மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீ ரோடு இருந்த யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ ? என்ன தந்திரம் செய்து மீண்டும் இழுத்து வரப் போகிறாய் இப்போது உன் வழிக்கு ? இந்த இனிய தேன் இரவில் பூத்துப் பொங்கும் பூங்காவில் போகுல் மரத்தடி நறுமண அசைவில் புகுந்தவன் அவனா உன் மனதில் ? அந்தோ ! ஓர் வசந்த இரவினிலே நம் இதயங்கள் கலந்து பற்றிக் கொண்டன. பத்துத் […]
மார்ச்’12 – ‘அம்ருதா’ இதழில், திரு.பாவண்ணன், சமீபத்தில் மறைந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரும், நடிகருமான திரு.தி.சு.சதாசிவம் அவர்களைப் பற்றி உருக்கமாக எழுதியிருந்த கட்டுரையைப் படித்ததும் எனக்கும் அவரோடான சந்திப்புகள் நினைவுக்கு வந்து மனம் கனத்தது. கடந்த ஒரு வாரமாக அநேகமாக எல்லா இலக்கிய இதழ்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளன. அவரைச் சந்திக்கும் முன்னராகவே, பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது மொழி பெயர்ப்பு நாவல்கள் இரண்டினைப் படித்து அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உருவாகி இருந்தது. பிரபல கன்னட […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> யாத்ரிகர்களை வழியனுப்பி வைத்துவிட்டு திருமதி திரிஃபீல்ட் எங்களிடம் வந்தபோது அவள் கையில் சிறு பெட்டி. ”அருமையான இளைஞர்கள்…” என்றாள் அவள். ”நம்ம இளைஞர்களும் அமெரிக்காவில் போல அத்தனை ஈர்ப்பும் ஈடுபாடும் இலக்கியத்தில் வெச்சிக்கிட்டா நல்லாருக்கும். எட்வர்டின் கடைசி காலத்தில் எடுத்த ஒரு படம் அவர்களுக்குத் தந்தேன். அவர்கள் என்னுடைய படம் ஒண்ணும் கேட்டார்கள். கையெழுத்திட்டுக் குடுத்தேன்.” பிறகு பெருந்தன்மையுடன் ராய் பக்கம் திரும்பினாள். ”உங்களைப் பத்தி நல்லாச் சொன்னாங்க […]
அது மழைக்காலம். ஏதோ ஒரு ஊரில் ஒரு சமயம் ஒரு பிராமணனிடம் நான் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவனும் கொடுத்தான். அங்கே எனது அறச்செய்கைகளில் ஈடுபட்டவாறு நான் காலம் கழித்து வந்தேன். ஒருநாள் விடியற்காலையில் நான் விழித்துக்கொண்டேன். பிராமணனும் அவன் மனைவியும் தர்க்கம் புரிந்துக் கொண்டிருந்தார்கள். அதைக் காது கொடுத்துக் கேட்டவாறு இருந்தேன். பிராமணன் சொன்னான்: ‘’அன்பே, நாளைக் காலையில் தட்சிணாயன சங்கராந்தி வருகிறது. மிகவும் லாபகரமானதாக இருக்கும். எனவே வேறொரு கிராமத்துக்குப் போய் நான் வீட்டுக்கு […]
பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் ஒற்றை விருப்பச் சொடுக்காக புன்னகைக்கலாமா? பல்….? தலையசைப்பு சம்மதமாகவா ?மறுப்பாகவா? மையமாகவா? கண் பணித்துவிடுமோ… சீரான சுவாசத்தோடு வெற்றுப்பார்வை தோதாகுமா? பெருமிதம்?கூச்சம்? ”எவ்வளவோ பாத்துட்டோம்..? இதற்குத் தானே ஆசைப்பட்டாய்….? எது பொருந்தும்….? அவசரமாய் ஒரு கண்ணாடி , அல்லது ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை! -உமாமோகன்
தொடர்பறுதல் ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து மாடியில் படுத்தபோது தென்பட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும் விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு எனை விட்டுத் தொடர்பறுந்துப் போனவர்கள் போல.. ஒன்றாய்ப் படித்து, சுற்றிய நண்பர்கள் … நெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள் பக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள் நெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள் இலக்கியம் பேசி உணர்ச்சி வசப் பட்டவர்கள் … பலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு.. முகநூலிலும், ஆர்குட்டிலும் தேடித் தேடி அலுத்தப் பின்பும் அழிபடாமல் மனதுள் […]
பிப்ரவரி மாதம் என்றால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். சுண்டுவிரல் மாதம் என்று கொஞ்சுவான் என் தம்பி ராஜா. லீப் வருஷ பிப்ரவரியின் இருபத்து ஒன்பதாம் தேதியை ஆறாவது விரல் என்பான். அப்பாவுக்கும்கூட பிப்ரவரி மகிழ்ச்சி தரக்கூடிய மாதமாகத்தான் இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் குறைவாக வேலை செய்தாலும் முழுமாசச் சம்பளமே கிடைத்துவிடுவதோடு இரண்டு மூன்று நாட்கள் முன்னாலேயே சம்பளம் வந்துவிடுவதில் கவர்ண்மெண்டை ஏமாற்றிவிட்ட திருப்தி அவருக்கு இருக்கும். ஆனாலும் லீப் வருஷம் பிப்ரவரி இருபத்தி ஒன்பதாம் தேதி வேலைக்குப் […]
1916 டிசம்பர் 31 நள வருஷம் மார்கழி 17 ஞாயிறு பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஐயர் மற்றும் அவருடைய பாரியாள் மாதுஸ்ரீ கோமதி அம்மாள் இவர்களின் மேலான பார்வைக்கு வேண்டி, க்ஷெயார்களின் புத்ரன் மகாலிங்கய்யன் எழுதுகிற லிகிதம் இது. லண்டன் மகாபட்டணத்தில் ஏற்படுத்திய பெண்டல்வில் ஜெயிலில் இருந்து எழுதுகிறேன். என்னைப் பெற்றவளே, எனக்கு எல்லாமுமான தகப்பனாரே. இந்தப் பரிதாபமான சிசு சகல அசுத்தத்தோடும், உடம்பு நோக்காட்டோடும், மனசு பேதலித்தும் உங்கள் ரெண்டு பேரையும் ஆயிரம் தடவை தண்டனிட்டு கிழக்கு […]
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். கற்பனைக் காட்சிகளில் தோய்ந்த மனத்தைத் திருப்ப என்னிடமிருக்கும் சேமிப்புக் குவியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சில புகைப் படங்கள் கீழே விழுந்தன. அவைகளைக் கையிலெடுக்கவும் முதல் புகைப்படமே என்னை மீண்டும் நினைவுக் குழியில் தள்ளிவிட்டது. கலைவாணர் அரங்கில் செங்கை மாவட்ட மகளிர் மாநாடு நடந்தது. அந்த நிறைவு விழாப் புகைப் படங்களில் ஒன்றுதான் அது. முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார். சமூக நலத்துறை […]