் நசிர்தின் அரசரின் மாளிகையைக் கடக்க நேர்ந்தது.  அங்கு மாளிகையின் முன்னே கூட்டம் இருப்பதைக் கண்டு அருகே சென்று பார்த்தார்.  அவர்கள் தீவிரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் அருகே சென்று பார்த்த போது, அவர்கள் மாளிகையைச் சுற்றியிருக்கும் மதிலை உயரமாக்கிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் போல நசிர்தின், தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும் என்ற காட்டாயத்தில், தன்னுடைய கருத்தைக் கூற விரும்பினார். அருகே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சரைப் […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)

This entry is part 17 of 41 in the series 8 ஜூலை 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்கள் காண விரும்பிய பாரதம்      மகா கவியும் மக்கள் கவியும் பாரதம் அனைத்துத் துறைகளிலும் உலகில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினர். எவ்வாறெல்லாம் பாரதம் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத் தமது பாடல்களில் குறித்து வைத்தனர். பாரத நாட்டைப் பற்றி பல்வேறு கனவுகளைக் கொண்டிருந்ததற்கு இருகவிஞர்களின் பாடல்களே சான்றுகளாக அமைந்துள்ளன. பாரதி இந்தியாவைப் பற்றி பற்பல கனவுகள் கண்டு அவற்றையெல்லாம் பாடல்களாகப் பாடி […]

தாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.

This entry is part 16 of 41 in the series 8 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மௌனத்தில் வசிப்பாய் நீ என் இதயத்தில், வேனிற் பொழுதின் அந்தரங்கத் தனிமையில் மிளிரும் பௌர்ணமி இரவு போல். என் வாலிபம், என் வாழ்க்கை என் மெய் உலகம் முழுவதும் நீ பெரும் பீடுடன் நிரப்பி வைப்பாய் நீடித்த மௌன இரவு போல். உன் கண்கள் பரிவு மேவி ஏகாந்தக் கண்காணிப்பில் என்னை விழித்திருக்க வைக்கும் ! உன் முகத்திரை நிழல் பாதுகாப் பிடம் அளிக்கும் […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33

This entry is part 15 of 41 in the series 8 ஜூலை 2012

38. குத்துக்காலிட்டு தெருவாசலில் உட்கார்ந்திருந்த ஜெகதாம்பாள் வீட்டெதிரே கூண்டு வண்டி நிற்பதைக்கண்டு எழுந்தாள். பூட்டியிருந்த எருதுகள் சிறுநீர்கழிக்கும் சத்தம் கேட்டது. கிழக்கில் சூரியன் எதிர்வீட்டு மோட்டுவளையை அவதானித்தபடி இருந்ததால் வந்த வண்டியையும் அதிலிருந்து யார் இறங்குகிறார்களென்பதும் தெளிவாயில்லை. தரையில் ஊன்றிருந்த கையைஎடுத்து புருவத்திற்கு மேலே மடக்கிப்பிடித்து கண்களை குறுக்கிப்பார்த்தும் பிரயோசனமில்லை. – யாரு? குரலை நீட்டிக் கேட்டாள். வண்டியின் பின்புறம், ஏறுபலகையில் கால்வைத்து செல்வக்களையுடன் யாரோ இறங்குகிறார்கள் என்பதை மாத்திரம் விளங்கிக்கொண்டாள். ஒரு வேளை தண்டல்காரனாக இருக்குமோ. […]

முள்வெளி அத்தியாயம் -16

This entry is part 14 of 41 in the series 8 ஜூலை 2012

தலைமையாசிரியை அறையில் (எதிரில்) சாந்தா டீச்சர் பொறுமையாக அமர்ந்திருந்தாள். தலைமை அப்போது இணைய தளத்தில் எதையோ அலசிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து இந்த அம்மாள் எதிரே யாரும் காத்திருக்காமல் தனியாக இருக்கும் போது ஏதாவது செய்வாரா இல்லை வெத்து பந்தாவுக்காக மட்டுந்தானா இதெல்லாம் என்று வேவு பார்க்க வேண்டும். சாந்தா தன் மொபைலில் தேவையற்ற குறுஞ்செய்திகளை நீக்க ஆரம்பித்தாள். “யெஸ்” என்றதும் “மேம் … டிவி ஸீரியல்ல வர்ற ‘குழலூதி மனமெல்லாம் ஸாங்குக்கு […]

‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்

This entry is part 13 of 41 in the series 8 ஜூலை 2012

மகேஷ் பூபதி மற்றும் ரோஹன் போபண்ணா இருவருமே லியான்டர் பேஸ்ஸுடன் ‘ஒலிம்பிக்ஸ்’ 2012ல் விளையாட ஒப்பாமற் போனதில் ஒரு சர்ச்சை துவங்கியது. பின்னர் இவர்கள் இருவருக்கும் பதில் விஷ்ணு வர்த்தன் என்பவரை லியான்டருக்கு ஜோடியாக அனுப்ப AITA முடிவு செய்த போது அதை அவர் ஏற்க மறுத்தார். இடையே சம்பந்தப் பட்ட மத்திய மந்திரி புகுந்து இரண்டு குழுக்களை அனுப்ப வழி இருக்கும் போது ஏன் இந்த சர்ச்சை என ஒரு போடு போட்டார். உடனே AITA […]

நிகழ்வுப்பதிவு போரூர் த.மு.எ.ச.வின் குறும்படத் திரையிடல்

This entry is part 12 of 41 in the series 8 ஜூலை 2012

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை ஒன்று போரூரில் இயங்கி வருகிறது என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிந்தது. சுபம் டிராவல்ஸ் தண்டபாணி வீட்டில் ஒரு கூட்டம் நடந்ததாக அன்பர் ஒருவர் சொன்னார். இடம் பிடிபடவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். ஒரு மாலை நடைப்பயிற்சியில் கண்ணில் பட்டது அந்தச் சுவரொட்டி. மனிதநேயக் குறும்படங்கள் திரையிடல் என்று முகவரி கொடுத்திருந்தார்கள். பொறியியல் நிறுவனம் நடத்தும் செல்வம் அதை ஏற்பாடு செய்திருந்தார். அவரிடம் பெயரும் செல்பேசி எண்ணும் கொடுத்தபிறகு, நிகழ்வு பற்றிய தகவல் […]