உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 8– ப்ரோக் பேக் மௌண்டைன்

This entry is part 15 of 15 in the series 3 ஜூன் 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இந்தப்படம் பார்க்கும்போது, 2005 ஆம் ஆண்டில், நான் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அமெரிக்காவின் கறுப்பர் நகரமான டெட்ராய்ட்டில், முப்பது மாடிகளுக்கும் மேல் கொண்ட ஜெனரல் மோட்டோர்ஸ் கட்டிடடத்தின் ஐந்தாவது மாடியில் எனது அலுவலகம் இருந்தது. அன்று எனக்கு சோகமான நாள். நான் அமெரிக்காவில் இருந்து, திண்டுக்கல்லில் இருக்கும், விவசாய அலுவலகத்தில் அதிகாரியாய் இருக்கும், எனது முப்பது வருட உயிர் நண்பருடன் காலையில் தொலைபேசியில் சண்டை போட்டுவிட்டு வேலைக்கு வந்து […]

மணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை

This entry is part 4 of 15 in the series 3 ஜூன் 2018

சு.ஸ்ரீகாந்த், டாடா ரியாலிட்டி, சாஸ்த்ரா ராமானுஜன், கணிதத்துறை தலைமைப்பேராசிரியர். முனைவர் து.ரஞ்சனி, உதவிப்பேராசிரியர், கல்வியியல் துறை, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருமலைசமுத்திரம், தஞ்சாவூர். முன்னுரை : சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்தது மணிமேகலை ஆகும். இந்நூல் பௌத்த மதச்சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியமாகும். மேலும் உயிரை விட மேலான நன்னெறி அறம் பத்தினி பெண்களின் பண்புநலன்கள் ஆகியவற்றையும் எடுத்துரைக்கின்றது. மணிமேகலை காப்பியம் பல கிளைக் கதைகளை உள்ளடக்கியது. மணிமேகலை கதை ஓட்டத்திற்கு அடிப்படையாக […]

அந்த நாளை எதிர்நோக்கி

This entry is part 5 of 15 in the series 3 ஜூன் 2018

  வான்மதி செந்தில்வாணன் ஏஞ்சலின் முழுப்பெயர் “கிரேஸி ஹில்டா ஏஞ்சல்”. எல்லோரும் அவளைக் கிரேஸி என்றுதான் அழைப்பார்கள். நான் மட்டுமே அவளை ஏஞ்சல் என்றழைக்கும் வழக்கமுடையவள். அவளது முழுப்பெயரையும் சொல்லி அழைக்கவேண்டுமென்பதுதான் எனது ஆசை. ஆனால் அவ்வளவு நீளமான பெயரைச் சொல்லி அழைப்பதற்குள் ஏஞ்சல் அந்தத் தெருவை ஜெட் வேகத்தில் ஓடிக் கடந்திருப்பாள். அவள் ஓடுவதைப் பார்க்கப் பார்க்க அந்தத் தெருவை மழை நனைப்பது போலொரு உணர்வு என்னுள் பரவும். பக்கத்துத்தெரு “மியூலி”யுடன் விளையாடுவதென்பது அவளுக்கு மிகவும் […]

தங்கப்பா: தனிமைப்பயணி

This entry is part 1 of 15 in the series 3 ஜூன் 2018

          பெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்‌ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை கலைக்குழு, புதுச்சேரி தலைக்கோல் என பல குழுக்களின் நாடகங்கள் அரங்கேறின. 30.05.2018 புதன் இரவு நடைபெற்ற நாடகம் நிறைவடைய நீண்ட நேரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உண்டு, உரையாடிவிட்டு படுக்கைக்குச் செல்ல நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. […]

பாவண்ணனைப் பாராட்டுவோம்

This entry is part 2 of 15 in the series 3 ஜூன் 2018

திருஞானசம்பந்தம் இந்திய அமெரிக்க வாசக நண்பர்கள் இணைந்து நடத்திய பாவண்ணனைப் பாராட்டுவோம் என்ற இலக்கிய நிகழ்வு, அரங்கு நிறைந்து வெற்றிகரமாகச் சென்னை கவிக்கோ மன்றத்தில் மே மாதம் இருபத்தி ஆறாம் நாள் நடைப்பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான வாசகர்கள், எழுத்தாளர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள். முழுநாள் நிகழ்வை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு என நான்கு அமர்வுகளாகவும், மாலையில் பாராட்டு விழாவாகவும் ஒருங்கு செய்யப் பட்டிருந்தது. துவக்க விழாவை வரவேற்புரையுடன் வெற்றிவேல் […]

சொல்லத்தவறிய கதைகள் தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்

This entry is part 6 of 15 in the series 3 ஜூன் 2018

சுதந்திரப்போராட்டத் தியாகி வாழ்ந்த மண்ணில் பறிக்கப்படும் மக்களின் சுதந்திரம்                                     முருகபூபதி – அவுஸ்திரேலியா ஊடகங்களில் சமகாலத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் தூத்துக்குடி இன்று மட்டுமல்ல,  சுதந்திர போராட்ட காலத்திலும் பிரசித்திபெற்று விளங்கியது. அங்குதான் ஓட்டப்பிடாரம் என்ற பிரதேசத்தில்  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரப்பிள்ளை பிறந்தார். இந்திய சுதந்திரத்திற்காக போராடியதுடன் சுதேசி கப்பலை ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செலுத்தினார். பாளையங்கோட்டை சிறையில் வாடினார். செக்கிழுத்தார். அடிபட்டார். அவ்வாறு இரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவரின் மண்ணில் வாழும் மக்கள் இன்று பேச்சுச்சுதந்திரத்திற்காகவும் உயிர் […]

மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும்

This entry is part 7 of 15 in the series 3 ஜூன் 2018

  (லதா ராமகிருஷ்ணன்)     ’இல்லை இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை’என்று திரும்பத் திரும்பக் கூறத்தொடங்கிவிட்டவர்களைப் பார்த்தபடி குதிருக்குள் எட்டிப்பார்க்கச் செல்லத்தொடங்கிவிட்ட மக்களை _     ”மாக்கள் என்று சொல்லிவிட்டார் உங்களை, இனியும் பேசாதிருக்கப் போகிறீர்களா?” என்று கேட்டவர் அச்சு ஊடகங்களின் இரண்டறக் கலந்த அம்சமான அச்சுப்பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில் கைதேர்ந்தவர்.     அவருக்குத் தெரியும் மக்கள் மாக்களானது பிழைபார்ப்பிலான விடுபடல் என்று. ஆனாலும் அது சொன்ன வாயின் இமாலயத் தவறென்று திரும்பத் திரும்ப […]

ஒரே ஒரு ஊரிலே………

This entry is part 8 of 15 in the series 3 ஜூன் 2018

(லதா ராமகிருஷ்ணன்)     ’யார் மணிகட்டுவது’ என்பதை ’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும் ’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும் ’யாராலும் கட்டிவிடமுடியாது’ என்றும் பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பூனை _     இரவுபகல் பாராது விரும்பிய நேரமெல்லாம் பாய்ந்து பிடுங்கி பற்களால் பெருங்கூர் வளைநகங்களால் பிய்த்தும் பிறாண்டியும் தானியங்கள் நிறைந்திருக்கும் கோணிப்பைகள் பால் பாக்கெட்டுகள் அந்த அறையில் சலவை செய்யப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் புதுத்துணிமணிகள் பார்த்துப் பார்த்து கவனமாய் எழுதிய கவிதைகள் கணக்குவழக்குகள் பத்திரப்படுத்திய […]

திக்குத் தெரியாத காட்டில்…..

This entry is part 9 of 15 in the series 3 ஜூன் 2018

          (லதா ராமகிருஷ்ணன்)   நான்கைந்து வருடங்களுக்கு முன் அந்த உண்மையைச் சொன்னவரை ‘நல்ல பாம்பு அடித்துப்போடவேண்டும் என்று சீறிப் படமெடுத்தாடியவர் இன்று அதையே உலகெங்கும் முதன் முதலாய் தன் உள்ளம் மட்டுமே உணர்ந்ததொரு பேருண்மையாய் உச்சஸ்தாயியில் முழங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்பது இதுவல்லவே என்று அரற்றிய பாரதியாரின் ஆவியை வாணி-ராணி ராதிகாவின் மெகாத்தொடர் அடியாள் பேயோட்டியின் உதவியோடு விரட்டிவிட்டதைப் பார்த்து வெலவெலத்துப் போன நிஜப்பாம்பு நந்தினி நாகினியாக […]

நானொரு முட்டாளுங்க…..

This entry is part 10 of 15 in the series 3 ஜூன் 2018

(லதா ராமகிருஷ்ணன்)   யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில் சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும் வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல் பலநேரமும்…….   மக்கள் என்று முழங்கி அரியணை ஏறுபவர்களில் தம் மக்கள் முன்னேற்றத்தை முதலாகக் கொள்பவரே அதிகம் என்றால் புள்ளிவிவரங்களைக் கொண்டுவா என்பவர்கள் தமிழ்நாடே எதிர்ப்பதாகவும் ஆதரிப்பதாகவும்தான் திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள். . விரும்பும்வகையில் வாக்கியங்களை வெட்டித்தட்டி இட்டுகட்டிச் செய்யப்படும் ’எடிட்டிங்’ வேலைகளில் எகிறும் ’டிஆர்பி’ ரேட்டிங்குகள்.   அது பொய்யில்லையா என்றால் வாய்மை எனப்படுவது […]