சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/SoXzxmVdrE0 https://youtu.be/MDb3UZPoTpc https://youtu.be/og67Xe5quEY http://www.cnbc.com/2015/09/28/ter-nasa.html http://www.msn.com/en-us/video/news/analysis-finding-water-on-mars/vi-AAeUdaw http://www.cbsnews.com/videos/mars-findings-what-to-expect/ செவ்வாய்த் தளத்திலே செம்மண் தூசிக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்” என்னும் பனித்தளம் மீது முக்காலி ஃபீனிக்ஸ் தளவுளவி உட்கார்ந்து உளவுகிறது ! கோடான கோடி ஆண்டுக்கு முன் ஓடிய ஆற்று வெள்ளத்தின் நாடி நரம்புகள், தடங்கள் தெரியுது ! வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம் உள்ளதை மலைச் சரிவுகளில் கண்டது செவ்வாய்த் […]
அயான் ஹிர்ஸி அலி இஸ்லாமிய பயங்கரவாதம் அமெரிக்க மற்றும் மேற்குலகின் முன்னணி சிந்தனைக்கு கொண்டு வந்த 9/11 நடந்து, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் “உலக பயங்கரவாதத்தின் மீதான போரை” துவங்கி, 14 வருடங்களுக்கு பிறகு, இஸ்லாமின் வன்முறைவாத பிரிவு இன்று புற்றுநோய் போல பரவியிருக்கிறது. ஈராக், சிரியாவின் பல பகுதிகள் இன்று ”இஸ்லாமிய அரசு”வின் கீழ் வந்துள்ளன. லிபியாவும் சோமாலியாவும் அராஜகத்தின் கீழ் சென்றுள்ளன. யேமன் உள்நாட்டு போரால் சிதிலமடைந்திருக்கிறது. தாலிபான் மீண்டும் ஆப்கானிஸ்தானத்தில் […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா அதிபர் – இதழாசிரியர் – இலக்கியப்படைப்பாளி “யாழ்வாசி “ விடைபெற்றார் தீபாவளி வாழ்த்து அழைப்புகள் வந்தவண்ணம் துயில் எழுப்பியபொழுது மீண்டும் ஒரு அழைப்பு. ஆனால், துயரமான செய்தியுடன் …!! நண்பரும் வீரகேசரியில் முன்னர் பணியாற்றியவரும் எழுத்தாளர் அருண். விஜயராணியின் மருமகனுமான ஊடகவியலாளர் தெய்வீகன் மறுமுனையில். சிற்பியின் மறைவுச்செய்தி சொல்லி துயரம் பகிர்ந்துகொண்டார். இந்தப்பதிவிற்காக சிற்பியின் ஒளிப்படம் தேடியபொழுது அவரும் இலக்கிய நண்பர் கே.எஸ்.சுதாகரனும் உதவினர். ஒருவரின் மறைவின்பொழுதுதான் மறைந்தவர் பற்றி ஆழமாக […]
நித்ய சைதன்யா 1.சுடர் தவித்தலையும் பிரார்த்தனை யாளிகள் விளிக்கும் பிரகாரத்தில் நிச்சலனம் கொண்டமர்ந்தது புறாக்களின் சிறகடிப்பில் தேங்கிய மௌன நதியில் கல்லெறி நிகழ்த்திய வளையங்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் ரீங்கரித்தது சுதைச்சிற்பங்களில் ஒன்று உதடசைத்த சொல் குளுமை படிந்த கல்முற்றம் பசுங்கிளையென்றானது குழும்பித்திரியும் காகங்களுக்கு மணிகுலுங்கிய நாதத்தில் பதறி நின்றெரிகிற தீபச்சுடரில் சிற்றிடை தேவியின் விசுவரூபம் கைகூப்பிய என்முன்னால் கணத்தில் ஒளிர்ந்து மறைந்தது விழியசைந்த தேவியின் முகம் 2.கோட்டை வீடு அந்த வீடு உண்மையில் கோட்டை மாதிரி […]
சேயோன் யாழ்வேந்தன் அறை மாறி நுழைந்தபோது அவள் உடைமாற்றிக்கொண்டிருந்தாள் அறை மாறி விட்டதென்று மன்னிப்புக்கோரி திரும்ப எத்தனிக்கும்போது ‘இங்கு எல்லாமே மாறி இருக்கிறது என்னையும் மாற்றிவிட்டுப்போ ஏமாற்றாமல்’ என்றாள் அவள் மனம் மாறி விடுமுன் நான் மாறி விட்டேன். இப்போது இங்கே எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. seyonyazhvaendhan@gmail.com
எதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும் இலக்கியமும் அதன் பிறப்பு தொட்டு ‘புரியவில்லை’ என்ற சொல்லை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. இவற்றுள் திறனாய்வாளர்கள், கலை விமர்சகர்கள் அபூர்வாமானது, மெய் சிலிர்க்கவைப்பது, பிரம்மிக்க வைப்பது என புளகாங்கிதமடைகிற படைப்புகள் கூட இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயின […]
காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது வேறு வீடு இன்னொரு கோவில் பக்கத்து ஊர் புதுத் தெரு மாற்றி மாற்றி எங்கு போனாலும் அன்னத்தில் இருக்கும் பெயர் மாறவில்லை வளர்ந்து அவன் உழைத்து’ ஒரு நிலம் வாங்கினான் தானே விதைத்து பயிரிட்டு கண்காணித்து அறுவடை செய்தான் தீட்டிய அரிசியை சோதித்தான் அதில் பெயரில்லை […]
நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள் பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு […]
( 10 ) என்னம்மா சொல்றே நீ? ஒருத்தனுடைய பேச்சும் எழுத்தும் அவனுடைய காரெக்டருக்கு அளவுகோல்னு சொன்னா எப்படி? அதை என்னால ஏத்துக்க முடியலைம்மா… நிச்சயம் அப்படித்தாம்ப்பா…மனசிலே நாம எப்படி சிந்திக்கிறோமோ அதுதான் பேச்சிலும், செய்கையிலும் வெளிப்படுது…அதுதான் உண்மை… அப்படிச் சொல்ல முடியாதும்மா…மனம் ஆயிரம் நினைக்கும் ஆனால் அதில் தேவையில்லாததையெல்லாம் வடிகட்டி நல்லதைச் செய்யறாம்பாரு…அவன்தான் மனுஷன்…அதனாலே செய்கைதான் முக்கியம். எழுத்தும் பேச்சும் அவரோட செயல்தானேப்பா…அது சுத்தமா இருக்கணுமில்லியா? எழுத்து அவருடைய உறாபி…நாட் ய ப்ரொஃபெஷன். பேச்சு […]