நீங்காத நினைவுகள் – 44

ஜோதிர்லதா கிரிஜா சில ஆண்டுகளுக்கு முன்னால், பிரபல எழுத்தாளரும் (தற்போது ஓய்வு பெற்றுள்ள) அன்றைத் தமிழகக் காவல்துறை உயர் அலுவலருமான ஒருவர் போரில் வெற்றி பெறும் ராணுவத்தினர் தோற்ற நாட்டின் பெண்களை வன்னுகர்வு செய்வது பற்றித் தமிழகத்தின் வார இதழ் ஒன்றில்…

சுயத்தைத்தேடி ஒரு சுமூகப்பயணம்.

நாகபிரகாஷ் டேவிட் ஜி மேயர்ஸ் என்ற சமூக உளவியல் அறிஞர் தன்னுடைய மனித இனத்தின் மகிழ்ச்சியைப்பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைத் தொகுப்பின் உபதலைப்புக்கான தேடலைப்பற்றி ஒரு இதழில் குறிப்பிட்டிருந்தார் “மனிதர்களை எவை மகிழ்விக்கிறது? - என்பதை பயன்படுத்தலாமா என்று ஆசிரியர் கேட்டார். ஆனால் அது…

சீன காதல் கதைகள் -2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்

2. பட்டாம்பூச்சிக் காதலர்கள் ஜெஜியாங் மாநிலத்தின் சாங்யூ நகரம். அந்நகரத்தின் செல்வந்தர்களில் ஒருவர் சூ. சூ குடும்பத்தினர் நகரின் முக்கிய பிரமுகர்களுக்கு பரிச்சியமான குடும்பமும் கூட. சூ யிங்தாய் அக்குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தை. குடும்பத்தின் ஒரே பெண் குழந்தை. அவள் மிகவும்…

திரை ஓசை வாயை மூடி பேசவும்

சிறகு இரவிச்சந்திரன் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மானின் தமிழ் திரைப் பிரவேசமாக அமைந்துள்ள படம். கா.சொ.எ. வெற்றிக்குப் பின், பாலாஜி மோகன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இயக்கிய ‘ வாயை மூடி பேசவும்’ அதிக…
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)  -2

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) -2

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 2​ மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்

அது அந்த காலம்..

அம்பல் முருகன் சுப்பராயன் சிறுவயதில் சளி, காய்ச்சல் வந்தால் எங்களூர் மருத்துவர் காசாம்பு எழதி தரும் அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, பனங்கல்கண்டு, ஆடாதொடா இலை, துளசி, சித்தரத்தை, தேன், கருப்பட்டி ஆகியன வாங்கி வருவார் அப்பா.. கியாழம் செய்து கொடுப்பார்…

பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்

நழுவிப் போனவைகள்                         அரைத் தூக்க இரவில் தானாய்த் தவழ்ந்து கருத்தும்,கோர்வையுமாய் வார்த்தைகள் பிசகற்று உதித்து வரும் ஒரு கவிதை எழுந்தெழுதும் சோம்பலினால் மறக்காதென்ற நம்பிக்கையில் தூக்கத்துள் புதையுண்டு காலையில் யோசித்தால் ஒரு வார்த்தை கூட நினைவின்றி தவறி நழுவி எனைவிட்டுப் போயிருக்கும் என் கவிதை அக்கவிதை பிறிதொருநாள் வெளிவந்து விழுந்திருக்கும் அதில்  வேறெவரோப் பெயரிருக்கும்..  கிளிமரம்  …

வேள்வி

கணேஷ் . க     மிகுந்தமனவருத்தம், தேவியுடன்சண்டை, கோபம்கொண்டுசீக்கிரமேஅலுவலகம்விட்டுவீட்டுக்குபோய்விட்டாள், சண்டைகள்இப்போதெல்லாம்  சகஜம்ஆகிவிட்டிருந்தது, போகும்வழியில்போன்செய்யவில்லை, நான்அனுப்பியகுருஞ்செய்திகளுக்குமட்டும்விடைவந்துசேர்ந்தது, எப்படியும்போனில்அழைப்பால்என்றுதெரியும், இதைநம்பிக்கைஎன்றுகொள்வதா?, இல்லை, வேறுஏதோஒருதிமுருஎனக்குள்என்றேபட்டது, நான்அழைப்பேன்என்றுஎதிபார்திருப்பாள், நான்அழைக்கவில்லையே, சண்டைக்கு காரணம் நான் இல்லை என்றேபெரும்பாலும்நம்புவேன். இந்தநம்பிக்கையும்இன்னொருசண்டைக்குவித்திடும்என்றுஎண்ணிசிலசமயம்நானேஅழைத்துசண்டையைவளர்த்தகதைகளும்உண்டு. அதுஒருபக்கம்இருக்கட்டும், ஏன்சண்டைவருகிறதுஎன்றுஆராய்ந்தால்ஒன்றும்பெரிதாய்தோன்றாது, வெறும்சிகரெட்டுக்கு ஆகும்செலவுதான்மிச்சம். ஆகசண்டையில்தான்என்காதல்வாழ்க்கைபயணிக்கிறது, இந்தஉறவுஒத்துவராது,…

தினம் என் பயணங்கள் -15 நமது சுதந்திர நாடு

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   கண்விழிக்கச் சோம்பல் பட்டேன். “மம்மி எழுந்துரு, மம்மி எழுந்துரு” என்று இரு முறை அழைத்தாள் மகள் அருள்மொழி. இரு முறைதான் அழைத்ததாக நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த இரு அழைப்புதான் என்னை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். முன்பு வசித்த வீட்டை…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் அடுத்து எப்போது  திசை மாறப் போகின்றன ?

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பூமியின் காந்த துருவங்கள் புதிராய்த் திசை மாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவ மாகும் ! பூமியின் சுழற்சி நின்று எதிர்த்  திசையில் ஓடுமா ? பரிதியின்…