Dear Rajaram This is to inform Thinnai readers that my English rendering of Thirukkural in rhyming couplets has been released by Cyberwit.net Publishers of Allahabad. Thanks.
நார்த்தா குறிச்சியில் லைஃப்பாய் சோப்பு போட்டுக் குளித்துக் கொண்டிருந்தவர்கள், நந்திசேரியில் ரின் சோப்பு போட்டு குளித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று லக்ஸ் சோப்பு போட்டு குளிக்கிறார்கள் என்றால் அதற்கு ஷாப்புக்கடை ஓனர் சேதுராஜன் தாத்தாதான் காரணம். ஆம் ஐஸ்வர்யாராய் தேய்த்துக்குளித்த அதே லக்ஸ் சோப்பு. அபிராமத்தில் உள்ள லக்ஸ் சோப்பு ஷாப்புக்கடை என்றால் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு எல்லாம் நன்கு பரிச்சயம். இராமநாதபுரம் மாவட்டம், கமுதிக்கு அருகில் அமைந்துள்ள ஷாப்புக்கடையின் புகழ் , இந்த அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் […]
( Ischaemic Heart Disease ) இதயக் குருதிக் குறைவு நோய் என்பதை ஆங்கிலத்தில் Ischaemic Heart Disease என்று அழைப்பதுண்டு. இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் காரணமாக உண்டாகும் இதயநோய் இது எனலாம். இதுவே முற்றிலும் இரத்த ஓட்டம் இல்லாமல் அடைப்பு உண்டானால் மாரடைப்பு என்கிறோம். ஆகவே இதை மாரடைப்பின் முன்னோடி எனலாம். மாரடைப்பு வரலாம் என்ற எச்சரிப்பு என்றுகூடக் கூறலாம். இதுபோன்ற இருதய நோயால்தான் உலகில் அதிகமானோர் […]
முனைவர் க.துரையரசன் தேர்வு நெறியாளர் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம் – 612 002. முன்னுரை: தொல்காப்பியம் எழுத்துக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூலன்று. அது வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும் நூலாகும். தமிழின் பிற இலக்கண நூல்களிலிருந்து மட்டுமல்லாது பிற மொழி இலக்கண நூல்களிலிருந்தும் இது வேறுபட்டும் மாறுபட்டும் உயர்ந்தும் நிற்பதற்கும் இதுவே மிகப்பெரிய காரணமாகும். இத்தகுப் பெருமை மிகு தொல்காப்பியத்தின் மூன்றாம் அதிகாரமானப் பொருளதிகாரத்தின் முதல் இயல் அகத்திணையியல். இவ்வியலில் காணலாகும் தமிழர்களின் […]
வளவ. துரையன் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் பாடிய “சீரங்க நாயகியார் ஊசல்” எனும் நூலின் முதல் பாடல் சீரங்க நாயகிப் பிராட்டியை இந்த நிலவுலக மக்கள் சிறப்புடன் வாழ அருள் செய்யும் வண்ணம் ஊசல் ஆடுவீராக என்று வேண்டுகிறது. ”தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய” என்று ஆண்டாள் நாச்சியார் பாடியதுபோல் இப்பாடலும் அடியவர் நலத்தையே எண்ணுகிறது. ”நீராழி நிறத்த ரங்கர் அடிகள் வாழ நெடுமகுடப் பணிவாழக் கருடன் வாழப் பேராழி செலுத்திய சேனையர்கோன் […]
இலக்கியா தேன்மொழி கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து. வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது. சுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது. பலர் தங்களது வாகனங்களில் தங்களை நிறைத்துக்கொண்டு பார்க்கை விட்டு போய்க்கொண்டிருந்தனர். கிரிஜா வினய்யின் எண்ணை தேர்வு செய்து அழைத்தாள். ‘ஹலோ’ ‘ஹேய் வினய்..பக்கி.. இன்னிக்கு வேணாம்ன்னு சொன்னேன்.. கேட்டியா? இப்போ பாரு மழை வரப்போகுது.. […]
“கவிதை அப்பா” தொகுப்பின் படைப்பாளீ செல்மா, கவிஞர் மீராவின் மகள் என்ற ஒரு வரி அறிமுகமே போதுமானது. கவிதை நூலின் எல்லா பக்கங்களும் ‘அப்பா” என்ற தலைப்பின் கீழ் வருகின்றன. எனவே இதை அப்பா பற்றிய குறுங்காவியம் எனலாம். செல்மாவின் கவிதைகள் எளீயவை; நேர்படப் பேசுபவை.” எனக்குக்/ கவிதை எழுதத் தெரியாது/ உங்களை மாதிரி ” என்று செல்மா சொன்னாலும் இறகின் எடையற்ற எடையாய் ஒரு மெல்லிய உயிர்ப்புள்ளி இருப்பதை யாரும் உணரலாம். வல்லினம் என்று […]