புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி =================================================ருத்ரா மயிலே மயிலே இறகு போடு என்று கேட்க அவன் அங்கே போகவில்லை.குயிலே குயிலே உன் கொஞ்சும் குரல் காட்டு என்று தான் அந்த காட்டுக்குச் சென்றான் அவன்.அந்த “பல குரல்” மங்கையோ அவனை படுத்தியபாடு இருக்கிறதே! அம்மம்ம! இதோ படியுங்கள். புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி ==================================================ருத்ரா கொடு சினை வேங்கை நுண்தாது தூஉய் மடிஅவிழ் கல்முனை கதிர் கொடு விழிப்ப இரவின் நெடுங்குறி […]
– நாகரத்தினம் கிருஷ்ணா அம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த பிரெஞ்சுப் பெண்மணி; இன்னொருபக்கம் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட, பிரெஞ்சு மொழியிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கும் தமிழன். மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொண்டது அம்பை சிறுகதைகள். ஒரு படைப்பாளியுமாகவும் இருப்பதால், அம்பை சிறுகதைகளை நன்கு உள்வாங்கிக்கொண்டு, மொழிபெயர்ப்புக்கென்று வகுத்துக்கொண்ட […]
ருத்ரா ஒன்று நைந்த சிறகை ஆட்டி அழகு பார்த்துக்கொண்டது. இன்னொன்று அலகை ஆற அமர கூர் தீட்டி தினவை தீர்த்துக்கொண்டது. ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அப்படி பார்த்ததே போதும் என்று தாகம் தீர்த்துக்கொண்டது. ஒன்று சிற்றலகு பிளந்து உள்ளே செந்தளிர் போல் நா அசைய இனிய ஒலியை ஜாங்கிரி ஜாங்கிரியாய் பிழிந்து காடு கரையெல்லாம் இனிப்பு.. இன்னொன்று வண்ண வண்ணக்கொண்டையை சிலுப்பி எதிரே ஏதோ ஒரு மரம் இருப்பதாய் கொத்தி கொத்தி துளையிட்டது வெறும் காற்றுப்படலத்தை. […]
வையவன் ஆராவமுதனின் ஆஸ்பத்திரித் தவம் போன வாரமே முடிந்து விட்டது. மயோ கார்டியல் இஸ்கீமியாவில் அவன் மனைவி மல்லிகா ஆறாம் நெம்பர் வார்டில் காலமானது, போன வெள்ளிக்கிழமை. இன்றோடு எட்டு நாள். இனிமேல் அவனுக்கு விடுதலைதான் இந்த ஆஸ்பத்திரியிலிருந்து. இப்படி நிவேதிதா எண்ணியது பிழையாயிற்று. விஸிட்டர்ஸ் பெஞ்சில் அவன் உட்கார்ந்திருந்தான். பேஷண்ட்ஸ் ரிஜிஸ்டர் எழுதிக் கொண்டிருந்த நர்ஸ் நிவேதிதா ஒருமுறை நிமிர்ந்தபோது அதை மனசில் குறித்துக் கொண்டாள். அவன் திரும்பவும் வந்திருக்கிறான். என்ன விஷயம்? இன்னொரு பேஷண்டின் […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறக்க வில்லை ! ஆதி அந்த மில்லா அகிலம் பற்றி ஓதி வருகிறார் இன்று ! கர்ப்ப மில்லை கரு ஒன்றில்லாமல் பிரபஞ்சம் உருவாகுமா வெறுஞ் சூனியத்தி லிருந்து ? புள்ளியாய் முதலில் திணிவு இருந்தது பொய்யானது ! கருவை உருவாக்க எரிசக்தி எப்படித் தோன்றியது ? உள் வெடிப்பு தூண்டியதா புற வெடிப்பை ? பிரபஞ்சத் துக்கு […]