FEATURED Posted on November 24, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப் புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை, வயிறைவிரைவில் சிதைக்கப் போகுது !கடல் மட்டம், வெப்பம் ஏறிகரைகள் மூழ்கப் போகுது !மெல்ல நோய்கள் பரவி, நம்மைக்கொல்லப் போகுது !நில்லா திந்த கலியுகப் போர் ! ++++++++++++++++ […]
கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் கர்ணனைத் தங்கள் தோழனாகத் தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர் வலது கை கொடுப்பதை இடது கை யறியாமல் தர விரும்புவதேயில்லை. ’கமர்கட்’ தானம் கொடுத்தாலும் அதைக் கணக்கற்ற காமராக்களின் ஒளிவெள்ளத்தில் வழங்குகிறார்கள். இல்லை, இருபத்திநாலாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கும் ஸ்மார்ட் ஃபோனில் துல்லியமாய் செல்ஃபியெடுத்துப் பதிவேற்றிவிடுகிறார்கள். குட்டு வெளிப்பட்டதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கொஞ்சமே கொஞ்ச காலம் அஞ்ஞாதவாசத்திலிருந்த கவிச்சக்கரவர்த்திகள் வாய்த்த சந்தர்ப்பத்தில் வெளிப்போந்து வாய்முத்துதிர்த்து விட்ட இடத்திலிருந்து […]
சார்லி ப்ரவுனும் சவடால் முழக்கங்களும் ஆயிரம் பவுண்டுகள் பந்தயம் என்றான் கார்ட்டூன் சிறுவன் சார்லி ப்ரவுன் அய்யோ என்று அதிர்ச்சியோடு வாய்பொத்திக்கொண்டாள் அவனுடைய அறிவாளித் தோழி. மில்லியன் பவுண்டுகள் என்று முழங்கினான் சார்லி ப்ரவுன். மிரண்டுபோன அவனுடைய அறிவாளித்தோழி வேண்டாம் வேண்டாம் – ஒரு பென்னி பந்தயம் என்றாள். பின்வாங்கியபடியே சார்லி ப்ரவுன் சொன்னான் – நான் பந்தயத்திற்கு வரவில்லை. ”ஏன்?” “ஒரு பென்னி என்பது உண்மையான பணமாயிற்றே!” *** ஊரும் பேரும் யாருமற்ற வனாந்திரத்தில் பாடிக்கொண்டிருக்கிறாயே […]
கு. அழகர்சாமி மலை மேல் குதிரை போக குதிரை மேல் நான் போக எனக்கு மேல் நிலா போக- எத்தனை காலம் எத்தனை பேர்களை எத்தனை முறை ஏற்றி இறக்கி குதிரை இதுவரை இப்போது இனியும்- ஏற்கனவே நிலவடைந்திருக்குமோ குதிரை கடந்த தொலைவு? நிலவெட்டியிருக்குமோ குதிரையின் கதி? குதிரையிலிருந்து கீழிறங்கும் போது சந்தேகம். நிலவிலிறங்கினேனா? குதிரைக்காரன் குதிரைக்கு தீனி போடுவான் – ஒரு பிடி புல். கு. அழகர்சாமி
‘வயது ஏற ஏற வயிறை மற ருசிகள் துற முடியும் இதுவெனில் விதியும் உனக்கு வேலைக்காரனே’ என்று சொற்பொழிவாளர் சொடுக்கிய மின்னலில் இடிகளாக கரவொலிகள் அந்தப் பேச்சாளருக்கு கொழுப்பு இனிப்பு அழுத்தம் என்று அத்தனையும் உண்டு பேச்சு முடிந்தது விருந்து அடுத்தது ஆடு,கோழி,மீன்,ஊடான் காடை,நண்டு என எல்லாமுமே அவர் துறக்க வேண்டிய ருசிகள் சட்டை உயர்த்தினார் இன்சுலின் இறக்கினார் அடித்து நொறுக்கி மென்று இறக்கினார் மிச்சம் ஏதுமின்றி அமீதாம்மாள்
தலைவன் எதற்காகச் சென்றானோ அந்த வினை முடித்துத் தேரில் திரும்பி வருகிறான். வலிமையான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் விரைவாகத்தான் செல்கிறது. இருந்தாலும் அவளைப் போய்ப் பார்க்கும் ஆசையால் அவன் தேர்ப்பாகனிடம் இன்னும் விரைவாகச் செலுத்துமாறு பணிக்கிறான். இப்படி அவன் தேர்ப்பாகனிடம் கூறும் பத்துப் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. வியங்கொள்ளுதல் என்பது தேரினைச் செலுத்தும் செயலிலிலே விரைவைக் கொள்ளுதல் என்னும் பொருளைத் தரும். ===================================================================================== 1.சாய்இறைப் பணைத்தோள், அவ்வரி அல்குல், சேயிழை மாதரை […]
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 23வது (2018) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது அளிக்கப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் (புனைவற்ற எழுத்து), எழுத்தாளர் பாவண்ணன் (புனைவெழுத்து), ஆகிய இருவரையும் எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு […]