வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் அறிவாலும் நிகழும் ஒரு துறை. செயற்கை நுண்ணறிவு இந்தத் துறையில் இன்று அதிகம் தாக்கம் இல்லாதது போலத் தோன்றினாலும், AI –யின் தாக்கம் அதிகமாகத் தெரியப் போகும் ஒரு துறை சட்டத் துறை. எதிர்காலத்தில், தீர்ப்புகளை ரோபோக்கள் வழங்குமா? வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் போய் விடுவார்களா? சட்ட உதவியாளர்களின் கதி என்ன? காகிதத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தத் துறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திருப்பிப் போடுமா? மக்களுக்கு தீர்வுகள் இன்றை விட சீக்கிரம் […]
2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை குறிவைத்து நடத்தப்பட்ட ஊடகப்போரில் முதலில் உபயோகிக்கப்பட்ட வார்த்தை ”காவி பயங்கரவாதம்”. இந்த வார்த்தையை பிரவீண் சுவாமி என்ற பத்திரிக்கையாளர் தி இந்து பத்திரிக்கை நடத்தும் பிரண்ட்லைன் என்ற பத்திரிக்கையில் உபயோகித்தார் என்று விக்கி சொல்லுகிறது. உண்மையா என்று தேடிப்பார்த்தேன். இணையத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை. விக்கி இணையப்பக்கம். https://en.wikipedia.org/wiki/Saffron_terror (விக்கி இணையப்பக்கத்தை நான் மிகப்பெரிய ஆதாரமாக எடுத்துகொள்ளவில்லை. ஆனால் செய்தி தொகுப்பாக எடுத்துகொள்கிறேன்) 2008இல் மலேகான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் அதில் சம்பந்தப்பட்டவர்களாக சில […]
நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். கேட்டு நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய் நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர். நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர். சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். இன்னொருவர் ‘நாலு வரி’ என்றெழுதி பூர்த்திசெய்தார் கவிதையை.
வே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை, அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன், காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்ள, பனிமழை பொழியும் மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு பள்ளியின் இயற்கையின் அழகை இரசித்தவாறு நடந்து செல்லும் அவர், அன்று அவ்வாறு செய்யாமல் நேராக தமது அறைக்குச் சென்று கணினியின் முன் அமர்கிறார். ஏதோ முக்கியத் தகவலைத் தேடும் பணியில் மூழ்குவது தெரிகிறது.அவரின் முகத்தில் […]
அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் பெற்றிருக்கும் நல்லவரை வல்லவரை வெல்லத் துடிக்கும் குறியீட்டளவிலான சித்திரக்குள்ளனை அசலோ அசல் அல்லது ‘ஸர்ரியலிஸ’ ’மாஜிகல் ரியலிஸ’ வீரபராக்கிரமசாலியாக ஆளாளுக்கு உருவேற்றிக்கொண்டிருந்தார்கள் ஆயிரம் hidden agendaக்களோடு அவரிவர். கேட்டுக் கேட்டுத் தன்னை யதுவாகவே நம்பத்தொடங்கிவிட்ட சித்திரக்குள்ளன் வேகமாய் ஓடிவந்து முன்னவரின் விசுவரூபத்தை முழங்காலில் முட்ட _ முணுக்கென்று கொசு கடித்ததாய் நினைத்து அந்த மனிதரின் கை தட்டிவிட _ ரத்தம் சொட்டத் தொடங்கியது சித்திரக்குள்ளன் மண்டையிலிருந்து. சண்டையிட்டதில் உமக்குக் கிடைத்த […]
“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல. வாருங்கள், சற்று அகல்விரிவாகப் பேசுவோம்” ”பகலிரவாய் அதைப்பற்றிப் பேச நான் என்ன உன்னைப் போல் வேலையில்லாத உதவாக்கரையா? அரைகுறை அறிவைக் கொண்டு என்னிடம் கட்டம்கட்டி விளையாடப் பார்க்கவேண்டாம். ஆயிரம் சொன்னாலும் அது தோல்வியடைந்த திட்டம்தான்” ”அப்படியல்ல வாருங்கள், அதன் முக்கிய அம்சங்கள், விளைவுகளைப் பற்றி சற்று அகல்விரிவாகப் பேசுவோம்” ”அட, வெட்டு ஒன்று துண்டு இரண்டு. வீணுக்கு ஏன் வளவளாப் பேச்சு அது நாசகாரவேலைதான். நாக்குமேல பல்லப் போட்டு நீ இல்லையென்றால் […]
Moon is Shrinking due to cooling of the Core +++++++++++++++++++சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++1. https://youtu.be/36xRVZDoJy02. http://time.com/5588711/nasa-shrinking-moon-moonquakes/3. https://twitter.com/i/status/11279605732772782084. https://youtu.be/ET7_Os3W_LA++++++++++++++++++++ மாறிடும் நிலவால் மாறிடும் பூமி. ஆறிப்போய்ச் சுருங்கிடும் நிலவு உட்கரு உஷ்ணம் குளிர்ந்து. நொறுங்கிடும் மேல் தளம். குலுங்கிடும் நில நடுக்கம் நேர்ந்து. சுருங்கும் நிலவை ஈர்ப்பு விசை உருட்டி உண்டை யாக்கும். ஒருதட்டு குதிரை ஏற மறு தட்டு தலை குனியும் தளப் பிறழ்ச்சியால் !.. ஊர்ந்திடும் நிலவு பூமியையை விட்டு விலகிச் செல்லும் […]
ஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை இதயம் முழுக்கத் தளும்பத தளும்ப நிரம்பி வழியும் உனது நினைவுகள்… போதாதா இவை எனக்கு மீதி வாழ்வு வாழ்வதற்கு… – ஆதியோகி
புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு புதிதுமுளைகள் புதிது பூக்கள் புதிதுபுணர்வுகள் புதிது உதயம் புதிதுஉணர்வுகள் புதிது மழை புதிதுமௌனம் புதிது ஊடல் புதிதுகூடல் புதிது காதல் புதிதுகாமம் புதிது உயிர் புதிதுஉறவுகள் புதிது சிந்தனை புதிதுசித்திரம் புதிது அருவி புதிதுஅலைகள் புதிது தென்றல் புதிதுதெம்மாங்கு புதிது இந்த நொடியில் இதயம்துடிப்பது புதிதுஇரத்தம் துளிர்ப்பதும் புதிது தோற்றங்கள்புதிதானதால்…… தொடக்கங்களும்புதிது!புதிது!!புதிது!!! அமீதாம்மாள்
மஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும் குறைத்துச் சொல்ல வேண்டாம் அதிகம் சொல்லிக்கொள்வது ஆபத்து என்றும் நினைத்து விட வேண்டாம் அதிகம் சொல்லிக்கொள்ளும் போது குறைவாக உதடசையுங்கள் உதடுகள் இணைப்பது சொற்களை உங்களையும் என்னையும் அல்ல உதடுகள் பிரியும் போது தெறித்து விழும் சொற்களின் மீது தான் அதிக கவனம் வைத்து விடுகிறார்கள் எதிரே இருப்பவர்கள் அவர்களுக்கும் இருக்கின்றன உதடுகள் இருக்கிய உதடுகளை அவர்கள் பிரிக்க கூடும் முக மூடிகளை கழற்றி வீசி எறியக்கூடும் பதிலுக்கு காத்திருக்கின்றன உங்கள் […]